ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடக்க ராணுவமா?: தேசியக் கொடியை உங்கள் உடம்பில் போர்த்திக் கொள்ளுங்கள் சிம்பு யோசனை
ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடக்க ராணுவமா?:
தேசியக் கொடியை உங்கள் உடம்பில் போர்த்திக் கொள்ளுங்கள் சிம்பு யோசனை
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு அறவழியில் போராட்டம் நடத்தவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வருகிறார். அவரும், தனது வீட்டின் முன்பு அறவழியில் அமைதியான போராட்டத்தை நடத்தினார். அவரைப்போலவே லட்சக்கணக்கான இளைஞர்களும் - மாணவர்களும் சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டக்காரர்களை அடக்குவதற்காக சென்னை மெரீனாவில் ராணுவத்தை குவிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்ததையடுத்து, சிம்பு ஒரு விஷயத்தை போராட்டக்காரர்களிடையே பகிர்ந்தார். அப்போது அவர் பேசும்போது, போராட்டக்காரர்களை அடக்குவதற்காக மெரீனாவில் ராணுவத்தை குவிக்கப்போவதாக சொல்கிறார்கள். உடனே, என்னுடைய நண்பர்கள் எனக்கு ஒரு யோசனையை சொன்னார்கள்.
அதாவது, தேசியக் கொடியை உ...
