புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

லண்டனில் முதன்முறையாக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தும் அனிரூத்

லண்டனில் முதன்முறையாக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தும் அனிரூத்

CINI NEWS, சினி நிகழ்வுகள்
தமிழ் திரையிசை உலகின் இளம் இசையமைப்பாளரான அனிரூத் முதன்முறையாக இலண்டனில் பிரம்மாண்டாமான முறையில் இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார்.  ஜுன் 16 மற்றும் 17 ஆம் தேதியில் இலண்டன் மற்றும் பாரீஸில் பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்சியை இசையமைப்பாளர் அனிரூத் முதன்முறையாக நடத்துகிறார். இதற்கான ஏற்பாடுகளை ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனமும், ஹியூபாக்ஸ் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனமும் இணைந்து செய்து வருகிறது. இது தொடர்பாக இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது... ஜுன் 16 ஆம் தேதியில் இலண்டனில் உள்ள S S E Wembly Arena என்னுமிடத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் இசை நிகழ்ச்சி நடைபெறும் கலையரங்கத்தின் இணையதளத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை பிரபல இணையதளங்களிலும் ( டிக்கெட் மாஸ்டர்) இன...
காவிரி பிரச்னைக்கான முழு அடைப்பு  முழு வெற்றி! – ஸ்டாலின் ஹேப்பி

காவிரி பிரச்னைக்கான முழு அடைப்பு முழு வெற்றி! – ஸ்டாலின் ஹேப்பி

HOME SLIDER, NEWS, செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி கைதான திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமை கட்சி தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். மேலும் முழு அடைப்புப் போராட்டம் நூறு சதவிகிதம் வெற்றியடைந்துள்ளதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி முதல் கட்டமாக இன்று (ஏப்ரல் 5) முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்க ணக்கானோரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர். மெரினா கடற்கரை முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு, புரசைவாக்கத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், "இதற்கு முன்பு...
அதிமுக உண்ணாவிரத போராட்டம்; எடப்பாடி & பன்னீர் பங்கேற்பு

அதிமுக உண்ணாவிரத போராட்டம்; எடப்பாடி & பன்னீர் பங்கேற்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அதிமுக சார்பில் சென்னையில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றுள்ளனர். காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் கடந்த பிப்ரவரி 16 -ஆம் தேதி முக்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. அந்த தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்கு அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தது. இதற்கிடையே இந்த கெடு கடந்த வியாழக்கிழமை முடிவடைந்தது. எனினும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. மேலும் 3 மாத கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதனால், மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம...
புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவிருக்கிறது. இலங்கையில் தமிழ் ஈழம் அமைவதற்காக அரும்பாடுபட்ட விடுதலை புலிகள் இயக்கத்தினை உருவாக்கியவர் பிரபாகரன். இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் இலங்கை அரசால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க இயக்குநர் வெங்கடேஷ் குமார் முன்வந்துள்ளார். இப்படத்தினை வெங்கடேஷ் தனது சொந்த நிறுவனமான ‘ஸ்டூடியோ 18’ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவிருக்கிறார். இவர் ‘நீலம்’, ‘உனக்குள் நான்’, ‘லைட்மேன்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
ரஜினியின் காலா – படத்துக்கு கிடைத்த U/A சென்சாருடன் ரிலீஸாகுமா?

ரஜினியின் காலா – படத்துக்கு கிடைத்த U/A சென்சாருடன் ரிலீஸாகுமா?

CINI NEWS, திரைப்படங்கள்
காலா படம் அறிவிக்கப்பட்ட தேதியில் வெளிவருமா என எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்துக்கான தணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படம் முதலாவதாக வெளிவருமென எதிர்பார்க்கப்பட்ட வேளையில், காலா படம்தான் முதலாவதாக வெளிவரவிருக்கிறது என்று சொல்லும்விதமாக காலா படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்தார் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ். இதையடுத்து வெளியான காலா டீசரும் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. ஆனால், படம் அறிவிக்கப்பட்ட தேதியில் வெளியாகுமா என்பது இன்றளவும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஏனெனில் தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தப் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே தயாரிப்பாளர்கள் சங்கப் போராட்டம் முடிவை எட்டிய பிறகே அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 27ஆம் தேதி காலா படமானது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் காலா படத்துக்கு...
அழகான பெண்ணுக்கும் அழகில்லாத பையனுக்கும் உள்ள காதலை சொல்லும் “தேவகோட்டை காதல்”

அழகான பெண்ணுக்கும் அழகில்லாத பையனுக்கும் உள்ள காதலை சொல்லும் “தேவகோட்டை காதல்”

MOVIES, திரைப்படங்கள்
ஹப்பாஸ் மூவி லைன் என்ற பட நிறுவனம் தேவகோட்டை காதல் என்ற படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் சீனு என்ற புதுமுகம் கதானாயகனாக நடிக்கிறார். நாயகியாக சுவிதா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.  மற்றும் கஞ்சா கருப்பு பாவாலட்சுமணன் தீப்பெட்டி கணேசன் கிளி ராமச்சந்திரன் மெடிமிக்ஸ் ஏ.வி.அனு சதாந்தன் மனோஜ் சலாம் ஸ்ருதி ரஜினி முரளி வத்சலா டீச்சர் சுஜித்திரா ஆகியோர் நடிக்கிறார்கள் கதை              -        சீனு  திரைக்கதை   -        ARK , PPA ரஹ்மான் பாடல்கள்      -        காதல்மதி  இசை             -        ஜோனபக்தகுமார் எடிட்டிங்        -        இப்ரு ஸ்டண்ட்        -        ஜீரோஸ் நடனம்           -        ராஜேஷ் ஒளிப்பதிவு    -        ரஞ்சித் ரவி இணை தயாரிப்பு  -    பீனா காசிம், வத்சலா டீச்சர் சபீனா .கே எழுதி இயக்குகிறார்  -   A.R.K. இவர் இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணாவிடம் உதவியாளராக பணியாற்றியவர். ...
திறமை, அழகு மற்றும் நேர்த்தியான பண்பால் வசியப்படுத்தும் ஆளுமை அம்ரிதா !

திறமை, அழகு மற்றும் நேர்த்தியான பண்பால் வசியப்படுத்தும் ஆளுமை அம்ரிதா !

CINI NEWS, சினி நிகழ்வுகள்
திறமை மற்றும் ஆற்றல் வளத்தை தாண்டி கவர்ந்து இழுக்கும் ஆளுமை எல்லோரையும் தன் வசம் வசியப்படுத்தும். அந்த மாதிரி உதாரணங்கள் மிகவும் அரிது, அதில் ஒருவர் தான் அம்ரிதா. படை வீரன் படத்தில் அவரின் நம்பிக்கை அளிக்கக்கூடிய திரை ஆளுமை மற்றும் பாராட்டை குவிக்கக் கூடிய நடிப்பை பார்த்தவுடன் அவர் கலைக்குடும்ப பின்னணியில் இருந்து வந்திருப்பார் அல்லது நடிப்பு பயிற்சி பெற்றவராக இருப்பார் என எல்லோரும் நினைத்தனர். ஆனால், "நான் பி காம் பட்டதாரி, என்னுடைய குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த முதல் ஆள் நான் தான். எந்த நாடக பின்னணியும் இல்லை, சில குறும்படங்கள், விளம்பர படங்கள், இசை ஆல்பங்களில் நடித்திருக்கிறேன், அது தான் எனக்கு படை வீரன் பட வாய்ப்பை பெற்று தந்தது" என சர்ப்ரைஸ் கொடுக்கிறார் அம்ரிதா. மேலும் விரைவில் வெளியாக இருக்கும் காளி படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும...
சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் நடிகர் ரஜினிகாந்த் !

சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் நடிகர் ரஜினிகாந்த் !

HOME SLIDER, NEWS, செய்திகள்
 நாட்டின் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் நடிகர் ரஜினிகாந்த் 78-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவில் உள்ள சக்தி வாய்ந்த மனிதர்கள் குறித்து பிரபல ஆங்கில நாளிதழ் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் 100 பேரை தேர்வு செய்து ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா 2-வது இடமும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா 3-வது இடமும், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் 4-வது இடத்திலும் உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இந்தப் பட்டியலில் 5-வது இடம் பிடித்துள்ளார். இந்தப்பட்டியலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 64-வது இடம் கிடைத்துள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 65-வது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் ரஜினிகாந்த் 78-வது இடத்தைப் பிடித்துள்ளார். விரைவில் அர...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்ட களத்தில் கமல்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்ட களத்தில் கமல்!

HOME SLIDER, NEWS
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. வர்த்தகர்கள், விவசாயிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆலைக்கு எதிராகப் போராடி வருகின்றனர். இஆணீஆஈஏஏ ஆலையின் விரிவாக்கத்தை எதிர்த்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் குமரெட்டியாபுரம் மக்களை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்களின் தொடர் போராட்டத்தை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. விளம்பரத்திற்காக நான் இங்கே வந்திருப்பதாக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறி உள்ளார். நான் 5 வயதிலேயே கேமிரா முன்பாக வந்தவன். ஆயிரம் கேமிராவைக் கண்டவன். மக்களே எனக்கு தேவைக்கு அதிகமான விளம்பரத்தை தேடித் தந்திருக்கிறார்கள். அதனால், நான் விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் போராட்டத்தில் பங்கேற்காமல் இருக்க ரூ.5 க...