மக்கள் புரட்சியை சொந்தம் கொண்டாட வரவேண்டாம் விஷாலுக்கு சினிமா தயாரிப்பாளர் கடும் கண்டனம்
மக்கள் புரட்சியை சொந்தம் கொண்டாட வரவேண்டாம்
விஷாலுக்கு சினிமா தயாரிப்பாளர் கடும் கண்டனம்
இது குறித்து திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான சுரேஷ்காமாட்சி வெளியிட்டிருக்கும் அறிக்கை விவரம்:
விஷால் அவர்களுக்கு,
இந்தச் சமூகம் பல இழிவு நிலைகளை கடந்து வந்திருக்கிறது.
எங்கள் இனத்தை கொத்துக் கொத்தாய் காவுகொடுத்திருக்கிறோம்.
எங்கள் மீனவர்கள் இரத்தத்தை கடல் அரக்கர்களின் துப்பாக்கிக் குண்டுகள் தினமும் ருசி பார்த்துக்கொண்டே இருக்கிறது.
எங்களின் உரிமைகள் பலதும் பறிக்கப்பட்டுவிட்டது. எங்கள் மொழி சிதைக்கப்படுகிறது. உணர்வுகள் மழுங்கடிப்பட்டுவிட்டது.
எத்தனையோ போராளிகள் தட்டி எழுப்பி தட்டி எழுப்பி இன்று உணர்வுபெற்றிருக்கும் எம் மக்கள் கொழுந்துவிட்டு தீப்பந்தமாய் தற்போது மாறி நிற்கிறார்கள்.
மக்கள் மட்டுமல்ல.. மாணவ இளஞ்சிங்கங்கள் இன்று தங்கள் முழுபலத்தையும் காட்டியிருக்கிறார்கள்.
அய்யா இது எங்கள் போ...
