மைக்கேல் ராயப்பனுக்கு பணம் வாங்காமல் படம் நடித்து கொடுக்கிறேன் – கீ பட ஆடியோ விழாவில் விஷால் வாக்குறுதி
மைகேல் ராயப்பன் - சிம்பு பிரச்சனையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? - விஷால் விளக்கம்
காலீஸ் இயக்கத்தில் நடிகர் ஜீவா - நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் கீ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது.
இதில் இயக்குநர் காலீஸ், ஜீவா, நிக்கி கல்ராணி உள்ளிட்ட கீ படக்குழுவினரும், விஷால், விஜய் சேதுபதி, மைக்கேல் ராயப்பன், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் பேசும் போது, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் குறித்து மைக்கேல் ராயப்பன் கொடுத்த வழக்கு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேட்டார். இதனால் இசை வெளியீட்டு விழாவில் சலசலப்பு ஏற்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய விஷால், முதலில் கீ படத்தின் பாடல்களும், டிரைலரும் சிறப்பாக வந்திருப்பதாக கூறி, படத்தில் ஜீவா, இயக்குநர்...









