Author: Kodanki
நீட் டாக்டர் எஸ். அனிதாவாக மாறிய ஜூலி
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக மாணவர்கள் பல போராட்டங்களை நடத்தினர். ஆனால் பலனளிக்கவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தும் தன்னால் நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியவில்லையே என மாணவி அனிதா தற்கொலை செய்துக் கொண்டார்.
இவரது தற்கொலை தமிழ்நாட்டையே உலுக்கியது. அனிதா மரணமடைந்து தற்போது ஓராண்டு நிறைவு அடைந்துள்ள நிலையில் அவரது பெயரில் ஒரு படம் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு ‘டாக்டர் எஸ்.அனிதா எம்பிபிஎஸ்’ என பெயரிட்டு அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
அனிதா கதாபாத்திரத்தில் ஜல்லிக்கட்டு, பிக்பாஸ் புகழ் ஜூலி நடிக்கவுள்ளார். அனிதா வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது....
விஜய் சேதுபதி ‘ஜுங்கா’பட டப்பிங் துவங்கியது..!
விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் ஏ அண்ட் பி குரூப்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஜுங்கா’.
கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா, ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கின்றனர். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாகி இருக்கும் இந்த படத்தின் டப்பிங் பணிகள் சென்னையில் இன்று துவங்கியிருக்கிறது. இதில் இயக்குநர் கோகுல், நடிகர் விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் சித்தார்த் விபின் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.
சமீபத்தில் வெளியான ‘ஜுங்கா’ படத்தின் டீசர் மற்றும் சிங்கள் டிராக்குக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஜுங்கா என்ற கதாபாத்திரத்தில் மாறுபட்ட தோற்றத்தில் டானாக நடிக்கிறார்.
சித்தார்த் விப்பின் இசையமைக்கும் இந்த படம் கோடை விடுமுறைக்கு படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்க...
Kamoora Movie WomensDay Spl Song “Dakanunupo intitna dakanunka”
https://youtu.be/qSG1v5F1QeY
மார்ச் 29ல் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை ரிலீஸ் செய்கிறது பரதன் பிலிம்ஸ்..!
மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் பாஸ்கர் தி ராஸ்கல் .இப்படத்தின் இயக்குனர் சித்திக், தற்போது தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் இயக்கி உள்ளார். பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் கதாநாயகனாக அர்விந்த் சாமி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார்.
இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோருடன் ,மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார்.அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார்.
ஆக்ஷன் மற்றும் காதலை மையமாக கொண்ட பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் பேமிலி ஆடியன்ஸ் மட்டுமில்லாமல் அனைத்து ரசிகர்களளையும் கவரும் வகையில் ஒரு கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது.
'பரதன் பிலிம்ஸ்' இப்படத்தின்...
காலா படத்தில் டப்பிங் முடித்த நானா படேகர்..!
காலா படத்தில் நடித்துள்ள நானா படேகர் தனக்கான தமிழ் மற்றும் ஹிந்தி டப்பிங் பணிகளை முடித்துள்ளார்!
‘கபாலி’ படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும்
பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து ‘காலா’ படத்தை உருவாக்கி உள்ளனர். இப்படத்தினை நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார்.லைக்கா ப்ரொடக்க்ஷன்ஸ் இந்த படத்தினை வெளியிடுகிறது.சந்தோஷ் நாராயணன் இப்படத்திர்ற்கு இசை அமைத்துள்ளார்.மேலும், இதில் சமுத்திரகனி, நானா படேகர்,அஞ்சலி படேல் ,சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, வத்திக்குச்சி திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியானது .டீஸர் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று யூ- டியூபில் டாப் ட்ரெண்டிங்கில் தற்போதும் உள்ளது.
இந்நிலையில் காலா படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வில்லன் ...
இளம் தெலுங்கு நாயகன் விஜய் தேவரகொண்டா முதல் தமிழ் படம்
இளம் தெலுங்கு நாயகன் விஜய் தேவரகொண்டா முதல் தமிழ் படம்
‘அர்ஜுன் ரெட்டி’ படப்புகழ் நாயகன் விஜய் தேவரகொண்டா நடிக்கும் முதல் தமிழ் படத்தின் தொடக்கவிழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் பிரபல தயாரிப்பாளர் கீதா ஆர்ட்ஸ் அல்லு அரவிந்த் கலந்துகொண்டு கிளாப் அடித்து படபிடிப்பைத் தொடங்கிவைத்தார். இதன் போது தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களான ஸ்வப்னா தத்து - வைஜெயந்தி மூவீஸ், கே எஸ் ராமாராவ் - கிரியேட்டீவ் கமர்சியல், பி வி என் பிரசாத் - எஸ் வி சி, நவீன் மற்றும் ரவி மைத்ரீ மூவிஸ், ஆகியோர்களுடன் தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர்களான வம்சி,சந்தீப் ரெட்டி வங்கா, படத்தின் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா, இயக்குநர் ஆனந்த் சங்கர், நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன் பிர்ஸாதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டில் தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் அர்ஜுன்...
ஆஸ்கர் விருதுகள் 2018
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. காலை 7 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மெல் தொகுத்து வழங்கினார்.
இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். உலகளவில் பல படங்களும் விருது பட்டியலில் இடம்பிடித்திருந்த நிலையில், ஆஸ்கர் விருதை வென்ற படங்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் த ஷேப் ஆப் வாட்டர் படத்திற்கு சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த இசை மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு என 4 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளது
கிறிஸ்டோபர் நோலனின் டங்கிர்க் படத்திற்கு 3 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன. அதேபோல் பிளேட் ரன்னர் 2049, டார்க்கஸ்ட் ஹார், த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி உள்ளிட்ட படங்கள் தலா 2 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளன
ஆஸ்கர் விருதை வென்ற படங்கள், கலைஞர்கள்...
மீண்டும் “நீயா2” ஜெய் ஜோடியாக வரலட்சுமி – ராய்லட்சுமி –கேத்ரின் தெரேசா
மீண்டும் “நீயா2” ஜெய் ஜோடியாக வரலட்சுமி – ராய்லட்சுமி – கேத்ரின் தெரேசா.
கமல்ஹாசன் – ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979 – ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம். “நீயா“ இன்று வரை ஹிட்டான ஹாரர் மூவி படங்களுக்கு “நீயா” ஒரு முன் உதாரணம் என்று சொல்லலாம். மீண்டும் 39 – வருடங்களுக்கு பின் அதே பெயரில் “நீயா2” படம் பிரமாண்டமாக தயாராகிவருகிறது . கதைக்கு தேவைப்பட்டதால் “நீயா2” என்று பெயர் வைத்துள்ளேன் என்கிறார், இதன் இயக்குநர் L.சுரேஷ் . இதில் ராஜநாகம் பாம்பு முக்கிய அங்கம் வகிக்கிறது. 22 – அடி நீளம் கொண்ட இந்த ராஜநாகம் படம் முழுக்க இடம்பெறும்கிறது. இதன் தோற்றத்தை முடிவு செய்ய நானும் கேமராமேனும் இந்தியா , தாய்லாந்து நாடுகளில் தேடினோம். இறுதியாக பேங்காக்கில் ஒரு ராஜநாகத்தை பார்த்தோம். அதன் அமைப்பு , உடல்மொழி , தன்மை என அனைத்தையும் பார்த்தும், கேட்டும் தெரிந்துகொண்டோம். படம் முழுக்க வருவதால் குழந்தை...
பார்வையற்றவர்களுக்காக ‘அமலா ஹோம்’ தொண்டு நிறுவனத்தை தொடங்கிய அமலாபால்..!
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலா பால். கஷ்டப்படும் மக்களுக்கு சேவை செய்வதில் ஆர்வம் காட்டும் இவர் தற்பொழுது 'அமலா ஹோம்' என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதற்கான நிதியை திரட்டுவது போன்ற விஷயங்களில் ஈடுபடவுள்ளது.
இது குறித்து நடிகை அமலா பால் கூறும்போது, ''அகர்வால் கண் மருத்துவமனைக்காக நான் ஒரு மேடை பேச்சுக்கு தயார் செய்து கொண்டிருந்த பொழுதுதான் சில முக்கியமான புள்ளி விவரங்களை நான் கவனித்தேன். உலகம் முழுவதும் 30 மில்லியன் மக்கள் குருட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால் இதில் 70 சதவிகிதம் கார்னஸ் டிரன்ஸ்ப்ளண்ட் (Cornes Transplant) மற்றும் கண்புரை (Cataract) போன்ற அறுவை சிகிச்சைகளால் குணப்படுத்தப்படக்கூடியவை. இதற்கு பெரும் தடையாக இருக்கும் ...

