‘மண்டாடி’ படத்திற்கு U/A சான்றிதழ் செப்டம்பர் 10, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!
ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட்டின் ‘மண்டாடி’ படத்திற்கு U/A சான்றிதழ் செப்டம்பர் 10, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!
ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு பின்னணியிலான ஆக்ஷன் டிராமா திரைப்படமான ‘மண்டாடி’, தணிக்கை பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து U/A சான்றிதழ் பெற்றுள்ளது. இதன் மூலம், இப்படம் செப்டம்பர் 10, 2026 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகத் தயாராகியுள்ளது.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். தனித்துவமான கதை உலகம், பாரம்பரிய விளையாட்டை மையமாகக் கொண்ட பின்னணி மற்றும் சூரியின் இதுவரை பார்த்திராத தோற்றம் ஆகியவற்றால் ‘மண்டாடி’ திரைப்படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் எத...








