கம்பளா எருமை மாடு ஓட்டப் பந்தயத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்
கர்நாடக மாநிலத்தில் கம்பளா எனப்படும் எருமை மாடு ஓட்டப் பந்தயத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று பீட்டா அமைப்பு தாக்கல் செய்த மனுவில் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கர்நாடக மாநிலத்தின் கடற்கரை மாவட்டங்களான உடுப்பி, தக் ஷின கன்னடா பகுதிகளில் கம்பளா ஓட்டப்போட்டி பாரம்பரியமாக நடந்து வருகிறது.
சேற்று வயல்களில் எருமை மாடுகளைப் பூட்டி விவசாயிகள் ஓடவிடுவார்கள். நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை அந்த பகுதிகளில் இந்த கம்பளா போட்டி நடக்கும். இந்த போட்டி நடந்தால், சிறப்பான விளைச்சல் இருக்கும்என்றும், விவசாயிகளின் விளையாட்டாகவும் இந்த போட்டி கருதப்படுகிறது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போல இந்த போட்டி அங்கு பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த போட்டியில் மாடுகள் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டி இந்த போட்டிக்கு நீதிமன்றத்தில் ...









