ஏப்ரல் 5-ம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 5ம் தேதி தமிழகத்தில் அனைத்துக் கட்சிசார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க .ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வரும் நிலையில், பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சியான திமுக சார்பில், அதன் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது..
இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், காவிரி விவகாரம், நியூட்ரினோ ஆய்வு மற்றும் மீத்தேன் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு மற்றும் தி.க. மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. தே.மு.தி.க.விற்கு தி.மு.க. சார்பில் கூ...









