புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

நான்கு மொழிகளில் தயாராகும் மன்சூரலிகானின் “கடமான்பாறை“

நான்கு மொழிகளில் தயாராகும் மன்சூரலிகானின் “கடமான்பாறை“

MOVIES, திரைப்படங்கள்
பிரபு நடித்த வேலை கிடைச்சுருச்சு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதற்கு பிறகு எல்லா மொழிகளிலும் 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன் ஏராளமான படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார்.   அடுத்ததாக அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “ கடமான்பாறை “ என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக  நடிக்கிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா...
ஆதார் தகவல்களை இணையத்தில் பகிரும் போது பீ கேர்ஃபுல்! – ஆணையம் வார்னிங்

ஆதார் தகவல்களை இணையத்தில் பகிரும் போது பீ கேர்ஃபுல்! – ஆணையம் வார்னிங்

HOME SLIDER, NEWS, செய்திகள்
எந்த ஒரு சேவையையும் பெறுவதற்கு ஆதார் தகவல்களை இணையதளத்தில் பகிரும்போது, முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு ஆதார் ஆணையம் திடீரென எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்கங் களைக் கொண்ட ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு ஆதார் அடையாள எண் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் உள்ளதால், ஆதார் வழக்குகளில் இறுதி தீர்ப்பு வரும் வரையில், வங்கி கணக்குகளுடனும், செல்போன் உள்ளிட்ட பல்வேறு சேவைகள், சலுகைகளைப் பெறுவதற்கும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட...
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியீடு

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியீடு

CINI NEWS, சினி நிகழ்வுகள்
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கிறது. தலைவர் பதவிக்கு இயக்குநர் கே.பாக்யராஜ்,கவுரவ தலைவர் பதவிக்கு இயக்குநர் விக்ரமன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள இசையமைப்பாளர் சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக கே.பாக்யராஜ்மற்றும் கவுரவ தலைவராக இயக்குநர் விக்ரமன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் செயலாளராக மனோஜ்குமாரும், பொருளாளராக ரமேஷ் கண்ணாவும் போட்டியின்றி தேர்வாகினர். துணைத் தலைவர்களாக ஆர்.கே.செல்வமணி மற்றும் யார் கண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக பேரரசு, மனோபாலா, வெங்கடேஷ், அரிராஜன், லியாகத் அலிகான், சின்னி ஜெயந்த், பாலசேகரன், ...
முத்தரப்பு டி 20 கிரிக்கெட் போட்டி;.இந்திய அணி.திரில் வெற்றி !!

முத்தரப்பு டி 20 கிரிக்கெட் போட்டி;.இந்திய அணி.திரில் வெற்றி !!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முத்தரப்பு டி 20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் வங்காள தேச அணியை வீழ்த்தி இந்திய அணி சாட்பியன் பட்டத்தை வென்றது. இலங்கையில் நிதாஹாஸ் டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இலங்கை அணியை வெளுத்து வாங்கி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வங்கதேச அணியுடன் இந்திய அணி நேற்று மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார். இந்திய அணியில் சிராஜ் நீக்கப்பட்டு உனத்கட் சேர்க்கப்பட்டுள்ளார். வங்காள தேச அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. முதலில் களம் இறங்கிய வங்கதேச அணி முதல் மூன்று ஓவரில் 26 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் லித்தோன் தாஸ் ஆட்டமிழந்தார். அவர் 9 பந்தில் 11 ரன்கள் சேர்த்தார். சுந்தர் இந்த ஓவரில் ஒரு ரன் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். அடுத்த ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவ...
நடராஜன் உடல் நிலை கவலைக்கிடம்: பரோல் கேட்கிறார் சசிகலா!

நடராஜன் உடல் நிலை கவலைக்கிடம்: பரோல் கேட்கிறார் சசிகலா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், கணவரைப் பார்ப்பதற்காக சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புதிய பார்வை ஆசிரியரும், சசிகலா கணவருமான நடராஜன் கல்லீரல் பிரச்சினை காரணமாகச் சென்னையை அடுத்த குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்குக் கடந்த அக்டோபர் மாதம் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நடராஜன், வெளிநிகழ்வுகளில் கலந்துகொள்ளாமல் வீட்டிலிருந்தபடியே ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் நேற்று நடராஜனுக்குத் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் பெரும்பாக்கத்திலுள்ள குளோபல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடராஜன் உடல்நிலை குறித்து பரவும...
வெற்றிமாறனின்  கம்பெனியுடன் கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் இணைந்து மிக மிக அவசரம்  ர்லீஸ்!

வெற்றிமாறனின் கம்பெனியுடன் கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் இணைந்து மிக மிக அவசரம் ர்லீஸ்!

CINI NEWS, திரைப்படங்கள்
சில படங்கள் திரைக்கு வரும் முன்பே ஒரு அதிர்வை ஏற்படுத்திவிட்டு வரும். காக்கா முட்டை, கோலிசோடா, லென்ஸ், துருவங்கள் 16, அருவி போன்ற படங்கள் வெற்றியைத் தீர்மானித்துவிட்டு மக்களை ஈர்த்த படங்களாக வரிசைப்படுத்தலாம்..  அதேபோல, மிக மிக அவசரம் படத்திற்கான அதிர்வு படம் பார்த்தவர்கள் மூலம் தமிழ் சினிமாவிற்குள் வேகமாகப் பரவி வருகிறது.    பார்த்துப் பார்த்து படம் பண்ணும், நுணுக்கமான தேர்வு மூலம்  சிறு படங்களுக்கு கைகொடுக்கும் இயக்குநர் வெற்றி மாறன் இப்படத்தை வெளியிட முன் வந்ததிலாகட்டும்,    கோலிசோடா2  டத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளவரும், முக்கியமான திரையரங்குகளில்  படத்தை வெளியிட்டு, அதைத் தெளிவாக மக்களிடம் கொண்டு செல்வதில் நல்ல பெயர் எடுத்திருப்பவருமான கிளாப் போர்டு புரொடக்சன்ஸ் வி சத்தியமூர்த்தி   இயக்குநர் வெற்றிமாறனுடன் இணைந்து வெளியிட முன் வந்திருப்பதிலாகட்டும்,   மிக மிக அவச...
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா- படம் முக்கிய கட்டத்தை எட்டியது!

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா- படம் முக்கிய கட்டத்தை எட்டியது!

CINI NEWS, திரைப்படங்கள்
சினிமா விநியோகத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள ஆரா சினிமாஸ், `அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என்ற படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் நிறைவு பெற்றுள்ளது. `ராஜதந்திரம்' புகழ் வீரா மற்றும் `குக்கூ' புகழ் மாளவிகா நாயர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் இந்த படத்தில் நடித்துள்ளனர். புதுமுகம் அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நமது அரசியல் சூழலை நய்யாண்டித்தனமாக கையாளும் காமெடி படமாகும். சுதர்ஷன் ஒளிப்பதிவில், எட்வர்ட் தயாரிப்பு டிசைனில், பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பில், மாட்லி ப்ளூஸ் இசையில் `அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' உருவாகி வருகிறது. நடிகர்கள் பசுபதி, ரோபோ ஷங்கர், மொட்ட ராஜேந்திரன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ''ஒரு படத்தை கொடுத்த அவகாசத்தில், கொடுத்த பட்ஜெட...
கேரளாவின் மாநிலப் பழமாக பலாப்பழம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது!

கேரளாவின் மாநிலப் பழமாக பலாப்பழம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கேரளாவின் மாநிலப் பழமாக பலாப்பழம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில வேளாண் துறை அமைச்சர் வி.எஸ்.சுனில் குமார் நேற்று (மார்ச் 17) அறிவித்துள்ளார். கேரளாவின் மாநில விலங்கு யானை, பறவை கிரேட் கார்ன்பில், மலர் கன்னிகோனா, மரம் தென்னை, மீன் கரிமீன் எனக் கேரள மாநிலம் அறிவித்துள்ளது. ஆனால், பழம் என்று ஒன்று இது வரை அறிவிக்கப்படவில்லை. வரும் 21ஆம் தேதி, முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை கேரள மாநிலப் பழமாக அங்கீகரித்து முறைப்படி அரசாணையை அம்மாநில அரசு வெளியிடுகிறது. மாநில வேளாண் துறை அமைச்சர் வி.எஸ்.சுனில் குமார் , “கேரளாவில் லட்சக்கணக்கான பலா மரங்களும், பல்வேறு வகையான பலாப் பழங்களும் விளைகின்றன. அதன்மூலம் தயாரிக்கும் பொருள்களை விற்பனை செய்வது மூலம் கேரளாவுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. எனவே, பலாப்பழத்துக்கு மாநிலத்தின் அங்கீகாரத்தை வழங்கி, அதனுடைய உற்பத்தியையும், மதிப்புக்கூட்டு பொருள்களி...
காவிரி விவகாரம்: டி.டி.வி.தினகரன் உண்ணாவிரதம் அறிவிப்பு!

காவிரி விவகாரம்: டி.டி.வி.தினகரன் உண்ணாவிரதம் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 25ஆம் தேதி தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமெனக் கடந்த மாதம் 16ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இத்துடன் நான்கு வாரங்கள் முடிவடைந்த நிலையில், இதுகுறித்து எவ்வித அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை. இதற்காகத் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தினமும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாகத் தமிழக எம்.பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து நேற்று (மார்ச் 17) அமமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உச்ச நீத...
தினகரன் அணியிலிருந்து விலகினார் நாஞ்சில் சம்பத்!

தினகரன் அணியிலிருந்து விலகினார் நாஞ்சில் சம்பத்!

HOME SLIDER, NEWS
 டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள நாஞ்சில் சம்பத், அரசியலிலில் இருந்து விலகுவதாகவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதிமுக-வில் தினகரன் ஓரங்கட்டப்பட்டு அணிகள் இணைப்புக்கு பின்னர், மாவட்டம் தோறும் கூட்டங்களை நடத்தி தினகரனுக்கு ஆதரவாக தீவிரமாக செயல்பட்டு வந்தவர் நாஞ்சில் சம்பத். இவ்வாறு தினகரனுக்கு ஆதரவாக தீவிரமாக செயல்பட்டு வந்த நாஞ்சில் சம்பத், மதுரை மேலூரில் கடந்த 15-ம் தேதியன்று 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்றை அறிவித்த போது, அந்த விழாவில் பங்கேற்கவில்லை. புதிய அமைப்பின் தொடக்க விழாவில் நாஞ்சில் சம்பத் தென்படாமல் இருந்தது பெரிதும் பேசப்பட்டது. ஆனால், குரங்கணி தீ விபத்தில் அவருடைய உறவினர் இறந்து விட்டதால் அவர் வரவில்லை என வெளியில் கூறப்பட்டது. எனினும், அவருக்கும் தினகரனுக்கு கடந்த சில நாட்களாகவே மோதல் போக்கு இருந்து வந்துள்ளத...