வியாழக்கிழமை, ஜூலை 9
Shadow

Author: Kodanki

கேரளாவில் ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் திரளாக பங்கேற்ற பெண்கள்-இளைஞர்கள்!

கேரளாவில் ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் திரளாக பங்கேற்ற பெண்கள்-இளைஞர்கள்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி தொடங்கிய பாத யாத்திரை கடந்த 11-ந் தேதி முதல் கேரளாவில் நடந்து வருகிறது. இன்று அதிகாலை ராகுல் காந்தி ஆலப்புழா மாவட்டம் சேர்தலாவில் இருந்து தொடங்கினார். முன்னதாக தான் தங்கியிருந்த கல்லூரி வளாகத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்தபின்பு, தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன்பின்பு ராகுல் காந்தி தொண்டர்களுடன் பாதயாத்திரை மேற்கொண்டார். இன்றைய பயணத்தில் ராகுல் காந்தியுடன் ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும் கலந்து கொண்டனர். இதுபோல ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்ட பகுதிகளில் காலையிலேயே ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். ராகுல் காந்தியுடன் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் முரளீதரன், பவன்கேரா உள்ள...
கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கம்யூனிச சித்தாந்தத்துக்கு எதிரானவர்- பினராயி விஜயன் பரபரப்பு பேச்சு!

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கம்யூனிச சித்தாந்தத்துக்கு எதிரானவர்- பினராயி விஜயன் பரபரப்பு பேச்சு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நீடித்து வருகிறது. கேரள சட்டசபையில் சமீபத்தில் மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக மாநில முதல்-மந்திரியே செயல்பட வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த சட்டதிருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்க போவதில்லை என கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்தார். மேலும் அவர் அரசின் பல்வேறு நடவடிக்கைகளை விமர்சித்து பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:- கவர்னர் தான் மாநில மந்திரிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். எனவே கவர்னரின் அதிகாரத்தை மாநில அரசால் குறைக்க முடியாது. கடந்த 2019-ம் ஆண்டு கண்ணூர் பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு சென்ற என் மீது தாக்குதல் முயற்சி நடந்தது. அப்போது போலீசார் அவர்களின் கடமையை...
லீக் ஆன ஏகே61 பட டைட்டில் !

லீக் ஆன ஏகே61 பட டைட்டில் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜித் 'வலிமை' படத்திற்குப் பிறகு தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஏ.கே. 61' படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத், விசாகப்பட்டினம், சென்னை, புனே என பல்வேறு இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் இடைவெளியில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்ற அஜித் சென்னை திரும்பியதும் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். சில தினங்களாக நடிகர் அஜித் இமயமலையைச் சுற்றியுள்ள இடங்களுக்கு பைக் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த இமயமலை பைக் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் அஜித் ஏ.கே. 61 படத்தில் பணியில் ஈடுபடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஏகே61 படத்தின் தலைப்ப...
கதாநாயகனாக மீண்டும்  களம் இறங்கும் ராமராஜன் !

கதாநாயகனாக மீண்டும் களம் இறங்கும் ராமராஜன் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவின் 90 காலகட்டங்களில் கிராமத்து படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ராமராஜன்தான். இவர் நடித்த பல படங்கள் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் படங்கள் வெற்றி பெற்றுள்ளன. 'எங்க ஊரு பாட்டுக்காரன்', 'எங்க ஊரு காவல்காரன்', 'என்ன பெத்த ராசா', 'கரகாட்டக்காரன்', 'பாட்டுக்கு நான் அடிமை' போன்ற படங்கள் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடக்கூடிய படங்களாக பார்க்கப்பட்டு வருகின்றன. ராமராஜன் நடிப்பில் கடைசியாக 2012-ம் ஆண்டு 'மேதை' என்ற படம் வெளியானது. அதன்பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். ஆனாலும் அவ்வப்போது ராமராஜன் மீண்டும் நடிக்க வருவதாக தகவல்கள் வெளியாகி கொண்டே இருந்தன. இந்நிலையில் அவர் மீண்டும் சினிமாவில் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ராகேஷ் இயக்கும் 'சாமானியன்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் தனது 2-வது...
தனுஷுடன் இணைந்த சிவகார்த்திகேயன் பட நடிகை!

தனுஷுடன் இணைந்த சிவகார்த்திகேயன் பட நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் 'நானே வருவேன்'. இதில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடிக்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைத் தொடர்ந்து, ராக்கி, சாணிக் காயிதம் படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். கேப்டன் மில்லர் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். வரலாற்று பாணியில் உருவாகவுள்ள இப்படத்தின் வீடியோ அண்மையில் வெளியானது. இந்நிலையில், இப்படத்தில் நடிக்கவுள்ள கதாநாயகி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர், டான் படங்களில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா அருள் மோகன...
“டிராமா” ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிப்பு சொல்லிக் கொடுத்த கிஷோர்!

“டிராமா” ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிப்பு சொல்லிக் கொடுத்த கிஷோர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *வைப் 3 ப்ரொடக்‌ஷன் தயாரிக்க சசிகலா ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிடும் "டிராமா"... படக்குழுவினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய கிஷோர்!!** *180 நாட்கள் ரிகர்சலை ஏழே நாட்களில் முடித்த கிஷோர்... அசந்து போன “டிராமா” படக்குழு!!* மலையாள இயக்குனர் அஜு குளுமலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “டிராமா”. இந்த படத்தில் கிஷோர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஜெய்பாலா நாயகனாகவும் காவ்யா பெல்லு நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இந்த படமானது ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழு படத்தில் நடிக்கும் நடிகர்களை வைத்து சுமார் 180 நாட்கள் ரிகர்சல் நடத்த திட்டமிட்டிருந்தது. நடிகர் கிஷோர் இந்த ரிகர்சலை வெறும் 7 நாட்களில் முடித்து, படக்குழுவினர் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், இரவு இரண்டு மணிக்கெல்லாம் அடுத்த ...
நடிகர் ராணா டகுபதி வெளியிட்ட ‘கப்ஜா’ பட டீசர்

நடிகர் ராணா டகுபதி வெளியிட்ட ‘கப்ஜா’ பட டீசர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் ராணா டகுபதி வெளியிட்ட ‘கப்ஜா’ பட டீசர் ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாள் பரிசாக வெளியாகியிருக்கும் ‘கப்ஜா’ பட டீசர் கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'கப்ஜா' படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் டீசரை ‘பாகுபலி’ படப் புகழ் நடிகர் ராணா டகுபதி வெளியிட்டிருக்கிறார். வெளியான குறுகிய கால அவகாசத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கன்னட திரையுலகிலிருந்து 'கே ஜி எஃப் 1 & 2 ', '777 சார்லி', 'விக்ராந்த் ரோணா' என பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரான படைப்புகள் வெளியாகி, கோடிக்கணக்கிலான வசூலை குவித்து வருவதால் ஒட்டுமொத்த இந்திய திரையலகின் கவனமும் தற்போது கன்னட திரையுலகின் மீது திரும்பி இருக்கிறது. இங்கு நட்சத்திர நடிகர்கள...
ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு: உலக தலைவர்கள் 500 பேர் அஞ்சலி !

ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு: உலக தலைவர்கள் 500 பேர் அஞ்சலி !

HOME SLIDER, NEWS, செய்திகள்
இங்கிலாந்து மகாராணியாக கடந்த 70 ஆண்டுகள் 214 நாட்கள் இருந்து வைர விழா கொண்டாடி சாதனை படைத்த ராணி எலிசபெத் (வயது 97) உடல் நலக்குறைவு காரணமாகவும், வயது மூப்பினாலும் கடந்த 8-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் லண்டன் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கடந்த 5 நாட்களாக லட்சக்கணக்கான பொதுமக்கள் சுமார் 17 மணி நேரத்துக்கும் மேலாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ராணி மேல் வைத்திருந்த அன்பால் நீண்ட வரிசையில் காத்திருந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்து அஞ்சலி செலுத்தினர். இறுதிச்சடங்கில் பங்கேற்க இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், பாகிஸ்தான், உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 500 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ரஷியா, ஆப்கானிஸ்தான், மியான்மர், சிரியா, வட கொரியா ஆகிய நா...
சண்டை காட்சி படப்பிடிப்பை நிறைவு செய்த வெற்றிமாறன் !

சண்டை காட்சி படப்பிடிப்பை நிறைவு செய்த வெற்றிமாறன் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. விடுதலை படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஆக்‌ஷன் சண்டை காட்சிகளை நிறைவு செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதில், ஒரு தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகளை சண்டை இயக்குனர் பீட்டர் ஹெயின் வடிமைத்துள்ளார். வெற்றிமாறனின் விடுதலை படத்திற்கான ஒருகட்ட படப்படிப்பு நிறைவு என்று குறிப்பிடப்பட்டு சில புகைப்படங்களையும் படக்குழு இணைத்துள்ளது....
வெந்து தணிந்தது காடு படம் இவ்ளோ வசூலிக்கும்னு நானே நினைக்கல – சிம்பு

வெந்து தணிந்தது காடு படம் இவ்ளோ வசூலிக்கும்னு நானே நினைக்கல – சிம்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  வெந்து தணிந்தது காடு” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. Vels Film International தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், AR ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR நடித்து வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்து வரும் நிலையில், படக்குழுவினர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இவ்விழாவினில் எடிட்டர் ஆண்டனி பேசியதாவது … “ இந்த படத்தை வெற்றியடைய வைத்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. இந்த படத்தில் பணிபுரிந்த அனுபவம் மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி. ஒளிப்பதிவாளர் சித்தார்த் கூறியதாவது.., “ இந்த படத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி. சிலம்பரசன், கௌதம் மேனன், ஏ ஆர் ரகுமான் உடன் இணைந்து...