புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

குடும்பத்தை உடைக்க சில ஹீரோயின்கள்! – ஞானவேல்ராஜா சீற்றம்

குடும்பத்தை உடைக்க சில ஹீரோயின்கள்! – ஞானவேல்ராஜா சீற்றம்

CINI NEWS, சினி நிகழ்வுகள்
திருமணமான ஆண்களின் குடும்பத்தை உடைக்க சில ஹீரோயின்கள் நினைக்கின்றனர் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் மனைவி நேஹா தெரிவித்துள்ளார். பருத்தி வீரன், சில்லுனு ஒரு காதல், சிங்கம், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல படங்களை தன் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் மூலம் தயாரித்தவர் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இவரின் மனைவி நேஹா நேற்றிரவு (மார்ச் 21) ட்விட்டரில், “திருமணமான ஆண்களின் குடும்பத்தை உடைக்க சில ஹீரோயின்கள் நினைக்கின்றனர். அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்களை விடக் கீழ்த்தரமானவர்கள். சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் படுக்கையை பகிரவும் தயங்கமாட்டார்கள். அந்த நடிகைகளின் தகவல்களை நான் விரைவில் வெளியிடுவேன்” என்று தெரிவித்திருந்தார். சில மணிநேரங்களில் இந்தப் பதிவை நீக்கிய அவர், பின்னர் ஏன் அந்த பதிவை நீக்கினேன் என்ற விளக்கத்தையும் கூறியுள்ளார். அதில், “நான் வெளியிட்ட ...
காச நோயாளிகள் குறித்த தகவல் தெரிவிக்காத டாக்டர்களுக்கு சிறை!

காச நோயாளிகள் குறித்த தகவல் தெரிவிக்காத டாக்டர்களுக்கு சிறை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
காச நோயாளிகள் குறித்த தகவல்களை அரசுக்குத் தெரிவிக்காவிட்டால், மருத்துவர்கள் உட்பட மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. காச நோய் (டிபி) என்பது தோற்று நோய். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்க நேரிடும் அபாயம் உள்ளது. ஒரு காச நோயாளி ஆண்டுதோறும் 10 முதல் 15 பேருக்கு இந்த நோயைப் பரப்புகிறார். உலகக் காச நோயாளிகளில் ஐந்தில் ஒருவர் இந்தியர். தமிழகத்தில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காச நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நோய், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரலாம். இந்தியாவில் வரும் 2025ஆம் ஆண்டிற்குள் காச நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிடும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அ...
ஜெ. மரணம்: சசிகலா பரபரப்பு வாக்குமூல விபரம்!

ஜெ. மரணம்: சசிகலா பரபரப்பு வாக்குமூல விபரம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
2016ம் ஆண்டு செப்.22ம் தேதி இரவு போயஸ்கார்டன் வீட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு என்ன நடந்தது என சசிகலா விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். உடல் நலக்குறைபாடு காரணமாக 2016ம் ஆண்டு செப்.22ம் தேதி இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா அதே ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அந்நிலையில், அவர் மருத்துவமனையில் இருந்த 75 நாட்களிலும் அவரை சசிகலாவை தவிர யாரும் சந்திக்கவில்லை என புகார் எழுந்தது. அவரது உடல்நிலை பற்றி விசாரிக்க வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் யாரையும் ஜெ.வை பார்க்க சசிகலா தரப்பு அனுமதிக்கவில்லை. எனவே அந்த விவகாரம் பெரும் சர்ச்சைகளை உருவாக்கியது. அமைச்சர்கள் பலரும் நாங்கள் அவரை சந்திக்கவே இல்லை. சசிகலா தரப்பில் என்ன கூறப்பட்டதோ அதைத்தான் ஊடகங்களுக்கு தெரிவித்தோம் எ...
தமிழகத்தில் 4 கட்டங்களாக கூட்டுறவுச் சங்கத் தேர்தல்: தேர்தல் ஆணையர் தகவல்

தமிழகத்தில் 4 கட்டங்களாக கூட்டுறவுச் சங்கத் தேர்தல்: தேர்தல் ஆணையர் தகவல்

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் 15 அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள 18,775 நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் 4 கட்டங்களாக நடைபெறுகிறது என்று தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன் தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 2018-ஆம் ஆண்டுக்கான கூட்டுறவுச் சங்கத் தேர்தலை நடத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர்.பொன்னி, மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ரேணுகாம்பாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள கூ...
நடிகை ஸ்ரேயா ரகசிய திருமணம்!

நடிகை ஸ்ரேயா ரகசிய திருமணம்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்த நடிகை ஸ்ரேயா, 2001-ம் ஆண்டு இஷ்டம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் இரண்டாம் கதாநாயகியாக அறிமுகமானார். மழை என்ற படம் மூலம் நல்ல வரவேற்பை பெற்று பல முன்னணி நடிகர்களோடு நடித்து முன்னணி கதாநாயகியாக வளம் வந்தார் ஸ்ரேயா. பிறகு கதாநாயகியில் இருந்து, குணசித்ர நடிகையாக மாறி, தற்போது அந்த வாய்ப்பும் இல்லாமல் தெலுங்கு படங்களுக்கு முக்கியத்தும் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். மஞ்சு விஷ்ணு நடித்துள்ள காயத்திரி என்ற படத்தில் ஸ்ரேயாவும் முக்கிய கதாபாத்திரத்தலில் நடித்தார், அந்த படத்தை தயாரித்ததும் இவர் தான். இந்த நிலையில், நடிகை ஸ்ரேயாவின் திருமண செய்திகள் அவ்வப்போது வதந்திகளாக வெளியாகி தான் வந்தது. ஆனாலும் ரஷியாவைச் சேர்ந்த ஆன்டிரே கோச்சேவ் என்ற இளைஞரை காதலித்து வந்தார்.மிகப்...
மே மாதம் முதல் வாரம் ரிலீஸாகப் போகும்  ‘Mr.சந்திரமெளலி’

மே மாதம் முதல் வாரம் ரிலீஸாகப் போகும் ‘Mr.சந்திரமெளலி’

MOVIES, திரைப்படங்கள்
எந்த தொழில் நமக்கு சோர்வே தராததோ, அதுவே நமக்கான தொழிலாகும். அப்படியாக சினிமா தொழிலைக் கருதும் நடிகர்கள் , தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணி புரியும் படம் தான் 'Mr.சந்திரமௌலி'. சரியான திட்டமிடுதல் படத்தின் பாதி வெற்றியை தீர்மானிக்கும் என்பதை உறுதியாக நம்பும் அணி இது. திரு இயக்கத்தில், கார்த்திக், கவுதம் கார்த்திக்,வரலக்ஷ்மி சரத்குமார்,  ரெஜினா கசண்டரா  ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'Mr.சந்திரமௌலி' முதல் நாள் படப்பிடிப்பிலிருந்தே சரியான திட்டமிடுதளை பின்பற்றிவரும் அணியாகும். இந்த படத்தை BOFTA Media works India Private Limited சார்பில்  'Creative Entertainers and Distributors' நிறுவனம் தயாரிக்கின்றது. இது குறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் திரு. தனஞ்செயன் பேசுகையில் , '' படத்தின் எல்லா கட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டது. படத்திலுள்ள நான்கு பாடல்களில் இரண்டு பாடல்கள் ஏ...
ரத யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசுவது சரியல்ல! – எடப்பாடி விளக்கம்!

ரத யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசுவது சரியல்ல! – எடப்பாடி விளக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ரத யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசுவது சரியல்ல எனவும் அனைத்து மதத்திற்கும் தமிழகத்தில் சம உரிமை உண்டு எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேரவையில் விளக்கம் கொடுத்தார். ஆனால் அதை ஏற்க மறுத்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை அயோத்தியில் தொடங்கி 5 மாநிலங்களை கடந்து தமிழகத்திற்குள் நுழைந்துள்ளது. கேரளாவைக் கடந்து தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தின் கோட்டை வாசல் பகுதியில் நுழைந்துள்ளது. அயோத்தியில் தொடங்கி, தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் வரும் 25ம் தேதி நிறைவு பெறுகிறது. மதநல்லிணக்கத்தை காக்கும் வகையில் இந்த ரதயாத்திரையை அனுமதிக்க கூடாது என எஸ்டிபிஐ, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் ஆகிய அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி மற்றும் அபுபக்கர் ஆகிய 4 எம்.எல்.ஏக்களும் நேற்று சட்டசபையில், ரத யாத்திரைக்கு தடை வ...
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின்  உதவி இயக்குனர்!

கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
பிரம்மாண்ட இயக்குநர் சங்கரிடம் “2.0” படத்தில் உதவியாளராக பணிபுரிந்திருக்கும் விக்னேஷ் குமார், “மேகம் செல்லும் தூரம்” என்ற வீடியோ பாடலை இயக்கியிருக்கிறார். அந்த வீடியோ பாடலை இயக்கியதோடு மட்டுமல்லாமல் அவரே நடித்திருக்கிறார். கதாநாயகியாக பிரவாளிகா நடித்திருக்கிறார்.    புகைப்படக் கலைஞராக வேண்டும் என அதீதமான ஈடுபாட்டுடன் இருக்கும் இளைஞன், காதல் மற்றும் குடும்பம் குறித்து எந்த விதமான பிரக்ஞையுமே இல்லாமல் இருக்கிறான். தனது குறிக்கோளுக்காக ஒரு கட்டத்தில் காதலையே உதறி, பின்னால் ஒரு நீண்ட நெடிய பயணத்தின் இறுதியில் வாழ்க்கை, அன்பு, குடும்பம் இவற்றின் மீதான மதிப்புகளை உணர்ந்து கொள்கிறான். இதுவே “மேகம் செல்லும் தூரம்” வீடியோ பாடலின் சாராம்சம்.    இந்த பாடலை படமாக்குவதற்காக ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரண், உதவி இயக்குநர் விக்னேஷ்ராஜ் மற்றும் விக்னேஷ் குமார் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் குழு மட்டுமே இமாச்ச...
சசிகலாவின் கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராசன் காலமானார்.

சசிகலாவின் கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராசன் காலமானார்.

HOME SLIDER, NEWS, செய்திகள்
சசிகலாவின் கணவர் நடராசன், கல்லீரல் மற்றும் சீறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டுவந்தார். இதையடுத்து, அவருக்கு சமீபத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அறுவைசிகிச்சை செய்யப்பட்ட பின்பு, அவரை பார்ப்பதற்காகச் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை யில் உள்ள சசிகலா 5 நாள்கள் பரோலில் வந்தார். தொடர்ந்து, வீட்டில் இருந்தவாறு அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், நடராசனைக் காண சசிகலாவுக்கு மீண்டும் பரோல் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காததால் நள்ளிரவு 1.35 மணியளவில் நடராசன் மரணமடைந்தார். இதை, மருத்துவமனை நிர்வாகம் உறுதிசெய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவரது உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங் முடிந்த பின், சென்னை பெசன்ட் நகர் வீட்டில் காலை 7 மணியளவில் அஞ்சலிக்காக வைக்க...
அதிமுக எம்.பி சசிகலாவிற்கு டெல்லியில் திருமணம்?

அதிமுக எம்.பி சசிகலாவிற்கு டெல்லியில் திருமணம்?

HOME SLIDER, NEWS, செய்திகள்
அதிமுக எம்.பி சசிகலாவிற்கு டெல்லியில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக-வின் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் சசிகலா புஷ்பா. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது சசிகலாவும் அவரும் சேர்ந்து தன்னை தாக்கியதால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், எனவே தனக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தில் கண்ணீர் மல்க இவர் கோரிக்கை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்கியதும் அடுத்த பரபரப்பாக சசிகலா புஷ்பாவும், திமுக எம்.பி., திருச்சி சிவாவும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு அடுத்ததாக அவர் வீட்டு பணிப்பெண்கள் சசிகலா புஷ்பாவால் தாங்கள் துன்புறுத்தப்படுகிறோம் என்று தூத்துக்குடி காவல்துறையிடம் புகார் அளித்தனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ததையடுத்து கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா புஷ...