ராஜஸ்தான், தெலுங்கானாவில் பிரசாரம் ஓய்ந்தது… நாளை ஓட்டுப்பதிவு
2019 ஆண்டு நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 3 மாநிலங்களில் ஓட்டுப்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது.
ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 2 மாநிலங்களிலும் நாளை (7-ந் தேதி) ஓட்டுப்பதிவு நடக்கிறது.
200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபை தேர்தல், பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளுக்கும் முக்கியமானது. கடந்த 25 ஆண்டுகளாக அங்கு ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவதால், ஆட்சியை தக்க வைக்க பாரதீய ஜனதாவும், கைப்பற்றுவதற்கு காங்கிரசும் வரிந்து கட்டுகின்றன. இங்கு ராம்கார் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணம் அடைந்து விட்டதால் தேர்தல் ஒத்தி போடப்பட்டுள்ளது. 199 தொகுதிகளில் மட்டுமே நாளை ஓட...









