ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

அரண்மனை 4 மிரட்டலா? உருட்டலா? கோடங்கி விமர்சனம் 3/5

 

அரண்மனை 4 மிரட்டலா? உருட்டலா? கோடங்கி விமர்சனம் 3/5

 

வக்கீலாக இருக்கும் சுந்தர் சி தன் அத்தை கோவை சரளாவுடன் வாழ்ந்து வருகிறார். சிறுவயதில் இவரது தங்கை தமன்னா சந்தோஷ் பிரதாப்பை காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு ஓடி விடுகிறார். ஆண்டுகள் பல செல்ல ஒரு காட்டுக்கு நடுவில் இருக்கும் அரண்மனையில் ஒரு மகன் மகளோடு வாழ்ந்து வரும் தமன்னா சந்தோஷ் தம்பதியினர் திடீரென மர்மமான முறையில் இறந்து கிடக்கின்றனர்.

விஷயத்தை கேள்விப்பட்ட வக்கீல் சுந்தர் சி அந்த அரண்மனைக்கு துப்பு துலக்க வருகிறார். வந்த இடத்தில் அவர்களது இறப்புக்கு காரணம் பேய்  எனக் கண்டுபிடிக்கிறார். இதையடுத்து தமன்னாவின் குழந்தைகளை அந்தப் பேய் கொல்ல துடிக்கிறது. அந்தப் பேயிடம் இருந்து குழந்தைகளை சுந்தர் சி காப்பாற்றினாரா, இல்லையா? அந்தப் பேய் ஏன் தமன்னா சந்தோஷ் தம்பதியினரை கொலை செய்தது? என்பதே அரண்மனை 4 படத்தின் மீதி கதை

அரண்மனை 4 திரைப்படம் ரசிகர்களை திருப்தி படுத்தி வெற்றி பெற்று மீண்டும் சுந்தர் சிக்கு கம்பேக் கொடுத்து இருக்கிறது. இவரின் முந்தைய அரண்மனை 2, 3 படங்களைக் காட்டிலும் இப்படம் இன்னும் சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் உருவாகி ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.

கிராபிக்ஸ் காட்சிகளும் பேய் சென்டிமென்ட் காட்சிகளும் படத்திற்கு பிளஸ் ஆக அமைந்து படத்தை கரை சேர்த்திருக்கிறது. காமெடி காட்சிகளில் மட்டும் இன்னும் கூட சற்று கவனம் செலுத்தி இருக்கலாம்.

அண்ணன் தங்கையாக வரும் சுந்தர் சி தமன்னா ஆகியோரது நடிப்பு வழக்கம்போல் சிறப்பாக அமைந்திருக்கிறது. கிளாமர் விஷயங்களை தவிர்த்து விட்டு தாய்ப்பாசம், அண்ணன் பாசம் என நடிப்பில் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார் தமன்னா. இவரின் பரிதாபமான நடிப்பும் சிறப்பாக அமைந்து உள்ளது.

காமெடி காட்சிகளுக்கு யோகி பாபு, விடிவி கணேஷ், சேசு, டெல்லி கணேஷ், கோவை சரளா ஆகியோர் அவரவர் வேலையை நிறைவாக செய்திருக்கின்றனர். இவர்கள் காமெடி பல இடங்களில் சிரிக்கவும், சில இடங்களில் சோதிக்கவும் வைத்திருக்கிறது.

சிறிது நேரமே வந்தாலும் சந்தோஷ் பிரதாப் மனதில் பதியும்படி நடித்திருக்கிறார் அதேபோல் ராஷி கண்ணா வுக்கு பெருசா வேலை இல்லை. இருந்தாலும் வந்த காட்சிகள் பலம் சேர்க்கிறது.

ஹிப் ஆப் ஆதியின் பாடல்களை விட பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது.

கிளைமாக்சில் சிம்ரன் – குஷ்பு கலக்கல் டான்ஸ் பட்டைய கிளப்ப படம் முடிந்து டைட்டில் கார்டு போடுகிறார்கள்… கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி மிக பிரமாண்ட மிரட்டல்.

படம் முடிந்து விட்ட்து என தியேட்டரில் பாதிபேர் எழுந்து செல்ல ஆரம்பித்த்தும் தமன்னாவும், ராஷி கண்ணாவும் ஒரு கிளாமர் ஆட்டம் போடுகிறார்கள்… அந்த ஆட்ட்த்தில் தமன்னாவை பார்க்க கண்கள் கூசுகிறது… இரண்டுபேருக்கும் டிரஸ் இருக்கா இல்லையான்னு யோசிக்கிற மாதிரி அவ்ளோ கிளாமர்.

ஒட்டும்த்தமா அரண்மனை 4 குடுக்குற காசுக்கு ஜாலிலோ ஜிம்கானா…

 

கோடங்கி

மதிப்பீடு 3/5

53 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன