புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

டி.டி.வி.தினகரன் கொடிக்கு ஆட்சேபம் தெரிவித்து அதிமுக வழக்கு!

டி.டி.வி.தினகரன் கொடிக்கு ஆட்சேபம் தெரிவித்து அதிமுக வழக்கு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
டிடிவி.தினகரன் அறிமுகப்படுத்திய கட்சி கொடிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக மனு தாக்கல் செய்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூரில் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. புதிதாக தொடங்கும் இயக்கத்தின் பெயர், கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி  நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், டிடிவி தினகரன் புதிய இயக்கத்தின் பெயர் “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” மற்றும் கறுப்பு வெள்ளை சிவப்பு வண்ணக் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிலையில், தினகரன் அறிமுகப்படுத்திய கொடியை ஆட்சேபித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தரப்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தினகரன் அறிமுகப்படுத்தியுள்ள கொடி, அதிமுகவின் கட்சிக் கொடியை போல் இருப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே மாதிரி கொடி இருப்பதால், அது தொண்டர்களைக் குழப்பமடைய செய்யும் எனவும் மனுவில் தெரிவிக்...
தினகரன் தொடங்கிய ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’

தினகரன் தொடங்கிய ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’

HOME SLIDER, NEWS, செய்திகள்
மதுரை மாவட்டம் மேலூரில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது புதிய அமைப்பின் பெயரை அறிவிப்பேன் என்று டி.டி.வி. தினகரன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதன்படி டிடிவி. தினகரன் தலைமையில் பொதுக்கூட்டம் மதுரை மேலூரில் இன்று காலை தொடங்கியது. அப்போது தொண்டர்கள் மத்தியில் டிடிவி. தினகரன் தனது புதிய அமைப்பின் பெயரை அறிவித்தார். "அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” என தனது அமைப்பின் பெயரை அறிவித்த தினகரன் தொடர்ந்து கொடியையும் அறிமுகப்படுத்தினார். அதில், கருப்பு, வெள்ளை, சிவப்பு கொடியின் நடுவில் ஜெயலலிதா படம் இடம்பெற்றுள்ளது. மேடை முன்பு அமைக்கப்பட்டு இருந்த 100 அடி உயர கொடிக்கம்பத்தில் புதிய கொடியை டிடிவி.தினகரன் ஏற்றினார். இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் அதிகாலை முதலே மேலூரில் குவிந்தனர். இதனால் மேலூர் பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்ட...
மார்ச் 22-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர்: அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் முடிவு

மார்ச் 22-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர்: அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் முடிவு

NEWS, செய்திகள்
வரும் 19ஆம் தேதி ஆரம்பித்து 22ஆம் தேதி வரையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என்று கூறியுள்ள சபாநாயகர் தனபால், அன்றைய தினங்களில் பட்ஜெட் மீது பொதுவிவாதம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். இன்று தமிழக துணை முதல்வரும் , நிதி அமைச்சருமான ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்… மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக ரூ.786 கோடி ஒதுக்கீடு. காவல்துறை நலன் மற்றும் மேம்பாட்டிற்க்கு ரூ 7,877.58 கோடி நிதி ஒதுக்கீடு. வடசென்னைக்கான வெள்ள தடுப்பு மேலாண்மைக்கு ரூ.3,243 கோடியில் திட்டம் தயாரிப்பு விவசாயிகளுக்களாக “உழவன்” என்ற அலைபேசி செயலி. வேலைவாய்ப்பு மையங்களில் பதிவு செய்து , மாதாந்திர உதவித் தொகை பெற்று வரும் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு, திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயிற்சி அளித்து உரிய வேலைவாய்ப்பை வழங்க நடவடிக்கை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொ...
அதி நவீன திரை அனுபவங்களைக் கொடுக்கும் ’சிவசக்தி தியேட்டர்’கள்!

அதி நவீன திரை அனுபவங்களைக் கொடுக்கும் ’சிவசக்தி தியேட்டர்’கள்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
அண்ணா நகர், பாடி, திருமங்கலம், அம்பத்தூர் சுற்று வட்டார மக்களுக்காக நகரின் மத்தியில் அதிநவீன தொழில்நுட்பங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது பாடி சிவசக்தி திரையரங்கம். சிறப்பான ஒளி, ஒலியமைப்பு, கண்ணை கவரும் அரங்க அமைப்பு, விசாலமான பார்க்கிங் என காலத்திற்கேற்ற மாற்றங்களோடு தயாராகியிருக்கும் இந்த திரையரங்கை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலின் இளைஞர் அணி தலைவர் கோ.ப. செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் கத்தரித்து திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய திரையரங்க நிர்வாக இயக்குனர் முருகானந்தம். “அண்ணா நகருக்கும், பாடிக்கும் இடையில் சிறப்பான இடத்தில் அமைந்திருக்கிறது எங்களின் சிவசக்தி திரையரங்கம். அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பான, தரமான, நிறைவான பொழுதுபோக்கினை நியாயமான கட்டணத்தில் வழங்கிடும் வகையில் இந்த திரையரங்கை உருவாக்கியிருக்கிறோம். இந்த காலத்திற்கேற்ப நிறைய படங்க...
ரஜினி, கமல் தலையிட்டால்தான் இந்த திரையுலக பிரச்சனைகளுக்கு தீர்வு!

ரஜினி, கமல் தலையிட்டால்தான் இந்த திரையுலக பிரச்சனைகளுக்கு தீர்வு!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
ரஜினி, கமல் இருவரும் அரசியலில் குதித்தே விட்டார்கள்.. இதில் ஒருவர் அரசியல் சுற்றுப்பய ணம் கிளம்பிவிட்டார்.. இன்னொருவர்  இமயமலைக்கு சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டார். ஆனால் அவர்களை இந்த நிலைக்கு உயர்த்திய சினிமா துறையோ,  சரிவிலிருந்து தன்னை மீட்கும் விதமாக கடந்த மார்ச்-1ஆம் தேதி முதல் போராட்டத்தில் குதித்துள்ளது. சினிமாவின் ஆதார சுருதியாக, அச்சாணியாக இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் முன்னெடுத்து நடத்தும் இந்த போராட்டத்தை, யாருக்கோ எவருக்கோ நடத்துகிறார்கள் என்பது போல நினைத்துக்கொண்டு, திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் யாரும் இதற்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட வாய் திறக்கவில்லை.. இதனை குறிப்பிட்டு, தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே பிலிம்ஸ் ஜே.சதீஷ்குமார், ரஜினி, கமல் இருவரையும் “இந்த திரைப்பட துறையின் இன்னல்களை களைய ஏதேனும் செய்துவிட்டு, அதன்பின் உங்கள் அரசியல் பயணத்தை துவக்குங்கள்.. இதில் உங்களுக்கு ஆதரவாக நாங்...
தன்னம்பிக்கையின் நாயகனாக விளங்கிய விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு

தன்னம்பிக்கையின் நாயகனாக விளங்கிய விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு வீல் சேரில் முடங்கினாலும் தன்னுடைய இயற்பியல் ஆய்வில் தொய்வு காணாத மிகப்பிரபல விஞ்ஞானி. தன்னம்பிக்கையின் நாயகனாகவும் விளங்கிய இந்த விஞ்ஞானி இன்று உலகை விட்டு மறைந்திருக்கிறார். நரம்பியல் சார்ந்த ALS பாதிப்புக்கு உள்ளானவர்கள் 5 ஆண்டிற்கு மேல் உயிர்வாழ்வது சாத்தியமில்லை என்று பொதுவாக மருத்துவம் கூறிவரும் போதிலும், தனது 21 வயதில் ALS பாதிப்பிற்கு உள்ளாகிய ஸ்டீபன் ஹாக்கிங் 50 ஆண்டுகளுக்கும் அதிகம் உயிருடன் இருந்துவரும் அதிசய மனிதர் என்பது குறிப்பிடத்தக்கது. யார் ஸ்டீபன் ஹாக்கிங் அவர் செய்த சாதனைகள் என்ன? இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் ஜனவரி 8, 1942ம் ஆண்டு பிறந்தவர் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங். இவருடைய தந்தையும் ஒரு இயற்பியலாளர், வெப்ப மண்டல நோய்கள் குறித்த ஆய்வை இவர் செய்தார். ஸ்டீபனின் தாயார் லிபரெல் கட்சியில் இருந்தனர். இவ...
உச்சநீதிமன்றம் இறுதித்தீர்ப்பு வழங்கும் வரை ஆதார் எதற்கும் கட்டாயமில்லை!

உச்சநீதிமன்றம் இறுதித்தீர்ப்பு வழங்கும் வரை ஆதார் எதற்கும் கட்டாயமில்லை!

NEWS, செய்திகள்
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வந்த நிலையில், இனி எதற்கும் ஆதார் கட்டாயமில்லை என உச்ச நீதிமன்ற இன்று (மார்ச் 13) தீர்ப்பளித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வங்கி கணக்கு, பான்கார்டு, செல்பேசி எண் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. செல்பேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கும், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கும் 31ஆம் தேதி கடைசி நாள் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆதார் கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு கடந்த மார்ச் 6ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், “வங்கி கணக்கு உள்ளிட்டவையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மத...
கமலின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்களா பாஜக தமிழிசை & எச். ராஜா?!

கமலின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்களா பாஜக தமிழிசை & எச். ராஜா?!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்தில் சேர்ந்ததாக தனக்கு மெயில் வந்துள்ளதாக பாஜக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தை ஆரம்பித்துள்ள நடிகர் கமல்ஹாசன், கட்சியின் உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். கட்சியைப் பலப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளார். மக்கள் நீதி மையத்திற்கு இணையதளம் மூலமாகவும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் சேர்க்கை குறித்து விமர்சனம் செய்துள்ளார் பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். இதுகுறித்து திருப்பூரில் இன்று (மார்ச் 13) செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், "நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யத்திற்கு உறுப்பினர்களை சேர்த்து வருகிறார். சொன்னால் அதிர்ச்சியடைவீர்கள். கமல் கட்சியிலிருந்து எனக்கு மெயில் வந்துள்ளது. அதில்...
அதர்வா  நடிக்கும் ” பூமராங்”  படத்தில் தேசபக்தி பாடலொன்று பிரமாண்டம்!

அதர்வா நடிக்கும் ” பூமராங்” படத்தில் தேசபக்தி பாடலொன்று பிரமாண்டம்!

CINI NEWS, திரைப்படங்கள்
வளர்ந்து வரும் இளம்  நடிகர்களில் அதர்வா திரை வர்த்தகத்தில் தன்னுடைய நிலையை வலுவாக்கி கொண்டு  இருக்கிறார்.இந்த வருடம் வெளி வர இருக்கும் அவரது படங்கள் அவரை இன்னமும் உயரத்தில் கொண்டு போகும் என எதிர்பார்க்க படுகிறது. அந்த வகையில் ஆர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் "பூமராங்"  மிகவும் எதிர்பார்க்க படுகிறது..அவருடன்  மேகா ஆகாஷ் மற்றும் உபன் படேல் நடிப்பில்  உருவாகிவரும்  படம் 'பூமராங்'. இந்த படத்தை R கண்ணனின் 'மசாலா பிக்ஸ்' நிறுவனம் தயாரிக்கி ன்றது. இந்த படத்தின் ஒவ்வொரு அறிவிப்புமே தமிழ் சினிமா ரசிகர்கள்களின் கவனத்தை ஈர்த்துவருகின்றது. மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படம் தயாராகிவருகின்றது. இந்த படத்தின் ஒரு பாடலுக்காக  இப்படத்தின் கலை இயக்குனர் ஷிவா யாதவ் ஒரு கோடி ருபாய் செலவில் ஒரு மிக பிரம்மாண்ட செட்டை எழுப்பியுள்ளார் என்பதே தற்பொழுதைய சுவாரஸ்யமான செய்தி.இந்த பாடல் , பிரம்மாண்டமான செட் மற்...
சாட்சிகள் சொர்க்கத்தில்… அதிர வைக்கும் பாலச்சந்திரன் படுகொலை படத்தின் ட்ரைலர்

சாட்சிகள் சொர்க்கத்தில்… அதிர வைக்கும் பாலச்சந்திரன் படுகொலை படத்தின் ட்ரைலர்

CINI NEWS, திரைப்படங்கள்
இலங்கையில் நடந்த இனப்படுகொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய  'சாட்சிகள் சொர்க்கத்தில்' (Witness in Heaven) படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.  ஏராளமான தமிழர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி மிகவும் உணர்ச்சிப்பூர்வமான ஒன்றாக அமைந்துவிட்டது. படத்தின் ட்ரைலர் பார்ப்பவர்களை உலுக்கியெடுத்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன், பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படுகொலையை மையமாக வைத்து ஈழன் இளங்கோ ஒளிப்பதிவு இயக்கியுள்ள படம் இது. அதே நேரம் போரில் நடந்த விஷயங்கள் எதையும் காட்சிப்படுத்தவில்லை. பாலச்சந்திரன் படுகொலையை மட்டுமே பிரதானப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்துக்கு சதீஷ் வர்ஷன் இசை அமைத்துள்ளார். சாட்சிகள் சொர்க்கத்தில் படம் உலகெங்கும் விரைவில் வெளியாகவிருக்கிறது. டிரைலர் காண  க்ளிக்...