செவ்வாய்க்கிழமை, ஜூலை 7
Shadow

Author: Kodanki

‘மின்னல் வீரன்’ தயாரிப்பாளருடன் அதர்வா சமரசம்..!

‘மின்னல் வீரன்’ தயாரிப்பாளருடன் அதர்வா சமரசம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கும் படம் ‘மின்னல் வீரன்’. மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கும் இந்தப்படத்தில் அதர்வா கதாநாயகனாக ஒப்பந்தமாகி, படத்தின் வேலைகள் ஜரூராக நடைபெற்று வந்தன. இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன் அதர்வா தயாரித்து நடித்த ‘செம போத ஆகாத’ படம் வெளியானது. இந்தப்படம் ஒருகட்டத்தில் ரிலீஸுக்கு தயாராவதில் பொருளாதார ரீதியாக சிரமத்தை சந்தித்தபோது, இந்தப்படத்தை நல்லபடியாக வெளியிடுவதற்கு தனது எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் உதவிக்கரம் நீட்டினார் தயாரிப்பாளர் மதியழகன். ஆனால் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியன்று தன் பக்கம் உள்ள சில பிரச்சனைகளை அதர்வா சரிசெய்து படத்தை மதியழகனுக்கு ஒப்படைப்பதற்குள், முதல் இரண்டு காட்சிகள் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. அதனால் அந்தப்படத்தை விநியோகஸ்தர்களுக...
ஜெர்மனிக்கு பறந்த  அஜீத்…!

ஜெர்மனிக்கு பறந்த அஜீத்…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் அஜித் ஜெர்மனியில் ஹெலிகாப்டர் நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அஜித் நடித்துவரும் `விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தக்‌ஷா குழுவின் அடுத்த ட்ரோன் தொடர்பான திட்டத்தில் அதிக கவனம் செலுத்திவருகிறார்.முன்னதாக அஜித்தின் ஆலோசனையின் படி எம்.ஐ.டி மாணவர்கள் தயாரித்த ஆளில்லா விமானம் ஆஸ்திரேலியாவில் பரிசு பெற்றது இந்நிலையில் தற்போது அதே தக்‌ஷா குழுவின் அடுத்த திட்டம் தொடர்பாக ஜெர்மனி சென்றுள்ளார் அஜித். அங்கு வாரியோ ஹெலிகாப்டர் நிறுவனத்தின் முதல்வர் கிறிஸ்டென் ஸோட்னெர்வுடன் ஆலோசனை நடத்தினார். அந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. விஸ்வாசம் முடித்த கையோடு குடும்பத்தோடு கோவா சென்று திரும்பிய பின் ஜெர்மனிக்கு சென்றிருக்கிறார் அஜீத்.  ...
என் பாடலில் எனக்கு பங்கு இல்லையா? – ராயல்டி கோரிய இளையராஜா..!

என் பாடலில் எனக்கு பங்கு இல்லையா? – ராயல்டி கோரிய இளையராஜா..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களுக்கு காப்புரிமையை வலியுறுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- என் பாடல்களை பாடுவதற்கு முன்னர், என்னிடம் முன் அனுமதி பெற்று, அதற்குரிய வி‌ஷயங்களை முறைப்படி செய்துவிட்டு, அதன் பின் பாடுவதுதான் முறையானதாகும். இல்லையென்றால் சட்டப்படி குற்றமாகும். என்னிடம் முன் அனுமதி பெறாமல் பாடுகிறவர்களோ, இசை வாசிக்கிறவர்களோ அப்படிச் செய்வது தவறு என்பதை தாங்கள் உணர வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை ஐ.பி.ஆர்.எஸ்.(இந்திய படைப்பு காப்புரிமைக்கான அமைப்பு) யில் உறுப்பினராக இருந்தேன். நான் இப்போது உறுப்பினராக இல்லாத காரணத்தால் இதுவரை என் சார்பாக வசூலித்துக்கொண்டிருந்த ராயல்டி தொகையை வசூலிக்கும் உரிமையை நமது தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்துக்கு வழங்கி இருக்கிறேன். ஐ.பி.ஆர்.எஸ். அமைப்புக...
26 சர்வதேச விருதுகளை வென்ற டூ லெட் திரைப்படம்

26 சர்வதேச விருதுகளை வென்ற டூ லெட் திரைப்படம்

CINI NEWS, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  65-வது தேசிய விருது பட்டியலில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை ‘டூலெட்’ படம் வென்றது. இன்னும் திரைக்கு வராத இந்த படம் ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 26 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது. நமது ஊரில் வாடகை வீடு தேடி அலைவது பெரிய வி‌ஷயம். இதில் உள்ள சிக்கல்கள், சிரமங்கள் என்ன என்பதை யதார்த்தமாக சொல்வதே ‘டூலெட்’ படத்தின் கதை. படம் குறித்து நமது குடும்பத்தில் எத்தனையோ வி‌ஷயங்கள் நடக்கின்றன. இதை மற்ற நாட்டினரும் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளதை உள்ளபடியே திரைப்படமாக்கி இருப்பதாக இயக்குநர் செழியன் கூறினார். இந்தப்படத்தில் சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார் இணைந்து நடித்துள்ளனர். வரும் டிசம்பரிலோ அல்லது பொங்கலுக்கு பின்னரோ படத்தை தியேட்டர்களில் வெளியிட இருப்பதாக படக்க...
ஓட்டுக்காக பொய் பேசாதீர்கள் – மோடிக்கு சந்திரசேகரராவ் அட்வைஸ்

ஓட்டுக்காக பொய் பேசாதீர்கள் – மோடிக்கு சந்திரசேகரராவ் அட்வைஸ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  119 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பா.ஜ.க. தலைவர் அமித் ஷா  4  பிரசார கூட்டங்களில் பேசிச் சென்றுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது கட்டமாக இன்று பிரசார கூட்டங்களில் பேசி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் இங்கு முதல்கட்ட பிரசாரத்துக்கு வந்த பிரதமர் மோடி,  நிஜாமாபாத் நகரை லண்டன் நகர...
புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக நாகை வந்தடைந்தார் முதலமைச்சர் பழனிசாமி

புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக நாகை வந்தடைந்தார் முதலமைச்சர் பழனிசாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ‘கஜா’ புயலின் கோரத் தாண்டவத்தால் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 20-ந்தேதி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மோசமான வானிலை காரணமாக திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு செல்ல இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பயண திட்டம் திடீரென பாதியில் ரத்தானது. இதற்கிடையே ரத்து செய்யப்பட்ட புயல் சேத பகுதிகளை பார்வையிடும் எடப்பாடி பழனிசாமியின் பயண திட்டம் மீண்டும் வகுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் புயலால் சேதமடைந்த...
பாகிஸ்தானில் ரிலீஸ் ஆகும் ரஜினியின் 2.0

பாகிஸ்தானில் ரிலீஸ் ஆகும் ரஜினியின் 2.0

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
  பாகிஸ்தானில் ரிலீஸ் ஆகும் ரஜினியின் 2.0 ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் லைகா தயாரிக்கும் ரஜினியின் 2.0 படம் 29ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. தென்னிந்திய மொழி படங்களில் அதிலும் குறிப்பாக பாகிஸ்தானில் ரிலீஸ் ஆகும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை ரஜினியின் 2.0 பெற்றுள்ளது. இதற்கு முன்பு ரஜினி நடித்த முத்து படம் சீனாவில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டு பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது. அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மிக துல்லியமான இசையை கேட்க 4டி டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. படமும் 3டி தொழில்நுட்பத்தில் பார்க்க முடியும். இந்தியாவில் 10 திரையரங்குளில் மட்டுமே இப்போதைக்கு இந்த வசதி இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை இரண்டு திரையரங்குளில் மட்டுமே இந்த நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பல ஆயிரம் ஸ்கிரீன்களில் 2.0 ரில...
சினிமாவை வாழவைக்க நமக்குள் ஒற்றுமை அவசியம் – நடிகர் ஆரி ஆவேசம்

சினிமாவை வாழவைக்க நமக்குள் ஒற்றுமை அவசியம் – நடிகர் ஆரி ஆவேசம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
படத்தின் இசையமைப்பாளர் ரோஷன் ஜேக்கப் பேசுகையில், இப்படத்திற்காக முதலில் 2 பாடல்கள் தான் என்று முடிவு செய்தோம். பிறகுதான் 3 பாடல்களை சேர்த்து 5 பாடல்கள் இசையமைத்தோம். கிரிக்கெட், கபடி, மற்றும் காதல் என்று மூன்றும் சேர்ந்த கலவையாக இப்படம் இருக்கும். டூரிங் டாக்கீஸ் படத்தின் இயக்குனர் இஷாக் பேசுகையில், அபிலாஷ் எனக்கு சிறுவயது முதலே எதிரி. சிறுவயதில் நான் வீட்டிற்கு வரும் நேரத்தில் ‘மைடியர் பூதம்’ நெடுந்தொடர் ஓடிக்கொண்டிருக்கும். அத்தொடரில் ‘மூசா’ கதாபாத்திரத்தில் அபிலாஷ் நடித்திருப்பார். நான் சினிமாவிற்கு வந்தபிறகு நானும் அபிலாஷூம் ஒரே அறையில் தங்கியிருந்தோம். எனக்கு ஒரு நல்ல நண்பர். நான் இயக்கிய ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தில் அவரை வில்லனாக அறிமுகப்படுத்தினேன். ஆனால், ‘தோனி கபடி குழு’ படத்தில் அவர் கதாநாயனாக நடிக்கிறார். இப்படத்தை சம்பந்தபட்டவர்களைவிட நான்தான் அதிகமாக பார்த்திருக்கிறே...
மேதகு பிரபாகரனுக்கு பெருமை சேர்க்குமா சீறும்புலி!

மேதகு பிரபாகரனுக்கு பெருமை சேர்க்குமா சீறும்புலி!

HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  மேதகு பிரபாகரனுக்கு பெருமை சேர்க்குமா சீறும்புலி! #Prabhakaran #Vijay #GayathriRaghuram #Nayantara #Atlee https://youtu.be/bARAx1fdkgQ  
கின்னஸ் சாதனை புரிந்த பாடகர் வேல்முருகன் நடத்திய ஒயிலாட்டம்..!

கின்னஸ் சாதனை புரிந்த பாடகர் வேல்முருகன் நடத்திய ஒயிலாட்டம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  தமிழர்களின் ஒயிலாட்டம் கின்னஸில் இடம் பிடித்தது! தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான ஒயிலாட்டம் கின்னஸ் சாதனையில் நேற்று இடம்பிடித்துள்ளது. அதற்கான எட்டு நிமிட ஒயிலாட்ட நடனம் சென்னை அருகே உள்ள திருநின்றவூரில் ஜெயா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 1415 க்கும் மேற்பட்டவர்கள் ஆடினார்கள். இந்த சாதனைநிகழ்வினை நடத்த பின்னணி பாடகர் வேல்முருகனும் ஸ்வரங்களின் சங்கமம் அமைப்பினரும் ஜெயா கல்லூரி நிர்வாகமும் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த சாதனை நிகழ்வில் தமிழக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், இசையமைப்பாளர்கள் கங்கைஅமரன், ஜேம்ஸ்வசந்தன், கவிஞர் பிறைசூடன், நடிகர்கள் தம்பிராமையா, வேல்சிவா, பி.ஆர்.ஓ,யூனியன் தலைவர் விஜயமுரளி, கலாவேல்முருகன், சௌமியாராஜேஷ், கின்னஸ் குழு சார்பில் விவேக் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.  ...