7 பேர் யார்? கேள்வியால் பெருங்குழப்பத்தில் இருக்கிறாரா ரஜினி..?!
7 பேர் யார்? கேள்வியால் பெருங்குழப்பத்தில் இருக்கிறாரா ரஜினி..?!
நடிகர் ரஜினிகாந்த் பெருங்குழப்பத்தில் இருக்கிறார் என்றே தெரிகிறது. இதற்கு காரணம் சமீபத்திய அவரது பேச்சுக்கள், நடவடிக்கைகள் எல்லாம் அவரை பொதுமக்கள் மத்தியில் கேலிக்ககூத்தாக்கும் விதமாகவே அமைந்துவிடுகிறது.
விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ரஜினிகாந்த் ‘7 பேரின் விடுதலையை ரத்து செய்தது குறித்த கேள்விக்கு’ நேரடியாக பதில் சொல்லாமல் ‘எந்த ஏழு பேர்?’ என்று எதிர் கேள்வி கேட்டதோடு மட்டுமல்லாமல், ‘நான் இப்பதான் கேள்விப்படுகிறேன்... இப்பதான் வர்றேன்’ என்றும் பதில் சொல்லி இன்றைய நெட்டிசன்களின் மீம்ஸ் கலாட்டாவில் சிக்கிக் கொண்டார்.
உண்மையிலேயே ரஜினிகாந்த்துக்கு ராஜீவ் கொலையாளிகளான 7 பேரின் விடுதலை குறித்து செய்தி தெரியாதா அல்லது தெரியாதது போல நடிக்கிறாரா என்ற கேள்வி ஒருபக்கம் எழுந்தாலும்...









