புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

திருச்சி காவலரால் உதைக்கப்பட்ட உஷா கர்ப்பிணி அல்ல! – மெடிக்கல் ரிப்போர்ட்

திருச்சி காவலரால் உதைக்கப்பட்ட உஷா கர்ப்பிணி அல்ல! – மெடிக்கல் ரிப்போர்ட்

NEWS, செய்திகள்
திருச்சியில் காவல் ஆய்வாளர் உதைத்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்த உஷா கர்ப்பிணிப் பெண் அல்ல என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி திருவெறும்பூரில் ராஜா - உஷா என்ற தம்பதியர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, வாகனத் தணிக்கைக்கு நிற்காமல் சென்றதாகக் கூறி காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததில் வாகனத்திலிருந்து விழுந்த உஷா வேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது அவர் கணவர், தன் மனைவி உஷா மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி அழுதார். இந்த அழுகுரல் மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தி உஷாவின் மரணத்துக்குக் காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். காவல் ஆய்வாளர் காமராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து விசாரிக்க மனித உரிமை ஆணையமும...
தண்டனைக் கைதியான சசிகலா சிறையில் சீருடை அணியவில்லை: மகளிர் ஆணைய தலைவி தகவல்

தண்டனைக் கைதியான சசிகலா சிறையில் சீருடை அணியவில்லை: மகளிர் ஆணைய தலைவி தகவல்

HOME SLIDER, politics, செய்திகள்
சொத்து குவிப்புவழக்கில் சிறைத்தண்டனை விதிக் கப்பட்ட சசிகலா, பெங்களூரு சிறையில் தொடர்ந்து சிறப்பு சலுகைகள் அனுபவித்து வருவது மீண்டும் தெரிய வந்துள்ளது. சிறையை பார்வையிட்ட தேசிய மகளிர் ஆணைய தலைவியே இதை ஒப்புக்கொண்டுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை விதிமுறைகளை மீறி அவருக்கு சிறையில் தனி சமையலறை, சிறப்பு சொகுசு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கர்நாடக முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா கூறியது கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி உயர் மட்ட விசாரணை நடத்தப்பட்டபோதிலும், அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. இந்தநிலையில் முதல்வர் சித்தராமையா உத்தரவின் பேரில் தான் அனைத்து வசதிகளும் சசிகலாவுக்கு செய...
ஹன்சிகா மீது அவரது மேனேஜர் மோசடி புகார்!

ஹன்சிகா மீது அவரது மேனேஜர் மோசடி புகார்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
ஹன்சிகா மீது அவருடைய மேனேஜர் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ‘எங்கேயும் காதல்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஹன்சிகா. தொடர்ந்து ‘மாப்பிள்ளை’, ‘வேலாயுதம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சிங்கம் 2’, ‘ஆம்பள’, ‘குலேபகாவலி’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். ஜெயம் ரவி, தனுஷ், விஜய், உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சித்தார்த், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால், சிம்பு, பிரபுதேவா என தமிழின் முன்னணி மற்றும் இளம் நடிகர்கள் பெரும்பாலானோருடன் ஜோடியாக நடித்துவிட்டார். மணிரத்னத்தின் உதவியாளர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துவரும் ‘துப்பாக்கி முனை’ மற்றும் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் ஆகியவற்றில் தற்போது நடித்து வருகிறார் ஹன்சிகா. இந்நிலையில், அவரிடம் மேனேஜராகப் பணிபுரிந்த முனுசாமி என்பவ...
சென்னையில் நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி கூட்டம்

சென்னையில் நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி கூட்டம்

CINI NEWS, சினி நிகழ்வுகள்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் அஞ்சலிக் கூட்டம் சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று மாலை நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக போனிகபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் மும்பையில் இருந்து வந்து இருந்தனர். அங்கு ஸ்ரீதேவியின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. பக்தி பாடல்கள் பாடப்பட்டன. பிரார்த்தனையும் நடந்தது. இதில் தமிழ் திரையுலகினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர். தமிழகம் மட்டுமின்றி இந்திய திரைப்பட ரசிகர்களை கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம் 24-ம் தேதி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரின் மரணம் சினிமா ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. தமிழகத்தின் சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி கிராமம் தான் என்பதாலும், தமிழ் திரையுலகிலும், இந்தி திரையுலகிலும் கொடி கட்டி பறந்தவர் என்பதாலும், அவர் மரணம் அடைந்ததை பலர...
குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை

குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை

NEWS, செய்திகள்
குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களுக்காக கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து வைரமுத்து தனது டிவிட்டர் பதிவில்,  “உயிர் வலிக்கிறது; ஊரே அழுகிறது. காட்டுத்தீயில் கருகிய தங்கங்கள்மீது கண்ணீர் சொரிகிறேன். காயப்பட்டவர்கள் பிழைக்க வேண்டுமே என்று பேராசை கொள்கிறேன். பெற்றோர் நிலையில் நின்று பெருவலி உணர்கிறேன். "சாவே உனக்கொருநாள் சாவு வந்து சேராதோ; தீயே உனக்கொருநாள் தீமூட்டிப் பாரோமோ" என்ற கண்ணதாசன் வரிகளைக் கடன்வாங்கிக் கலங்குகிறேன். இந்த விபத்தில் இயற்கையின் பங்கு எவ்வளவு, மனிதப் பங்கு எவ்வளவு என்பது ஆய்வுக்குரியது. மரணத்திலிருந்து பாடம் படிப்போம்; புதிய இழப்புகள் நேராமல் காப்போம்” என்று தெரிவித்துள்ளார் தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்காக சென்றவர்களில் 9 பேர் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தனர். இவர்களில் 6 பேர் சென்னையையும், 3 ப...
விண்ணப்பித்துவிட்டீர்களா..? நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

NEWS, செய்திகள்
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து இன்று மாலை 5.30க்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தனித் தேர்வர்களும் நீட் தேர்வில் பங்கேற்கலாம் என்ற தில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவிட்டது. மேலும் நீட் தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்றும் அதற்கு பதிலாக ரேசன் அட்டை, கடவுச்சீட்டு, வங்கிக் கணக்கு எண், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது அரசு அடையாள அட்டையின் எண்ணைக் குறிப்பிட்டால் போதுமானது. நீட் தேர்வுக்காக வழங்கப்பட்டுள்ள இதர விதிமுறைகள் எதிலும் மாற்றமில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத...
அரசியலில்தான் இருக்கிறேன் ; ஆனா …! – சகாயம் ஐ ஏ எஸ் பேச்சு

அரசியலில்தான் இருக்கிறேன் ; ஆனா …! – சகாயம் ஐ ஏ எஸ் பேச்சு

NEWS, செய்திகள்
'ஊழலை எதிர்த்த அன்றிலிருந்தே அரசியலில்தான் இருக்கிறேன்.. நான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தாலும் கூட ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளேன். எனினும், அரசியல் கட்சிகளோடு இணைந்து செயல்பட சாத்தியம் இல்லை என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கூறியுள்ளார். ‘மாறுவோம் மாற்றுவோம்; என்ற தலைப்பில் இயற்கை விவசாயப் புரட்சிக்கு வித்திட்ட தமிழர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று (மார்ச் 11) நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், இயக்குநர் அமீர், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஆரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், நடிகர் சிவகார்த்திகேயன், விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், இயக்குநர்கள் மோகன் ராஜா, அமீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய இயக்குநர் அமீர் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அரசியலுக்க...
ஞானவேல் ராஜாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ‘ரெட்’ !

ஞானவேல் ராஜாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ‘ரெட்’ !

CINI NEWS, சினி நிகழ்வுகள்
தடையை மீறி விழா நடத்தியதால், ஞானவேல் ராஜாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ‘ரெட்’ போட்டுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் மூலம் படங்களைத் தயாரித்து வருகிறார் கே.இ.ஞானவேல் ராஜா. இவர் தற்போது தயாரித்துவரும் படங்களில் ஒன்று ‘நோட்டா’. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நடித்த விஜய் தேவரகொண்டா இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ ஹீரோயின் மெஹ்ரீன், விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். ‘நோட்டா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. பத்திரிகையாளர் சந்திப்பு, இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட எந்த சினிமா நிகழ்ச்சியையும் நடத்தக்கூடாது என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் உத்தரவு பிறப்பித்து இருந்த நிலையில்,  தடையை மீறி ‘நோட்டா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியதா...
போடி குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி 8 பேர் உயிரிழந்தாக தகவல்

போடி குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி 8 பேர் உயிரிழந்தாக தகவல்

HOME SLIDER, NEWS, செய்திகள்
குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக மீட்புப் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர் பாக்யராஜ் கூறியதாகத் தகவல் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர், ஈரோட்டைச் சேர்ந்த 12 பேர்,சென்னையை சேர்ந்த 24பேர் என மொத்தம் 36 பேர் கொண்ட குழு ஒன்று போடி அருகே குரங்கணி, கொலுக்கு மலைப்பகுதிக்கு மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றுள்ளனர். இந்த மலைக்குச் சூரியநல்லி வழியாகத்தான் செல்ல முடியும். ஆனால், இவர்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வழியாகச் சென்றதாகக் கூறப்படுகிறது. இவர்களில் 8 ஆண்கள்,26 பெண்கள்,3 குழந்தைகள் அடங்குவர்.அதிகமானவர்கள் சென்னையைச் சேர்ந்த தனியார் மென்பொருள் ஐடி ஊழியர்கள். இவர்கள் மலைக்குச் சென்றிருந்த சமயத்தில் அங்கு காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. நேற்று காலை ஏற்பட்ட தீ, மாலையில் அதிவேகமாகப் பரவ தொடங்கியுள்ளது. இதனால் மலைக்குச் சென்றவர்கள் திரும்ப முடியாமல் தீய...
நம்ம திமுக & அதிமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகளின் சொத்துப் பட்டியல்!!

நம்ம திமுக & அதிமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகளின் சொத்துப் பட்டியல்!!

NEWS, செய்திகள்
எக்கச்சக்கமான  சொத்துக்கள் கொண்ட மாநிலக் கட்சிகளில் சமாஜ்வாதி முதலிடத்திலும் திமுக, அதிமுக ஆகியவை முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களையும் வகிப்பதாக ஏடிஆர் அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சிகளின் சொத்து மதிப்பு, வேட்பாளர்கள் மீது உள்ள வழக்குகள் தேர்தல் மற்றும் அரசியல் சம்பந்தமான புள்ளிவிவரங்களை டெல்லியைத் தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்( Association for Democratic Reforms (ADR) என்னும் அமைப்பு ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் மாநில கட்சிகளின் சொத்துகளின் வரவு செலவு கணக்குகள் குறித்த புள்ளிவிவரங்கள் குறித்த ஆய்வறிக்கையை ஏடிஆர் அமைப்பு நேற்று வெளியிட்டுள்ளது. ஆம் ஆத்மி, திமுக, அதிமுக, சமாஜ்வாதி, தேமுதிக, தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, சிவ சேனா உள்ளிட்ட 22மாநிலக் கட்ச...