செவ்வாய்க்கிழமை, ஜூலை 7
Shadow

Author: Kodanki

அரவிந்த்சாமி – ரெஜினா நடிக்கும் “கள்ளபார்ட்”

அரவிந்த்சாமி – ரெஜினா நடிக்கும் “கள்ளபார்ட்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் படம் "கள்ளபார்ட்" அரந்த்சாமி கரானாயகனாக நடிக்கிறார். கதா நாயகியாக ரெஜினா நடிக்கிறார்.  வில்லனாக் புதுமுகம் பார்த்தி நடிக்கிறார்..மற்றும் ஹரிஷ் பெராடி,ஆதேஷ் பாப்ரிகோஷ் ராட்சசன் புகழ் பேபி மோனிகா நடிக்கிறார்கள். திரைக்கதை , டைரக்‌ஷன்  -  P.ராஜபாண்டி. வித்தியாசமான கதைக் களம் கொண்ட கள்ள பார்ட் ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக ஏவி எம் ஸ்டூடியோவில் மிகப் பிரமாண்டமான மூன்று விதமான அரங்குகள் அமைக்கப்பட்டு 40நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படத்தின் முக்கியமான காட்சிகள் ஆக்‌ஷன் காட்சிகள் செண்டிமெண்ட் காட்சிகள் படமாக்கப் பட்டது. அரவிந்த் சாமி ரெஜினா  காட்சிகள் பெரும்பகுதி படமாக்கப் பட்டது. இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடை பெற உள்ளது  ...
கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் வழங்கினார்!

கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் வழங்கினார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
கஜா புயலில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் - லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர வேண்டுகோள். கஜா புயலால் பாதிக்கப்பட்ட நம் தமிழக மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்காக இன்று சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் “மாண்புமிகு” தமிழக முதல்வர் .எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சந்தித்து, எங்களின் "தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்" சார்பாக ரூபாய் 1 கோடி, கஜா புயல் நிவாரண நிதியாக வழங்கியுள்ளோம். மேலும் இத்தருணத்தில் நம் தமிழக மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். புயலால் துயரத்தில் ஆழ்ந்துள்ள நம் சகோதர, சகோதரிகளுக்கு நாம் அனைவரும் நம்மால் இயன்ற சிறிய உதவியோ, பெரிய உதவியோ செய்து இத்துயரத்தில் இருந்து அவர்கள் விரைவில் மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்ப அனைவரும் ஆதரவு தந்து தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நம் விவசாய நண்பர்கள் கஜா புயலின் தாக்குதலால் மிகுந்த பாதிப்ப...
சென்சார் கத்திரியில் அதிகம் சிக்காமல் தப்பித்த 2.O

சென்சார் கத்திரியில் அதிகம் சிக்காமல் தப்பித்த 2.O

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 திரைப்படத்தின் சென்சார் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2 மணிநேரம் 28 நிமிடங்கள் 52 நொடிகளுக்கு இப்படம் இறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை உருவான ‌ஷங்கர் படத்திலேயே இதுதான் மிகக்குறைந்த நேரம் ஓடும் திரைப்படமாக இருக்கும். தணிக்கைக் குழுவினர் காட்சிகளில் பெரிய அளவில் கத்திரி வைக்கவில்லை. ஆனால், வசனங்களில் தாராளமாகக் கைவைத்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. ‘யுனிசெல்’ என்ற நிறுவனத்தின் பெயரைத் திரைப்படத்தில் எங்கெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்களோ, அங்கெல்லாம் மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். அதுபோலவே, ‘புற்று நோய்,’ ‘கருச்சிதைவு’, ‘ஆண்மைக் குறைவு’, ‘லஞ்சம்’, ‘45 வருடம்’ ஆகிய வசனங்களை நீக்கச் சொல்லி இருக்கிறார்கள....
சர்வம் தாளமயம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சர்வம் தாளமயம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
'மின்சார கனவு', `கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்' வெற்றி படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியிருக்கும் படம் `சர்வம் தாள மயம்'. ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், தற்போது இதன் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 28ம் தேதி வெளியிட இருக்கிறார்கள்....
சீனாவில் அதிக விலைக்கு போன சுசீந்திரனின் தமிழ் சினிமா!

சீனாவில் அதிக விலைக்கு போன சுசீந்திரனின் தமிழ் சினிமா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சுசீந்திரன் இயக்கிய தமிழ் படம் சீனாவில் அபார விலைக்கு விற்பனை ஒரு நல்ல திரைப்படத்திற்கு மொழிகள் கடந்து எல்லைக் கடந்து வரவேற்பு இருக்கும். அந்த வகையில் 'டங்கல்' மற்றும் 'பாகுபலி' போன்ற இந்திய படங்களுக்கு சீன சந்தையில் மிகுந்த வரவேற்பு இருந்தது. அதேபோன்று தமிழ் திரைப்படத்துறைக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பும், எப்போதும் முன்மாதிரியாக விளங்கும் என்ற உண்மை 'Content is King' மூலம் நிரூபணமாகியிருக்கிறது. சுசீந்திரன் இயக்கித்தில் வெளியாகவுள்ள படம் சீனமொழியில் டப்பிங் செய்யப்படுகிறது. இப்படத்தின் டப்பிங் உரிமம் 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. விளையாட்டு, தடைகளை முறியடிப்பது, சாதனைகள் புரிவது, போன்ற படங்கள் அனைவரையும் ஈர்க்கும். அப்படி ஈர்க்கப்பட்டு தான் சீனாவில் இவ்வளவு பெரியத் தொகைக்கு விற்பனையாகியுள்ளது. இப்படம் நிஜ வாழ்க்கையில் பெண்களுக்கான கபடி போட்டியில் நடக்கும் ச...
மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மாபெரும் தோல்வி – மன்மோகன் சிங்

மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மாபெரும் தோல்வி – மன்மோகன் சிங்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மத்திய பிரதேச மாநிலத்தில்  இந்தூரில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தற்போதைய அரசாங்கத்தினால் இளைஞர்களுக்கும் விவசாயிகளுக்கும் வழங்கப்பட்ட  வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பிரமாண்ட  தோல்வியை சந்தித்து உள்ளது. இது  விவசாயிகள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு  வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்ட ஒரு தாக்குதல் ஆகும். மோடி அரசின் பணமதிப்பிழப்பு  ரத்து நடவடிக்கை மாபெரும் தோல்வியாகும். பணமதிப்பு ரத்து நடவடிக்கையும், தவறான ஜிஎஸ்டி அமலாக்கமும் மக்களை வதைத்து விட்டன. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு வேலைவாய்ப்பு அதிகரிக்கவே இல்லை. ஆண்டுக்கு 17, 600 வேலைவாய்ப்புகள் தான் பாஜக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. வேலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. மத்தியப்...
’கஜா’ புயல் பாதிப்புக்கு திரையுலக பிரபலங்கள் நிதி உதவி

’கஜா’ புயல் பாதிப்புக்கு திரையுலக பிரபலங்கள் நிதி உதவி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  ’கஜா’ புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. சுழன்று அடித்த புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து இருக்கின்றன.  புயலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இதேபோல் உயிர் இழந்த மாடுகளுக்கு தலா ரூ.30 ஆயிரமும், ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார். புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. புயல் சேதத்தை மதிப்பிடு...
கஜா புயல் நிவாரணத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு – அரசாணை வெளியீடு

கஜா புயல் நிவாரணத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு – அரசாணை வெளியீடு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கஜா புயல் தாக்கியதில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. கடலூர், சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், திண்டுக்கல் தேனி மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன. இந்த புயலினால் பலர் உயிரிழந்தனர். வீடுகள், பயிர்கள் சேதமடைந்தன வாழை, தென்னை, கரும்பு உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தற்போது நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன இந்த நிலையில் புயல் நிவாரண நிதிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன்படி இன்று மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.1000 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது. முற்றிலும் இடிந்த வீடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்கப்படும். புயலில் சேதம் அடைந்த தென்னை மரங்களுக்கு தலா ரூ.600 வீதமும், விழுந்த மரங்களை வெட்டி அகற்ற த...
தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடலோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கஜா புயலைத் தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு மழை தொடரும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும். சென்னையில் மிதமான மழை இருந்தாலும் ஒருசில நேரங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ...
சி.பி.ஐ. உயர் அதிகாரி ஊழல் புகார் – ‘கிரைம் திரில்லர்’ படத்துக்கு ஒப்பிட்ட ராகுல்

சி.பி.ஐ. உயர் அதிகாரி ஊழல் புகார் – ‘கிரைம் திரில்லர்’ படத்துக்கு ஒப்பிட்ட ராகுல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையேயான மோதலில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அவர்கள் இருவரின் அதிகாரத்தையும் பறித்து, கட்டாய விடுமுறையில் அனுப்பியது. இடைக்கால இயக்குனராக எம்.நாகேஸ்வரராவை நியமித்தது. சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையேயான மோதலில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அவர்கள் இருவரின் அதிகாரத்தையும் பறித்து, கட்டாய விடுமுறையில் அனுப்பியது. இடைக்கால இயக்குனராக எம்.நாகேஸ்வரராவை நியமித்தது. ஆனால் மத்திய மந்திரி ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி, இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு, தீய நோக்கம் கொண்டது என கூறி மறுத்தார். இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. உயர் அதிகாரி தெரிவித்துள்ள ஊழல் புகார் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கடுமையாக விமர்சித்து பதி...