வெள்ளிக்கிழமை, ஜூலை 3
Shadow

Author: Kodanki

முழுமையான காதல் படமாம் “பார்த்திபன் காதல்” சொல்கிறார் இயக்குனர் வள்ளிமுத்து..!

முழுமையான காதல் படமாம் “பார்த்திபன் காதல்” சொல்கிறார் இயக்குனர் வள்ளிமுத்து..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
எஸ் சினிமா கம்பெனி என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம்   “ பார்த்திபன் காதல் “ இந்த படத்தில் யோகி  கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வர்ஷிதா அறிமுகமாகிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படம் பற்றி இயக்குனர் வள்ளிமுத்து.. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி புதிய களத்தில் இளமை கொஞ்சும் காதல் கதையாக உருவாக இருக்கிறது. அறிமுக நாயகன் யோகி  ஓவிய கல்லூரி மாணவனாக நடிக்கிறார். இளம் கதாநாயகி வர்ஷிதா கிராமத்து கல்லூரி மாணவியாக நடிக்கிறார். சமீப கலாமாக தமிழ் சினிமாவில் காமெடிப்பேய் படங்களும், ஆக்ஷன் படங்களும் வந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் “ பார்த்திபன் காதல் “ ஒரு முழுமையான காதல் கதையாக உருவாகிறது. கும்பகோணம், ராஜபாளையம், தென்காசி போன்ற இடங்களில் விரைவில் படபிடிப்பு நடக்க இருக்கிறது என்றார் இயக்குனர் வள்ளிமுத்து.  ...
சரத்குமாரின் “வேளச்சேரி துப்பாக்கிசூடு”

சரத்குமாரின் “வேளச்சேரி துப்பாக்கிசூடு”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு' காவல்துறை-மனித உரிமை ; இரண்டு தரப்பு நியாயத்தை பேசும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு' சரத்குமார்-இனியா அதிரடியாக மோதும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு' வடமாநில இளைஞர்களின் அட்டகாசத்தை வெளிக்கொண்டு வரும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு' V .R .மூவிஸ் சார்பாக்க T.ராஜேஸ்வரி  தயாரிப்பில் உருவாகிவரும் படம் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'.. S.T..வேந்தன் இந்தப்படத்தை இயக்குகிறார். இவர் ஷாம்-சினேகா நடித்த இன்பா மற்றும் மயங்கினேன் தயங்கினேன் ஆகிய படங்களை இயக்கியவர். இந்த புதிய படத்தில் சரத்குமார் என்கவுன்டர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.. கதாநாயகியாக மனித உரிமை கழக அதிகாரியாக இனியா நடிக்கிறார். மற்றும் இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, தீபக் படத்தொகுப...
சிவாஜி கணேசன் பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிப்பு – தமிழக அரசுக்கு நடிகர் பிரபு பாராட்டு

சிவாஜி கணேசன் பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிப்பு – தமிழக அரசுக்கு நடிகர் பிரபு பாராட்டு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு நடிகர் பிரபு பாராட்டு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து நடிகர் பிரபு கூறியதாவது:- ‘சிவாஜி கணேசன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. இது எங்கள் குடும்பத்தின் கோரிக்கை என்பதைவிட, தமிழக மக்களின் நீண்டநாள் விருப்பமாக இருந்தது. ஒவ்வொரு தமிழர்களின் வீடுகளிலும் அவர்களுடைய குடும்பத்தில் ஒருவராக எங்கள் தந்தை வாழ்கிறார். அரசியலுக்கு அப்பாற்பட்டவர். தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் மிக சிறப்பாக பிரதிபலித்தார். சமூக நற்பணிகளுக்காக நிறைய உதவிகள் செய்து இருக்கிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் சட்டசபையில் சிவாஜி கணேசனை பாராட்டி பேசி உள்ளனர். அவர் மீது ரசிகர்கள் இன்றைக்கும் அன்பாக இருக்கிறார்கள். அவருக்கு சிறப்பு சேர்த்துள்ள முதல்-அமைச்சர் ...
வில்லனாக களமிறங்கும் மனோஜ் பாரதிராஜா

வில்லனாக களமிறங்கும் மனோஜ் பாரதிராஜா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவில் வித்தியாசமான தலைப்புகளுடன் புதுப்படங்கள் வந்த வண்ணமாக உள்ளன. அந்த வரிசையில் முற்றிலும் மாறுபட்ட தலைப்புடன் உருவாகி வரும் திரில்லர் படம் தான் `ரெடி டு சூட்'. எஸ்.எஸ்.வி எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.ஆறுமுகம் தயாரிக்கும் இந்த படத்தின் படத்தின் பூஜை, சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. மனோஜ்குமார் இதயராஜ் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தில் ஆனந்த் நாக் நாயகனாக நடிக்கிறார். இவர் நேரம், பிரேமம், வெற்றிவேல் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஆனந்த் நாக் ஜோடியாக ஜீவிதாவும், வில்லனாக பாரதிராஜாவின் மகன் மனோஜ் கே.பாரதிராஜாவும் நடிக்கின்றனர். சதீஷ் கதிர்வேல் ஔிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். முழுக்க முழுக்க திரில்லர் கதையாக உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவ...
மகன் கவுதமுக்கு அப்பாவாகவே Mr.சந்திரமௌலி படத்தில் நடித்துள்ள கார்த்திக்..!

மகன் கவுதமுக்கு அப்பாவாகவே Mr.சந்திரமௌலி படத்தில் நடித்துள்ள கார்த்திக்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று புகழப்பட்ட கார்த்திக் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து மகன் கவுதமுக்கு அப்பாவாகவே மிஸ்டர் சந்திரமவுலி படத்தில் நடித்துள்ளார். அவரிடம் பேசியதில் இருந்து... நான் கவுதமை வைத்து படம் இயக்குவதற்காக கதை எழுதிக் கொண்டிருந்தேன். அந்த கதை அவருக்கு தெரியாது. ஒருநாள் என்னிடம் வந்து ஒரு கதை கேட்கறீங்களா? என்று கேட்டார். சம்மதித்தேன். திருவை அறிமுகம் செய்துவிட்டு சென்றுவிட்டார். கதை மிகவும் பிடித்ததால் சம்மதித்தேன். நானும் அப்பாவும் சேர்ந்து நடித்ததில்லை. நான் நடிக்க தொடங்கும்போதே அப்பா மறைந்துவிட்டார். அந்த ஏக்கம் எனக்குள் இருந்தது. தனிமையாகவே என்னுடைய சினிமா வாழ்க்கை வேகமாக ஓடியது. அதை சரி செய்ய என்னுடன் நடிக்கும் மூத்த நடிகர்களுடன் மனம் விட்டு பேசுவேன். இப்போது கவுதமிடம் பேசி அவர்கள் உலகத்தை புரிந்துகொள்கிறேன். நிஜ வாழ்க்கையில் நாங்கள் எப்படியோ அப்படித்தான் படத்...
மின்னலால் பறிபோன கல்யாணம் – பீகாரில் வினோதம்

மின்னலால் பறிபோன கல்யாணம் – பீகாரில் வினோதம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
வடமாநிலங்களில் சில திருமணங்கள் வினோத காரணங்களுக்காக மேடையிலேயே நின்றுபோகும் நிகழ்வு அவ்வப்போது நடக்கிறது. உதாரணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாப்பிள்ளை வீட்டாருக்கு ரசகுல்லா இல்லை என்பதற்காக நிறுத்தப்பட்ட கல்யாணம், ஐஸ் கிரீம் வைக்காததால் ஏற்பட்ட தகராறில் மண்டை உடைப்பு என திருமணம் நிறுத்தப்படுவதற்கான காரணங்கள் நீள்கின்றன. இந்த வரிசையில், பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் நடந்த திருமணத்தின்போது மணமேடையில் இருந்த மாப்பிள்ளை மின்னலை பார்த்து பயந்து, வினோதமாக நடந்து கொண்டார். இதனைக் கண்ட மணப்பெண்ணோ மேடையிலேயே மாப்பிள்ளை வேண்டாம் எனக்கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனால் இரு வீட்டாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, மாப்பிள்ளை வீட்டார் சிலர் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது. சில வினாடிகள் தோன்றி மறைந்த மின்னல் மணமகனுக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியா நினைவாக மாறிவிட்டது....
என் தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக வரவேற்பேன் – கமல்ஹாசன்

என் தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக வரவேற்பேன் – கமல்ஹாசன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் இன்று கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா? என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன் என பதிவிட்டுள்ளார்  ...
ஜுலை15ல் உலக MGR பேரவை நடத்தும் பிரமாண்டமான எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா..!

ஜுலை15ல் உலக MGR பேரவை நடத்தும் பிரமாண்டமான எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  உலக எம்.ஜி.ஆர் பேரவை பிரதிநிதிகள் இணைந்து நடத்தும் மாநாடு மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வரும் ஜூலை 15ஆம் தேதி சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. அதனை பற்றிய தகவல்களை வெளியிடும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் உலக எம்ஜிஆர் பேரவை முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை பற்றி பேசினர். எம்ஜிஆர் பக்தர்கள் உலகம் முழுவதும் பரவி, அங்கேயே அமைப்பை தொடங்கி விழா நடத்தி வருகிறார்கள். நானும் ஃபிரான்ஸில் ஒரு அமைப்பை தொடங்கி 15 வருடங்களாக நடத்தி வருகிறேன்.  கடந்த ஆண்டு ஃபிரான்ஸில் மாநாடு நடத்தினோம். அதில் சைதை துரைசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவரிடம் புரட்சி தலைவரின் பக்தர்களை ஓரணியில் இணைப்பது பற்றி நிறைய பேர் வேண்டுகோள் வைத்தனர். அதற்கு செவி சாய்த்து துவங்கப்பட்டது தான்...
குழந்தைகளுக்கான படமாம் காட்டேரி சொல்கிறார் இயக்குனர்..!

குழந்தைகளுக்கான படமாம் காட்டேரி சொல்கிறார் இயக்குனர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
குழந்தைகளையும் கவரும் ‘காட்டேரி ’   ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘காட்டேரி’. இந்த படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, மணாலி ரத்தோர், பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா, ஜான் விஜய், குட்டி கோபி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, எஸ் என். பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டீகே.   படத்தைப் பற்றி இயக்குநர் டீகேயிடம் கேட்டபோது,‘ காட்டேரி என்றால் அனைவரும் இரத்தம் குடிக்கும் பேய் என்று நினைக்கிறார்கள். ஆனால் காட்டேரி என்றால் பழைய மனிதர்கள், மூதாதையர்கள் என்று அர்த்தமும் இருக்கிறது.   தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை ஒரு முறை சந்தித்து இப்படத்தின் ஒன் லைனைச் சொன்னேன். அவருக்கு பிடித்துவிட்டது. அத்துடன் இந்த ...