இயக்குனரின் ஆழ்மன அழுக்கை வெளிப்படுத்தும் “ஸ்பைடர்” – விமர்சனம் கோடங்கி
இயக்குனரின் ஆழ்மன அழுக்கை வெளிப்படுத்தும் "ஸ்பைடர்" -
விமர்சனம் கோடங்கி
மித மிஞ்சிய பணம், தகுதிக்கு மீறிய செல்வாக்கு, தான் என்ற ஆணவம் இவை எல்லாம் எப்போது ஒரு நல்ல படைப்பாளிக்குள் நுழைகிறதோ அப்போது அவன் கற்பனைகள் பயன்படாமல் ... திறமைகள் பயன்படுத்தப் படாமல் பாழடைந்து கிடக்கும் இடங்களில் கிழிந்து தொங்கும் சிலந்தி வலை போல ஆகிவிடும். அப்படி ஒரு நிலையில்தான் இருக்கிறது ஏ.ஆர்.முருகதாசின் "ஸ்பைடர்"..
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இதுவரை இப்படி ஒரு கேவலமான படத்தை கொடுத்தது இல்லை.
எந்த ஒரு படைப்பும் இயக்குனரின் திறமையை காட்டும் கண்ணாடி என்பார்கள். ஸ்பைடர் கண்ணாடி காட்டும் திறமை ஆழ் மன அழுக்கும், ஆணவமும், எதை எடுத்தாலும் ரசிக்க ஒரு கூட்டம், கை தட்ட ஒரு கூட்டம், பணத்தை கோடிகளில் கொட்ட ஒரு கூட்டம் என்ற மமதையை வெளிப்படுத்துகிறது.
ஸ்பைடர் படு தோல்விக்கும், மோசமான விமர்சனம் வாங்க...









