பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு சிறப்பாக தயாராகி உள்ளோம் – ரோகித் சர்மா!
டி 20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் வரும் 23-ம் தேதி மோதுகிறது. இந்நிலையில், 16 அணிகளின் கேப்டன்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
இதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு நாங்கள் சிறப்பாக தயாராகி விடுவோம். அப்போட்டியில் யார் விளையாட போகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
கடைசி நிமிடத்தில் யாரிடமாவது நீங்கள் விளையாடுகிறீர்கள் என்று சொல்வதை நான் விரும்பவில்லை.
காயங்கள் விளையாட்டின் ஒரு பகுதி. அதை எதுவும் செய்ய முடியாது. நிறைய போட்டிகளில் விளையாடும் போது காயம் ஏற்படும்.
எங்களது கவனம் அணியை வலுப்படுத்துவதில் உள்ளது. அதனால்தான் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்குகிறோம். பு
ம்ரா காயம் பற்றி நிபுணர்களிடம் பேசினோம். உலக கோப்பை போட்டி முக்கியம்.
ஆனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முக்கியமானது...









