தண்ணீர் பிரச்சினைகளை தீர்க்க திட்டமிடுபவர்களுக்கு ஓட்டு போடுங்கள் – ரஜினி அறிக்கை பாஜக அதிர்ச்சி
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ரஜினிகாந்த் தனது மக்கள் மன்றத்தின் 32 மாவட்டச் செயலாளர்களை சென்னையில் உள்ள தனது போயஸ் தோட்ட இல்லத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார்.
இந்தத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அனைவரது கருத்துக்களையும் கிட்டத்தட்ட 1 மணி நேரம் கேட்ட பிறகு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தமிழக சட்டமன்ற தேர்தல்தான் எங்களது இலக்கு.
நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அதனால் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படமோ மன்றத்தின் கொடியோ எந்தக் கட்சிக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காகவோ யாரும் பயன்படுத்தக் கூடாது. ரஜினி மன்றத்தின் கொடி, படம், பெயர் போன்றவற்றை எந்த கட்சிக்கும் ஆதரவாக பயன்படுத்த கூடாது.
தமிழகத...









