வெள்ளிக்கிழமை, ஜூலை 3
Shadow

Author: Kodanki

சண்டை காட்சி படப்பிடிப்பை நிறைவு செய்த வெற்றிமாறன் !

சண்டை காட்சி படப்பிடிப்பை நிறைவு செய்த வெற்றிமாறன் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. விடுதலை படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஆக்‌ஷன் சண்டை காட்சிகளை நிறைவு செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதில், ஒரு தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகளை சண்டை இயக்குனர் பீட்டர் ஹெயின் வடிமைத்துள்ளார். வெற்றிமாறனின் விடுதலை படத்திற்கான ஒருகட்ட படப்படிப்பு நிறைவு என்று குறிப்பிடப்பட்டு சில புகைப்படங்களையும் படக்குழு இணைத்துள்ளது....
வெந்து தணிந்தது காடு படம் இவ்ளோ வசூலிக்கும்னு நானே நினைக்கல – சிம்பு

வெந்து தணிந்தது காடு படம் இவ்ளோ வசூலிக்கும்னு நானே நினைக்கல – சிம்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  வெந்து தணிந்தது காடு” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. Vels Film International தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், AR ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR நடித்து வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்து வரும் நிலையில், படக்குழுவினர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இவ்விழாவினில் எடிட்டர் ஆண்டனி பேசியதாவது … “ இந்த படத்தை வெற்றியடைய வைத்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. இந்த படத்தில் பணிபுரிந்த அனுபவம் மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி. ஒளிப்பதிவாளர் சித்தார்த் கூறியதாவது.., “ இந்த படத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி. சிலம்பரசன், கௌதம் மேனன், ஏ ஆர் ரகுமான் உடன் இணைந்து...
இரு மொழிகளில் முதல் படத்தை தொடங்கிய மஹிந்திரா பிக்சர்ஸ்!

இரு மொழிகளில் முதல் படத்தை தொடங்கிய மஹிந்திரா பிக்சர்ஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
    *மஹிந்திரா பிக்சர்ஸ் முதல் படம் ஆரம்பமானது!* சினிமா ரசிகர்களுக்கு பொழுதுபோக்கை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு மஹிந்திரா பிக்சர்ஸ் எனும் புதிய தயாரிப்பு நிறுவனம் புதிய நம்பிக்கையுடன் திரைப்படத் துறையில் நுழைந்தது. இந்த நிறுவனத்தின் அலுவலகம் திறப்பு விழா ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. முதல் முயற்சியாக வித்தியாசமான சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் கதையை தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. வல்லூரி ஸ்ரீனிவாச ராவ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சின்னா வெங்கடேஷ் இயக்குகிறார். சாய் கார்த்திக் ஜாடி தமிழில் வழங்குகிறார். படம் பற்றி தயாரிப்பாளர் வல்லூரி சீனிவாச ராவ் கூறியதாவது.. 'வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்டு சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் கதையை தேர்வு செய்துள்ளோம். மேலும்.. இது ஒரு அழகான காதல் படமும் கூட. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தயார...
தேனி மாவட்டத்தில் 2633 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் கலெக்டர் தொடங்கி வைத்தார்!

தேனி மாவட்டத்தில் 2633 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் கலெக்டர் தொடங்கி வைத்தார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் 15-ந் தேதி முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நேற்று தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியம், ஆத்தாங்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இராஜேந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டத்தினை மாணவ- மாணவிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்து அவர்களுடன் உணவு அருந்தினார். அப்போது கலெக்டர் தெரிவித்ததாவது:- சத்துணவுத் திட்டம் குழந்தைகளைத் தவறாமல் பள்ளிக்குச் செல்லத் தூண்டுவது மட்டுமல்லாமல் வகுப்பறையில் பசியின்றிப் படிக்கவும் உதவுகிறது. மேலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தினை உறுதிப்படுத்தி, கற்றல் ஆர்வத்தினை அதிக்கப்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் சத்தாண உணவினை வழங்குவது குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டினை நிவர்த்தி செய்து அதன் மூலம் மனித வளர்ச்சியை மேம்படுத்திடும் வகையில் ச...
நடிக்க தெரியவில்லை என்று என்னை கேலி செய்தனர்- துல்கர் சல்மான்!

நடிக்க தெரியவில்லை என்று என்னை கேலி செய்தனர்- துல்கர் சல்மான்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மலையாள நடிகர் மம்முட்டி மகனான துல்கர் சல்மான், தமிழில் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்து பிரபலமானார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஹெய் சினாமிகா படங்களின் வெற்றி அவருக்கு திருப்பு முனையை கொடுத்தது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் சமீபத்தில் திரைக்கு வந்த சீதாராமம் படம் மூலம் திறமையான நடிகர் என்ற பெயர் பெற்றார். ஆனாலும் துல்கர் சல்மான் சினிமாவுக்கு வந்த புதிதில் நடித்த சில மலையாள படங்கள் சரியாக போகாததால் கேலி மற்றும் அவமதிப்புகளை சந்தித்ததாக தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ''நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டேன். எனக்கு நடிக்க தெரியவில்லை என்றும், சினிமாவை விட்டு வெளியேறும்படியும் விமர்சித்தனர். எனது தந்தை மம்முட்டியை போன்று என்னால் சினிமாவில் நிலைக்க முடியாது என்றும் பேசினர். அதை பொருட்பட...
கடற்கரையில் அமலாபாலின் கவர்ச்சி புகைப்படம்!

கடற்கரையில் அமலாபாலின் கவர்ச்சி புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தமிழ் திரையுலகிற்கு சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அதன்பின்னர் மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கடாவர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் அமலாபால் தனது கவர்ச்சி புதிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கடற்கரை என் சிகிச்சையாளர் என்று குறிப்பிட்டுள்ளார். கடற்கரையில் கவர்ச்சி காட்டும் அமலாபாலின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்....
உத்தர பிரதேசத்தில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழப்பு!

உத்தர பிரதேசத்தில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் உள்ள தில்குஷா பகுதியில் அமைந்தள்ள ராணுவ வளாகத்திற்கு வெளியே ஏராமானோர் குடிசைகளில் வசித்து வந்தனர். நேற்றிரவு தொடர் கன மழை காரணமாக ராணுவ வளாக சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 9 பேர் உயிரிழந்ததாகவும் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதாக, காவல்துறை இணை ஆணையர் பியூஷ் மோர்டியா தெரிவித்தார். அதிகாலை 3 மணியளவில் ஒன்பது உடல்கள் இடிபாடுகளில் இருந்து வெளியே எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோல் துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோரும் இரங்கல் தெரிவித்தனர். மேலும் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலக டுவிட்டர் பதிவில் கூ...
திருமணம் செய்துகொள்ளாதற்கு இதுதான் காரணம் – எஸ்.ஜே.சூர்யா விளக்கம்!

திருமணம் செய்துகொள்ளாதற்கு இதுதான் காரணம் – எஸ்.ஜே.சூர்யா விளக்கம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது அவருக்கு பல படங்களில் வில்லன் வேடங்கள் குவிகின்றன. எஸ்.ஜே.சூர்யாவுக்கு 54 வயது ஆகியும் திருமணம் ஆகவில்லை. சில வாரங்களுக்கு முன்பு குடும்பத்தினர் பெண் பார்ப்பதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இதனை அவரும் மறுத்து வந்தார். இந்நிலையில் திருமணம் செய்துகொள்ள தயங்குவதற்கான காரணத்தை தற்போது அவர் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து எஸ்.ஜே.சூர்யா அளித்துள்ள பேட்டியில், "சினிமாவில் நான் ஆபத்தான சில விஷயங்களில் துணிந்து இறங்க வேண்டி உள்ளது. சினிமாவில் சம்பாதித்த மொத்த பணத்தையும் நான் இயக்கி நடித்த நியூ படத்தில் முதலீடு செய்தேன். அந்த படம் வெற்றி பெற்றது. ஒருவேளை நியூ படம் தோல்வி அடைந்து இருந்தால் என் நிலைமை மோசமாக மாறி இருக்கும். ...
கருப்பு நிற கவர்ச்சி உடையில் ரம்யா பாண்டியன்!

கருப்பு நிற கவர்ச்சி உடையில் ரம்யா பாண்டியன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன், போட்டோஷூட் மூலம் மிகவும் பிரபலமானார். பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இந்நிகழ்ச்சி மூலம் அவரது ரசிகர்கள் வட்டம் பெரிதானது. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் ரம்யா பாண்டியனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அவ்வப்போது ரம்யா பாண்டியன் தனது புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்த...
வைரலாகும் அஜித்தின் பைக் பயண ரூட் மேப்!

வைரலாகும் அஜித்தின் பைக் பயண ரூட் மேப்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நடிகர் அஜித் தனது பைக்கை எடுத்துக்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன் பயணம் மேற்கொண்டார். ஐரோப்பா நாடுகளில் குறிப்பாக பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளில் இந்த பைக் சுற்றுப்பயணம் நடந்தது. ஐரோப்பிய பைக் சுற்றுப்பயணத்துக்கு பின் நடிகர் அஜித், ஏகே61 படத்தின் விசாகப்பட்டினம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். பின்னர் அஜித், விசாகப்பட்டினம் படப்பிடிப்பை நிறைவு செய்து, தனது நண்பர்களுடன் இமயமலை, இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி, ரோதாங் பகுதி மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக், லே & கார்கில் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. இந்நிலையில் அஜித்குமாரின் பைக் ரைடிங் சுற்றுப் பயணத் திட்டம் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. ...