நடிகர் சூர்யா வெளியிட்ட “ஹிட்லிஸ்ட்” திரைப்படத்தின் முதல் பாடல்!
*‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிட்டார் நடிகர் சூர்யா!*
இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது 'ஹிட்லிஸ்ட்' திரைப்படம். இந்நிறுவனம் சார்பில் ஏற்கனவே 'உலக நாயகன்' கமல்ஹாசன் நடித்த தெனாலி மற்றும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற கூகுள் குட்டப்பா ஆகிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்கள் இயக்குனர் விக்ரமனிடம் உதவியாளராக பணியாற்றியதால், அந்த அன்பிற்காக அவர் இந்த படத்தை தயாரிக்கிறார்.
குடும்பப்பாங்கான, உணர்ச்சிகரமான படங்களை இயக்குவதற்கு பெயர்போன இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.இயக்குனர்கள் சூர்யகதிர், K.கார்த்திகேயன் ஆகிய இருவரும் இணைந்து இயக்கும் இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.மே...









