பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியான ஜெயம் ரவியின் “சைரன்” படத்தின் டீசர் !!
Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய திரைப்படமான “சைரன்” படத்தின் டீசர், தீபாவளிக் கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில், தனித்துவமான ரசனைமிக்க படங்கள் மூலம், தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் ஜெயம் ரவி. தொடர் வெற்றிப்படங்களாகத் தந்து வரும் ஜெயம் ரவியின் தன் திரை வாழ்க்கையில், முதல் முறையாக சைரன் படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தோன்றுகிறார்.
சைரன் படத்தின் துவக்கத்திலிருந்து ஒவ்வொரு அறிவிப்பிலும் படத்தின் மையம் ஒவ்வொரு கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் சைரனுடன் செல்லும் ஒரு ஆம்புலன்ஸின் புகைப்பட...
கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி குழுமம் இணைந்து, தென்னிந்தியத் திரைத்துறையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் பார்வையாளர்களைக் கவரும் வகையில், அடுத்தடுத்து உருவாக உள்ள பல மெகா பட்ஜெட் படங்களின் வரிசையை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது.கனெக்ட் மீடியா படங்களுக்கான ஸ்டுடியோவாக இருக்கும் .மற்றும் கனெக்ட் மீடியாவும், மெர்குரி குழுமமும் இணைந்து மக்கள் ரசனைக் குறிய திரைப்படங்களைத் தயாரிக்கும்.
மெர்குரி குரூப் இந்தியா, தென்னிந்தியப் பொழுதுபோக்கு மற்றும் திரை வணிகங்களை மையமாகக் கொண்டு, கனெக்ட் மீடியாவுடன் இணைந்து மெர்குரி மூவிஸ் என்ற சிறப்புப் பிரிவாக இங்குச் செயல்பட உள்ளது. புதிய ஸ்ட்ரீமிங் கதைகள் , ஒரிஜினல் கதைகள், தென் சினிமாவில் பல புதிய வகை கதைகளின் வழியாக ஒரு புதிய உலகத்தை இந்த கூட்டணி ரசிகர்களுக்கு வழங்கும். சிறந்த வணிகத்துடன், ஆரோக்கியமான பொழுதுபோக்கை ரசிகர்களுக்கு வழங்குவதற்கான வாய்ப்பு...
பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹசன், அம்மு அபிராமி, வீ.ஜே.ஆஷிக், பவித்ரா லஷ்மி, அனுபமா குமார், கௌதம் சுந்தர்ராஜன், சிவம், மதுமிதா, ஆர்.என்.ஆர்.மனோகர், சரத், துரை சுதாகர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜிகிரிதோஸ்த்.
இயக்குநர் ஷங்கரிடம் ‘எந்திரன் 2.0’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வி.அரன் இயக்கி தயாரித்துள்ள இந்தப்படத்தில் நடித்துமிருக்கிறார்.
இயக்குநரும், நடிகருமான வி.அரன் படம் குறித்துக் கூறியதாவது….
நான் ஷங்கர் சாரிடம் 2.0 படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறேன். சில குறும்படங்களையும் இயக்கி இருக்கிறேன். அந்தப் படங்கள் சைமா உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளன.
என்னுடைய குறும்படத்தைப் பார்த்துவிட்டு இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பிரதீப் சார் படம் பண்ணலாம் என்று அழைத்தார். அதன்படி, பிரதீப் சார், என்னுடைய நண்பர் அர்ஜுன் ஆகியோருடன் இணைந்து இ...
ரியோ ராஜின் ‘ஜோ’ படத்தில் ‘சில்லா சில்லா’ புகழ் வைசாக் எழுதியுள்ள ‘ஒரே கனா’ பாடலில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தோன்றியுள்ளது படத்திற்கு கோல்டன் டச் கொடுத்துள்ளது!
ரியோ ராஜ் நடித்துள்ள ’ஜோ’ திரைப்படம் அதன் அறிவிப்பில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான வைப்பை உருவாக்கி வருகிறது. வண்ணமயமான மற்றும் நேர்த்தியாக வழங்கப்பட்ட இதன் விஷூவல் புரோமோவான 'உருகி உருகி' என்ற டிராக் அனைவரையும் 'ஜோ'வின் உலகிற்குள் அழைத்து சென்றது. படத்திற்கான புரோமோஷனல் பாடலாக மியூசிக்கல் ஜீனியஸ் யுவன் ஷங்கர் ராஜா திரையில் தோன்றும் பாடல் குறித்தான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. நவம்பர் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை இது கூட்டுவதாக அமைந்துள்ளது.
இன்னொரு இசையமைப்பாளர் பாடலில் யுவன் ஷங்கர் ராஜா தோன்றுவது இதுவே முதல்முறை. அஜித் குமாரின் ...
லேபில் சீரிஸ் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோரின் நடிப்பில், உருவாகியிருக்கும் 'லேபில்' ஒரிஜினல் சீரிஸை, நவம்பர் 10, 2023 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.
இதனையொட்டி பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்காக “லேபில்” சீரிஸின் நான்கு எபிசோடுகள், சிறப்புத் திரையிடல் செய்யப்பட்டது.
இந்த சிறப்புத் திரையிடலைத் தொடர்ந்து, லேபில் வெப்சீரிஸ் குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.
இந்நிகழ்வினில்…
ஒளிப்பதிவாளர் தினேஷ் பேசியதாவது…
இயக்குநர் அருண் ராஜாவுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளேன். அவருடன் இணையும் ஒவ்வொன்றும் வித்தியாசமானதாக இருக்கும், இது மிகச்சிறப்பான சீரிஸாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி,
எடிட்டர் ராஜா ஆறு...
'ரெய்டு' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள 'ரெய்டு' திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
நிகழ்வில் முதலாவதாக பாடலாசிரியர் மோகன் ராஜா பேசியதாவது, "இயக்குநர் முத்தையா இந்தப் படத்திற்கு சிறப்பாக வசனம் எழுதியுள்ளார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும். விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா இதற்கு முன்பு இணைந்து நடித்தப் படங்கள் வெற்றி பெற்றது போல இதுவும் ஹிட்டாகி தயாரிப்பாளருக்கு லாபம் தரக்கூடியதாக அமையும். சாம் சி.எஸ். இசையில் ஒரு பாடல் எழுதி இருக்கிறேன். படம் நன்றாக வந்திருக்கிறது. திரையரங்குகளில் பார்த்து ஆதரவு கொடுங்கள்" என்றார்.
எடிட்டர் மணிமாறன், "என்னை ந...