ரஜினிகாந்த் திடீரென இமயமலை பயணம் – ரிஷிகேஷ் பாபாஜி ஆசிரமம் செல்கிறார்
நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கு தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. மாவட்டம் வாரியாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.
வேலப்பன்சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்த ரஜினி, எம்.ஜி.ஆரை போல ஏழை மக்களுக்கான ஆட்சியை என்னால் தர முடியும் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ரஜினி நடித்துள்ள காலா படம் விரைவில் வெளியாக உள்ளது. அதன்பிறகு ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 படம் வெளியாகிறது. அந்த படத்துக்கான இறுதிக்கட்ட பணிகள், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படம் என்று சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
அரசியலுக்கான அடித்தளத்தை உறுதியாக அமைத்து வரும் ரஜினி திடீரென்று ஆன்மீக பயணமாக நாளை (10-ந் தேதி) இமயமலை புறப்படுகி...








