சனிக்கிழமை, ஜூலை 4
Shadow

Author: Kodanki

சூர்யாவுக்காக எழுதப்பட்டது சண்டக்கோழி 2  கதை – விஷால்

சூர்யாவுக்காக எழுதப்பட்டது சண்டக்கோழி 2 கதை – விஷால்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சண்டக்கோழி 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது சண்டக்கோழி படம் எனக்காக எழுதப்பட்டது இல்லை என்று விஷால் கூறியுள்ளார். லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், வரலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சண்டக்கோழி 2’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில், படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது பேசிய விஷால் கூறுகையில், இப்படத்தைப் பற்றி பேசுவதற்கு முன்பாக, சண்டக்கோழி படத்தைப் பற்றி கூற விரும்புகிறேன். சண்டக்கோழி படத்தின் கதை எனக்காக எழுதப்பட்டது கிடையாது. முதலில் சூர்யாவுக்காகத் தான் இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக கதையைப் பற்றி நான் தெரிந்து கொண்டேன். அதன் பிறகு, லிங்குசாமியை சந்தித்து இப்படத்தில் நான் நடிக்கிறேன் என்றேன். சிறிது நேரம் யோசித்துவிட்டு சரி என்றார். இதையடுத்த...
குலுமணாலியில் கடும் மழை, வெள்ளம், நிலச்சரிவால் ஷூட்டிங் கேன்சல் ஆன கார்த்தியின் தேவ் படம்!

குலுமணாலியில் கடும் மழை, வெள்ளம், நிலச்சரிவால் ஷூட்டிங் கேன்சல் ஆன கார்த்தியின் தேவ் படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  குலு மணாலியில் ஏற்பட்ட கன மழை , பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் நின்றது கார்த்தியின் “ தேவ் “ பட படப்பிடிப்பு ! கார்த்தியின் தேவ் திரைப்படத்தின் படப்பிடிப்பு குலு மணாலியில் நடைபெறுவதாக இருந்தது. கன மழை , பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் தேவ் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் 140 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி தவித்து வருகிறார்கள். இதை பற்றி நடிகர் கார்த்தி கூறும் போது , தேவ் படத்தின் படப்பிடிப்பை குலு மணாலியில் அழகிய மழை மற்றும் பனிச்சாரலுக்கு நடுவே படம்பிடிக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். ஆனால் திடீரென்று நேற்று நிலைமை மிகவும் மோசமானது. வெள்ளம் மற்றும் நில சரிவு ஏற்பட்டு. கார் , பஸ் மற்றும் பல பொருட்களை அடித்து சென்றது. நிலச்சரிவினால் பாறைகள் உருண்டு வந்ததை நானே கண்டேன். வேகமாக வந்த வெள்ளம் சின்ன சின்ன பாறைகளை அடித்து வந்தது....
சென்சார் அதிகாரிகள் பாராட்டிய “பரியேறும் பெருமாள் “

சென்சார் அதிகாரிகள் பாராட்டிய “பரியேறும் பெருமாள் “

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பரியேறும் பெருமாள் பிஏபிஎல் திரைப்படத்தை பாராட்டிய தணிக்கை குழுவினர்கள். இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் பரியேறும் பெருமாள் பிஏபிஎல். கதிர் , கயல் ஆனந்தி, யோகிபாபு , லிங்கேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள், ஸ்ரீதர் ஒளிப்பதிவில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற செப்டம்பர் 28ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. சமீபத்தில் பரியேறும் பெருமாள் பிஏபிஎல் திரைப்படத்தினை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் அதிகாரிகள் எந்த இடத்திலும் கட் சொல்லாமல் படத்திற்கு U சான்றிதழை வழங்கியிருக்கிறார்கள். படத்தின் கதை மற்றும் கதைக்களத்தை வெகுவாக பாராட்டிய அதிகாரிகள் இயக்குனர் மாரிசெல்வராஜிடமும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் திடமும் , இரண்டு இடங்களில் மட்டும் மியூட் செய்ய சொல்லிய அதிகாரிகள், இந்த படத்தில் எந்த இடத்திலும...
கவனம் ஈர்க்கும் பிரியாவின் பொன்மாலைப் பொழுது..!

கவனம் ஈர்க்கும் பிரியாவின் பொன்மாலைப் பொழுது..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
VIBGYOR க்ரியேடிவ்ஸ் வழங்கும் பொன்மாலை பொழுது என்கிற குறும்படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்துள்ளார் பிரியாதர்ஷினி. தந்தி டிவி உட்பட சில சேனல்களில் ப்ரீலான்ஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக, அதன்பின் விளம்பரப்படங்களில் உதவியாளராகவும் பணிபுரிந்த இவரது இயக்குனர் கனவுக்கு ஆரம்ப விதை போட்டுள்ளது இந்த 'பொன்மாலை பொழுது' குறும்படம்... சமீபத்தில் இந்த குறும்படம் பெங்களூரில் நடைபெற்ற சர்வதேச குறும்பட திருவிழாவில் கலந்துகொண்டு பாராட்டுக்களை பெற்றுள்ளதால் உற்சாகத்தில் இருக்கிறார் பிரியா. குறும்பட திருவிழாவில் கலந்துகொள்வதற்கான படமாக இதை எடுக்கவில்லை என்றாலும், இதை பார்த்தவர்கள் கொடுத்த உற்சாகத்தினால் விழாவிற்கு அனுப்பியதாக கூறுகிறார் பிரியா. முன்னாள் காதலர்கள் இருவர் ஏதேச்சையாக ஒரு காபி ஷாப்பில் சந்தித்துக்கொள்கிறார்கள்.. ஆனால் அவர்களின் புது ஜோடிகளுடன். அந்த 15 நிமிட சந்திப்பில் இருவருமே மைன்ட் ...
மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்த விக்ரம்

மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்த விக்ரம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து வசூல் சாதனை நிகழ்த்திய ‘அர்ஜுன்ரெட்டி’ படத்தின் தமிழ் பதிப்பாக ‘வர்மா’ உருவாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டு மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்து பேசினார். அவர் கூறும்போது, ‘‘இயக்குனர் பாலா தனது படங்களில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார். அவரது இயக்கத்தில் எனது மகன் துருவை கதாநாயகனாக அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன்’’ என்றார். துருவ் பேசும்போது, ‘‘நான் நிறைய தமிழ் படங்கள் பார்ப்பேன். குறிப்பாக எனது தந்தை விக்ரம் நடிக்கும் படங்களை இரண்டு மூன்று தடவை கூட பார்ப்பது உண்டு. எனது தந்தைக்கு நான் தீவிர ரசிகன். சேது படத்தில் எனது தந்தை நடிப்புக்கு இயக்குனர் பாலா உயிர் கொடுத்து இருந்தார். அதே போல வர்மா படத்திலும் எ...
2018-ம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு – மெர்சல் படத்திற்காக விருது

2018-ம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு – மெர்சல் படத்திற்காக விருது

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்'. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் முழுக்க வெளியானது. விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். மெர்சல் படத்திற்காக ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதுக்கு நடிகர் விஜய் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. மெர்சல் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் மற்றும் சர்வதேச சிறந்த நடிகர் என இரு பிரிவுகளில் விஜய் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். அதற்காக இணையதளத்தில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இறுதிப்பட்டியலில் இடம்பிடித்த நடிகர் விஜய், தற்போது சிறந்த நடிகராக தேர்வு செய...
இசைக் கலைஞராகும் விஜய் சேதுபதி

இசைக் கலைஞராகும் விஜய் சேதுபதி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் விஜய் சேதுபதி அறிமுக இயக்குநர் ரோகநாத் வெங்கட் கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது குறித்து இயக்குனரிடம் கேட்டபோது, “நான் இந்தக் கதையின் ஒன்லைனை ஜனநாதன் சாரிடம் சொன்னேன். அவர்தான் விஜய் சேதுபதியிடம் சொல்லிப்பார் என்றார். அவரிடமும் ஒன் லைன் சொல்ல அவருக்கும் பிடித்திருந்தது. பிறகு படத்தின் மொத்தக் கதையையும் எழுதி முடித்துவிட்டு அவரிடம் சொல்ல அவரும் ஓகே சொல்லிவிட்டார். இசையைப் பற்றியும் சர்வதேச அளவில் நடந்துவரும் ஒரு பிரச்னை குறித்தும் பேச இருக்கிறேன். இதில் இசைக் கலைஞராக விஜய்சேதுபதி நடிச்சிருக்கார். அதற்காக, பியானோ, கிட்டார் என கற்று வருகிறார். வெளிநாட்டு பெண் ஒருவர் அவருடன் நடிக்கிறார். ஹீரோயின் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும்“ என்றார்....
முதல்வரை அடிப்பேன்…  திமிர் பேச்சு… அதிகாலையில் கருணாஸ் கைது..!

முதல்வரை அடிப்பேன்… திமிர் பேச்சு… அதிகாலையில் கருணாஸ் கைது..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
முதல்வரை அடிப்பேன்ன்னு அவர் பயப்படுகிறார். ஒரு நாளைக்கே சரக்குக்கு மட்டும் 1 லட்சம் செலவு செய்றேன் என்பது உட்பட பல சர்ச்சை கருத்தை பொது மேடையில் திமிராக பேசிய கருணாஸ் இன்று அதிகாலை போலீசாரால் கைது செய்யப்பட்டார். நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் சார்பில் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார். காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சவால் விடுத்த அவர், முடிந்தால் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதிப்பார்க்குமாறு சவால் விடுத்தார். ஜாதி ரீதியாகவும் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கருணாஸ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது நுங்கம்பாக்கம...
உடல் நலனில் அதிக அக்கறை செலுத்தவேண்டும் பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ முகாமில் நடிகர் கார்த்தி பேச்சு

உடல் நலனில் அதிக அக்கறை செலுத்தவேண்டும் பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ முகாமில் நடிகர் கார்த்தி பேச்சு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், வீடியோ
  உடல் நலனில் அதிக அக்கறை செலுத்தவேண்டும் பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ முகாமில் நடிகர் கார்த்தி பேச்சு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் பிரசாந்த் ஆஸ்பத்திரியும் இணைந்து சென்னையில் சினிமா பத்திரிகையாளர்கள், சினிமா பி.ஆர்.ஓ., உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த இலவச மருத்துவ முகாமை தமிழ் சினிமாவின் கடைக்குட்டி சிங்கம் நடிகர் கார்த்தி துவக்கி வைத்து பேசும்போது: பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ முகாமை தொடங்கி வைக்க என்னை அழைத்ததற்கு முதலில் இந்த சங்கத்தின் நிர்வாகிகளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். சங்கம் நடத்துவது அத்தனை சுலபம் இல்லை. அதிலும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிற பத்திரிகையாளர்கள் சங்கத்தை நடத்துவது ரொம்ப சிரமம். சங்க வேலைகள் பெரும் நேரத்தை எடுத்துக் கொள்ளும். குடும்பத்தை கவனிக்கவே முடியாமல் போய்விடும். https://you...
தாமரையின் ரெக்கார்டு ரெய்டு…! சிக்கிய பிரபலத்தின் சீக்ரெட்..!! அதிர்ச்சியில் நடிகை ஷாக்..!!!

தாமரையின் ரெக்கார்டு ரெய்டு…! சிக்கிய பிரபலத்தின் சீக்ரெட்..!! அதிர்ச்சியில் நடிகை ஷாக்..!!!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
தாமரையின் ரெக்கார்டு ரெய்டு...! சிக்கிய பிரபலத்தின் சீக்ரெட்..!! அதிர்ச்சியில் நடிகை ஷாக்..!!! செய்தியின் தலைப்பை பார்த்ததும் ஏதோ சினிமா செய்திபோல என்று நினைத்தால் இன்னும் நீங்கள் பச்சபுள்ளையாகவே இருக்கிறீர்கள் என்று அர்த்தம்... அதேநேரம், இதில் ஏதோ ஒரு அரசியல் கலந்திருக்கிறது என்று யோசித்திருந்தால் சபாஷ்... போட்டுக் கொள்ளுங்கள்... சமீபத்திய தமிழக நிகழ்வுகளில் அடிக்கடி பேசப்படுபவை வருமானவரித்துறை ரெய்டு... அதிலும் குறிப்பாக அரசியல்வாதிகளை மட்டுமே குறிவைத்த ரெய்டு சமீப காலமாக அதிகாரிகள் வீடுகளுக்கும் பரவியிருக்கிறது. ஆட்சியாளர்களுக்கு சாதமாக நடந்து கொள்ளாமல்போனால் இதுபோன்ற ரெய்டு பயமுறுத்தல்கள் எல்லா ஆட்சியிலும் வழக்கமான ஒன்றுதான். அதிலும் கடந்த 4 ஆண்டுகளில் வருமானவரித்துறை இத்தகைய ரெய்டுகளிலேயே பல மாநிலங்களில் ஆட்சிமாற்றங்கள் நடந்திருக்கிறது என்றாலும் அது மிகையில்லை... விஷயம் ரெ...