புதன்கிழமை, ஜூலை 8
Shadow

Author: Kodanki

மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயலால் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் அன்பரசன்!

மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயலால் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் அன்பரசன்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தேவநேரி மீனவர் பகுதி "மாண்டஸ்" புயலால் அதிகளவில் சேதமடைந்த கடலோர பகுதியாக செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து அப்பகுதிகளை அமைச்சர் அன்பரசன் இன்று மாலை நேரில் பார்வையிட்டு, சேதமடைந்த சாலைகள் மற்றும் விழுந்த மின் கம்பங்களை உடனடியாக சரிசெய்ய உத்தரவிட்டார். அப்பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், அருகில் உள்ள புயல் நிவாரண முகாம்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், காஞ்சிபுரம் எம்.பி செல்வம், திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்....
‘லத்தி’ படத்தின் புதிய அப்டேட்!

‘லத்தி’ படத்தின் புதிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் 'லத்தி'. இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். 'ராணா புரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர். 'லத்தி' திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இதனிடையே இப்படத்தின் இரண்டாவது பாடல் 'ஊஞ்சல் மனம் ஆடுமே' வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'லத்தி' திரைப்படத்தின் டிரைலர் வருகிற டிசம்பர் 12-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை நடிகர் விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரை...
வைரலாகும் சந்தானம் படத்தின் இரண்டாவது பாடல்!

வைரலாகும் சந்தானம் படத்தின் இரண்டாவது பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'கிக்'. இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கிக்' படத்தின் இரண்டாவது பாடலான 'கண்ணம்மா' பாடல் இன்று மாலை 6.03 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.   https://twitter.com/Fortune_films/status/1601481382098010113?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E...
அஞ்சலி எனக்கு தங்கச்சியா நடிச்சத ஏத்துக்க முடியல – எஸ்பிபி சரண் சரவெடி

அஞ்சலி எனக்கு தங்கச்சியா நடிச்சத ஏத்துக்க முடியல – எஸ்பிபி சரண் சரவெடி

CINI NEWS, HOME SLIDER, TV news, நடிகர்கள், நடிகைகள்
  த்ரில்லர் மிஸ்டரி தொடரான 'ஃபால்' இணைய தொடர்  இப்போது டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘ஃபால்’ இணைய தொடரினை  வெளியிட்டுள்ளது. இத்தொடரில் நடிகை அஞ்சலி முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்தொடர் வெளியாவதற்கு முன்னதாக, டிசம்பர் 8ஆம் தேதி வியாழன் அன்று, இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்தின் சிறப்புக் காட்சி ஊடகங்களுக்காக திரையிடப்பட்டது. 'ஃபால்' இணைய தொடரின் சிறப்பு திரையிடலுக்கு ஊடகவியலாளர்களை வரவேற்றுப் பேசிய ஹாட்ஸ்டார் தமிழ் - தலைமை நிர்வாகி கிருஷ்ணன் குட்டி கூறியதாவது.., "'ஃபால்' தொடரை உருவாக்கியதற்காக நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம், இதில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள் மற்றும் குழுவினருக்கும் நன்றி. ரசிகர்கள் விரும்பும் சிறந்த தமிழ் கதைகளை அனைவருக்கும் சேரும்படி த...
வைரலாகும் வடிவெலு வீடியோ!

வைரலாகும் வடிவெலு வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், நடிகர் வடிவேலு படப்பிடிப்பு தளத்தில் பிரபல ரீல்ஸ் பாடலான 'கச்சா பாதாம்' என்ற பாடலுக்கு தனக்கே உரிய காமெடி பாணியில் நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. நாய் சேகர் ரிட்டன்ஸ்' நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. https://twitter.com/LycaProductions/status/16008122814070988...
ரிலீஸுக்கு முன்பே எதிர்பார்ப்பை தூண்டும்  அவதார் 2 !

ரிலீஸுக்கு முன்பே எதிர்பார்ப்பை தூண்டும் அவதார் 2 !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. தற்போது அவதார் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. படத்துக்கு அவதார்: தி வே ஆப் வாட்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட 160 மொழிகளில், டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்நிலையில், இப்படத்தின் முன்பதிவு சமீபத்தில் இந்தியாவில் தொடங்கியது. இதையடுத்து வேகமாக டிக்கெட்டுகள் விற்பனையாகி தற்போது வரை ரூ.10 கோடிக்கு மேலாக வசூலித்துள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது. ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முன்பதிவில் அவதார்: தி வே ஆப் வாட்டர் திரைப்படம் சாதனை படைத்துள்ளது. மேலும் இப்படத்தி...
தனுஷின் “கேப்டன் மில்லர்” படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் Dr. சிவராஜ்குமார் !

தனுஷின் “கேப்டன் மில்லர்” படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் Dr. சிவராஜ்குமார் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கன்னட சூப்பர் ஸ்டார் Dr. சிவராஜ்குமார் தனுஷ் நடிக்கும் “கேப்டன் மில்லர்” படத்தில் இணைந்துள்ளார். சென்னை (டிசம்பர் 08, 2022): சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், முன்னணி நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் “கேப்டன் மில்லர்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கன்னட சூப்பர் ஸ்டார் Dr. சிவராஜ்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தேசிய விருது நாயகன் நடிகர் தனுஷ் நடிக்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படம்,  அறிவிக்கப்பட்ட கணத்திலிருந்தே ரசிகர்களிடம் தனித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பெரிய நட்சத்திர பட்டாளம் படத்தில் இணைந்ததால், பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகமாகி, இந்த படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில், தெலுங்கு திரைத்துறையின் முன்னணி நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் இளைஞர்களின் கனவு நாயகி நடிகை பிரி...
நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கு திரையுலகின் மாஸ் ஹீரோ நந்தமுரி பாலகிருஷ்ணா- இயக்குநர் அனில் ரவிபுடி - ஷைன் ஸ்கிரீன்ஸ் ஆகியோரின் கூட்டணியில், 'NBK108' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா, படப்பிடிப்புடன் தொடங்கியது. தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான அனில் ரவிபுடியின் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் மாஸ் ஹீரோ நந்தமுரி பாலகிருஷ்ணா கதையின் நாயகனாக நடிக்கிறார். சி. ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். தம்மி ராஜு பட தொகுப்பாளராக பணியாற்ற, கலை இயக்கத்தை ராஜீவன் கவனிக்கிறார். சண்டை பயிற்சி இயக்குநராக வி. வெங்கட் பணியாற்றுகிறார். மாஸ் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஷைன் ஸ்க்ரீன்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் சாஹூ கரபதி மற்றும் ஹரிஷ் பெடி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தி...
ஆஹா தமிழ் வழங்கும் “ரத்தசாட்சி” பத்திரிக்கையாளர் சந்திப்பு !

ஆஹா தமிழ் வழங்கும் “ரத்தசாட்சி” பத்திரிக்கையாளர் சந்திப்பு !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஆஹா தமிழ் & மகிழ் மன்றம் தயாரிப்பில் இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அழுத்தமான படைப்பு "ரத்த சாட்சி". இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகனின் கைதிகள் சிறுகதையினை தழுவி மனதை கலங்க செய்யும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. 'ஆஹா தமிழ் ' ஓடிடி தளத்தில் 9 டிசம்பர் 2022 வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இப்படத்தில் கண்ணா ரவி, இளங்கோ குமார்வேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் வினோத், ஆறு பாலா, வினோத் முன்னா, அர்ஜுன் ராம், OAK சுந்தர், பிரவீன், ஹரிஷ் தொழில் நுட்ப குழுவினர் தயாரிப்பாளர்கள் - அனிதா மகேந்திரன் & டிஸ்னி (மகிழ் மன்றம்) ஆஹா தமிழ் இயக்கம் மற்றும் திரைக்கதை - ரஃபீக் இஸ்மாயில் எடிட்டர் - பிரகாஷ் கருணாநிதி ஒளிப்பதிவு - ஜெகதீஷ் ரவி இசையமைப்பாளர் - ஜாவேத் ரியாஸ் பாடலாசிரியர் - விஷ்ணு எடவன், கார்த்திக் நேதா ஸ்...
டெல்லி மக்கள் வெறுப்பு அரசியலை விரும்புவதில்லை: மாநகராட்சி தேர்தல் முடிவு குறித்து பஞ்சாப் முதல்வர் பேட்டி!

டெல்லி மக்கள் வெறுப்பு அரசியலை விரும்புவதில்லை: மாநகராட்சி தேர்தல் முடிவு குறித்து பஞ்சாப் முதல்வர் பேட்டி!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
டெல்லி மாநகராட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் ஆரம்பம் முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. பகல் 12.30 மணி நிலவரப்படி அந்த கட்சி 104 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தது. மேலும் 31 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது, இதன் மூலம் மொத்தம் 135 வார்டுகளில் அந்த கட்சி வெற்றி பெறும் என தெரிகிறது. டெல்லி மாநகராட்சியை கைப்பற்ற 126 வார்டுகளில் வெற்றி பெற்றால் போதும். இதனையடுத்து 15 ஆண்டு காலமாக பாஜகவின் வசம் இருந்த டெல்லி மாநகராட்சி தற்போது ஆம் ஆத்மி கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது. இந்த தேர்தலில் மதியம் 12.30 மணி நிலவரப்படி பாஜக 83 வார்டுகளை வென்று 19 வார்டுகளில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கட்சி ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 6 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி பெற்றுள்ள வெற்...