ரெட்ரோ விமர்சனம் 3.5/5
ரெட்ரோ விமர்சனம் 3.5/5
சூர்யாவின் ஆக்ஷன் அதிரடி வரிசையில் இணைந்த ரெட்ரோ. அப்ப கதை???
தூத்துக்குடியில் வளர்ப்பு தாய் மற்றும் வளர்ப்பு தந்தையின் உதவியோடு வளர்கிறார் சூர்யா. வளர்ப்பு தாய் இறந்துவிட, வளர்ப்பு தந்தையான ஜோஜூ ஜார்ஜ் சூர்யாவை ஒரு அடியாளாக வளர்த்து வருகிறார்.
பல அடிதடி, கொலைகளை செய்த சூர்யா, பூஜா ஹெக்டேவை சந்தித்ததும் காதல் கொள்ள, அவரை திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். அடிதடியை முழுவதுமாக விட்டதால் சூர்யாவை மணமுடிக்க சம்மதம் தெரிவிக்கிறார் பூஜா. திருமணநாளன்று, வெளிநாட்டிற்கு கடத்தப்படவிருந்த கடத்தக் பொருளை மறைத்து வைத்து அதனை ஜோஜூவிடம் தர மறுக்கிறார் சூர்யா. இனி கடத்தை செய்ய மாட்டேன் என்றும் கூறி விடுகிறார் சூர்யா.
இதனால், இருவருக்கும் கடும் மோதல் நிலவ, ஜோஜூவின் கையை வெட்டி, ஜெயிலுக்குள் சென்று விடுகிறார் சூர்யா. சூர்யா மீது கோபம் கொண்ட...









