விஜய சேதுபதி தரும் கவுரவம்…
"சினிமா என் குடுமபம் என்றால், திரையுலக பிண்ணனி கலைஞர்கள் என் குடும்பத்தினர்" என்று கூறுகிறர் விஜய் சேதுபதி
சினிமாவின் ஆரம்ப நாட்களில் இருந்து இன்று வரை அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்து வருபவர்கள் திரையுலக பிண்ணனி கலைஞர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் அத்தகைய பல திறமையான பல திரையுலக பிண்ணனி கலைஞர்கள் இன்று திரையுலகில் இருந்தே வெளியேற்றப்பட்டுவிட்டனர். அதற்கு முக்கியமான காரணம், வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில் நுட்பம். தமிழ் திரையுலகின் அப்படிப்பட்ட மூத்த திரையுலக பிண்ணனி கலைஞர்களை கௌரவ படுத்த, வருகின்ற மே 1 ஆம் தேதி அன்று பிரம்மாண்ட விழாவை 'உலகாயுதா' நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்து இருக்கிறார் இயக்குநர் எஸ் பி ஜனநாதன். தமிழ் திரையுலகின் 100 மூத்த கலைஞர்களுக்கு தலா ஒரு சவரன் என மொத்தம் நூறு சவரன் தங்க பதக்கங்கங்களின் செலவை முழுவதுமாக ஏற்று வழங்க இருப்பவர் வி...
