Author: Kodanki
ஆர்டர் செய்தால் வீட்டுக்கு வரும் அல்சஃபி ஆம்பூர் பிரியாணி… சென்னையில் புதிய கிளை
25 வருடங்கள் பாரம்பரியம் மிக்க அல்சஃபி ஆம்பூர் பிரியாணி சென்னையில் திறப்பு
சென்னையில் பல்வேறு வகையான புது புது உணவகங்கள் திறக்கப்பட்டாலும், மக்களின் நாவுக்கு ஏற்ற
சுவையான மற்றும் தரமான உணவுகளை வழங்கும் ஒரு சில உணவகங்கள் மட்டுமே அவர்களது மனதுக்கு
நெருக்கமானதாக இருக்கிறது. அந்த வரிசையில் மக்களின் மனதுக்கு நெருக்கமான, கடந்த 1993 ஆம்
ஆண்டு ஆம்பூரில் தொடங்கப்பட்ட அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகம் தற்போது சென்னையில்
திறக்கப்பட்டுள்ளது.
சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள ஸ்ரீதேவி குப்பம் சாலையில் உள்ள நீல்கிரிஸ் சூப்பர் மார்க்கெட்
பக்கத்தில் திறக்கப்பட்டுள்ள அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகம், கடந்த 25 வருடங்களாக ஆம்பூரின்
நம்பர் ஒன் பிரியாணி உணவகமாக திகழ்ந்து வருகிறது. தற்போது சென்னையில் திறக்கப்பட்டுள்ள அல்சஃபி
ஆம்பூர் பிரியாணி உணவகம் சென்னை மட்டும் இன்றி தமிழகம் முழுவதிலும் ...
அடுத்த படம் பேட்ட … பாட்ஷா கெட்டப்பில் ரஜினி… குஷியான ரசிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 165-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். ரஜினியின் 165-வது படத்துக்கான motion poster இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார். பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். பேட்ட படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் ஷூட்டிங், டேராடூன், டார்ஜிலிங், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து லடாக், ஐரோப்பா ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.
பட முதல் லுக் பாட்ஷா போல அமைந்திருப்பதால் ரசிகர்கள் உற்...
7பேரை விடுதலை செய்ய நடவடிக்கை தமிழக அமைச்சரவை நாளை அவசர கூட்டம்
ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை தமிழக அமைச்சரவை நாளை அவசர கூட்டம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
27 ஆண்டுகளாக சிறையில் வாடும் அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்த தமிழக அரசு அதற்காக மத்திய அரசின் அனுமதியை கோரியது. ஆனால் அதற்கு அனுமதி வழங்க மறுத்த மத்திய அரசு, 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசியல் சாசன பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசு, 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஒரு முடிவை எடுத்த...
லைக் பன்னுங்க ஷேர் பன்னுங்க இது காமெடிப் படத்தலைப்பு
அருணாச்சலம் தியேட்டர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாகA.சரவணன்
தயாரிக்கும் படத்திற்கு " லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க " என்று வித்தியாசமாக தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
இந்த படத்தில் ஆச்சு என்கிற புது முகம் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக பிரிஷா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் நளினி நாடோடிகள் கோபால், கோதண்டம் பரோட்டா முருகேஷ் ஈரோடு முருகசேகர்,திடியன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - பாலா, இசை மற்றும் பாடல்கள் - செளந்தர்யன், படத்தை அருணாசலம் தியேட்டர்ஸ் A.சரவணன் தயாரிக்கிறார்.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சு.சத்தியசீலன்.
படம் பற்றி படத்தின் இயக்குனர் சு.சத்தியசீலனிடம் கேட்டோம்...
இது முழுக்க முழுக்க பேமிலி காமெடி சப்ஜெக்ட்.
இரண்டு மணி நேரம் மக்களை சிரிக்க வைப்பது தான் எங்களது நோக்கம்.
தயாரிப்பாளர் சரவணன் அவர்கள் திருவண்ணாமலையில் அருணாசலம் தியேட்டரை பல வருடங்க...
முழுமையான ஹார்ர் காமெடி படமாம் காட்டேரி
CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம்
சந்திரமுகிக்கு அடுத்து சிறந்த திரைக்கதையில் உருவாகியுள்ள 'காட்டேரி'..!
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக K.E.ஞானவேல்ராஜா மற்றும் அபி & அபிநிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காட்டேரி’. காமெடி வித் ஹாரர் திரில்லரகஉருவாகியிருக்கும் இந்தப்படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா ஆகியோர் நடித்துள்ளனர். இதில் சோனம் பஜ்வா ஏற்கனவே ‘கப்பல்’ என்கிற படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்தவர். இவர்கள் தவிர கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், சேத்தன், ஜான்விஜய்,ரவிமரியா,மைம் கோபி, லொள்ளுசபா மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
‘யாமிருக்க பயமேன்’என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய டீகே இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் . படத்தின் ஒளிப்பதிவை விக்கி கவனிக்க, ‘யாமிருக்க பயமே' படத்தில் பின்னணி இசையமைத்த பிரசாத் இசையமைத்திருக்கிற...
அர்ஜுன் நடிக்கும் பட ஹீரோ யார்? சஸ்பென்ஸ் வைத்த சிங்காரவேலன்..!
சிங்காரவேலன் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதாநாயகன் யார் என்பது விநாயகர் சதுர்த்தி அன்று அறிவிப்பு!
அர்ஜுன், ஜெகபதி பாபு , ஜாக்கி ஷெராஃப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
'கழுகு - 2' படத்திற்கு பிறகு மிக பிரமாண்டமாக ஒரு படத்தை தயாரிக்க உள்ளார் சிங்காரவேலன். இந்த படத்தில் 'Action King' அர்ஜுன், ஜெகபதி பாபு , ஜாக்கி ஷெராஃப், 'கோட்டா' சீனிவாச ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்கள்.
அறிமுக இயக்குநர் அன்பரசன் இயக்க உள்ள இந்த படத்தை
'பேராண்மை' , 'பூலோகம்', 'மீகாமன்' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.R.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
'க்ரைம் நாவல்' மன்னன் ராஜேஷ்குமார் திரைக்கதை எழுத, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார்.
பெயரிடப்படாத இந்த படத்தில் நடிக்க உள்ள கதாநாயகன் யார் என்பது விநாயகர் சதுர்த்தி அன்று அறிவிக்கப்பட உள்ளது....
நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த பிக்பாஸ்2 டேனி..!
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் சிறிய வேடத்தில் பிரபலமானவர் டேனியல். இவர் தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். இதில் இவருடன் அனந்த் வைத்யநாதன், என்.எஸ்.கே.ரம்யா, வைஷ்ணவி, பாலாஜி, டேனியல், ஷாரிக் ஹாசன், நித்யா, ரித்விகா, ஜனனி, மும்தாஜ், பொன்னம்பலம், மமதி சாரி, சென்ட்ராயன், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த், மஹத் ஆகிய 16 பேரும் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.
இதில், மமதி சாரி, அனந்த் வைத்யநாதன், நித்யா, என்.எஸ்.கே.ரம்யா, பொன்னம்பலம், வைஷ்ணவி, ஷாரிக் ஹாசன், மஹத் ஆகியோர் ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று டேனியல் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
வெளிய வந்த டேனியல், தனது காதலியான டெனிஷாவை இன்று கரம் பிடித்துள்ளார். இருவரும் மாலை மாற்றி எளிமையாகப் பதிவுத் திரும...
விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகிறது சிவகார்த்திகேயன் களமிறங்கும் ‘சீமராஜா’
வருடத்திற்கு எத்தனையோ திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் திருவிழா உணர்வை திரையரங்கிலும், படம் பார்க்கும் ரசிகர்கள் மனதிலும் தருபவை ஒரு சில திரைப்படங்களே. அந்த வகையில் சிவகார்த்திகேயன், பொன்ராம் இணையும் படங்கள் எப்போதுமே குடும்பங்கள் கொண்டாடும் திருவிழாவாக தான் இருக்கும். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிக்காக மூன்றாவதாக இணைந்துள்ள படம் 'சீமராஜா'. சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி என நட்சத்திரப் பட்டாளத்தோடு சிவகார்த்திகேயன் களமிறங்க, அவருக்கு பக்கத்துணையாக டி.இமான் இசையமைத்திருக்கிறார். 24AM ஸ்டூடியோஸ் மிகப்பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்த சீமராஜா விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகிறது. ஏற்கனவே மதுரையில் மிக பிரமாண்டமாக வெளியாகிய டீசர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நட...
‘ஏ’ சான்றிதழ் கொடுப்பதற்கு பதில் 18+ என கொடுக்கலாம் -வஞ்சகர் உலகம் இயக்குனர் ஆசை
லாபிரிந்த் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மனோஜ் பீதா இயக்கியிருக்கும் படம் 'வஞ்சகர் உலகம்'. குரு சோமசுந்தரம், சாந்தினி தமிழரசன், அழகம் பெருமாள், ஜான் விஜய், அனிஷா அம்ப்ரோஸ் நடித்திருக்கும் இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் படத்தின் 25 நிமிட காட்சிகள் பிரத்யேகமாக ரசிகர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
சினிமாவில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அது தான் என்னை இந்த படத்தில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. முதல் இரண்டு ரீல்களை பார்த்திருப்பீர்கள், இன்னும் நிறைய ஸ்பெஷலான விஷயங்கள் இந்த படத்தில் இருக்கின்றன என்றார் நடிகர் விசாகன்.
தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ஆரண்ய காண்டம் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் குரு சோமசுந்தரம். அதற்...
