வெள்ளிக்கிழமை, ஜூலை 10
Shadow

Author: Kodanki

பிரதமர் சென்னை வருகையையொட்டி டிரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை!

பிரதமர் சென்னை வருகையையொட்டி டிரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை மறுதினம் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்கவுள்ளார். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்கிறார். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி 28.07.2022 மற்றும் 29.097.2022 ஆகிய 2 நாட்கள் தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். பிரதமர் சென்னை வருகை தர இருப்பதால் சென்னை பெருநகர காவல்துறை சார்பாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி, சென்னை பெருநகர கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் 28 மற்றும் 29 ஆகிய 2 நாட்களில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ...
கொசஸ்தலை ஆற்றில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன- தொழிற்சாலை கழிவுநீர் காரணமா?

கொசஸ்தலை ஆற்றில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன- தொழிற்சாலை கழிவுநீர் காரணமா?

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொசஸ்தலை ஆறு வெள்ளி வாயல் சாவடி, எடப்பாளையம், மணலிபுதுநகர், கடையங்குப்பம் வழியாக பாய்ந்து அத்திப்பட்டு புதுநகர், எண்ணூர் முகதுவார பகுதியில் கடலில் கலக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அத்திப்பட்டு புதுநகர், எண்ணூர் முகத்து வாரம் பகுதியில் அதிகளவு மீன்கள் இறந்து கரை ஒதுங்கி வருகிறது. அருகில் உள்ள அனல் மின் நிலையத்தில் இருந்து குளிரூட்டும் நீரை ஆற்றில் விடுவதாலும், தொழிற் சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த கழிவு நீராலும் மீன்கள் இறப்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து காட்டுக் குப்பம் எண்ணூரைச் சேர்ந்த மீனவர்கள் கூறும் போது, "கடந்த சில நாட்களாக கொசதஸ்தலை ஆற்று பகுதியில் மீன்கள் இறப்பது அதிகரித்து உள்ளது. இது எங்களது வாழ்வாதாரத்தை மிகவும் பாதித்து உள்ளது. இது பல வருடங்களாக விட்டு, விட்டு நடைபெறுகிறது. அதிகளவு மீன்கள் இறப்பது இதுவே முதல் முறை" என்றனர். ...
கமலுடன் மீண்டும்  இணையும் உதயநிதி!

கமலுடன் மீண்டும் இணையும் உதயநிதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல், திரைப்படங்கள், நடிகர்கள்
'மாமன்னன்' படத்தைத் தொடர்ந்து தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் 'கலகத் தலைவன்' படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கவுள்ளார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று (25-07-2022) சென்னையில் நடைபெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸின் 15 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் விழாவில் கமல்ஹாசன் வெளியிட்டார். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப்பக்கத்தில், "15 வருட ரெட் ஜெயண்ட் மூவிஸின் சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக உடன் பங்காற்றியவர்களை நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவித்தோம். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெரும...
பிரபல பத்திரிகையாளர் மரணம்… சூப்பர் ஸ்டாருக்கு தொடர்பு..? படமாகிறது உண்மைச் சம்பவம்!

பிரபல பத்திரிகையாளர் மரணம்… சூப்பர் ஸ்டாருக்கு தொடர்பு..? படமாகிறது உண்மைச் சம்பவம்!

CINI NEWS, HOME SLIDER
OTT தளமான “SONYLIV” தனது புதிய தமிழ் வெப் தொடருக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, “THE MADRAS MURDER” (தி மெட்ராஸ் மர்டர்) என தலைப்பிடப்பட்டுள்ள இந்த வெப் தொடரினை சூரியபிரதாப்.S, எழுதி-இயக்க, BIGPRINT PICTURES சார்பாக I.B.கார்த்திகேயன் தயாரிக்கிறார். இயக்குனர் A.L.விஜய் SHOWRUNNER-ஆக செயல்படவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வெப் தொடர் 1940-களில் மெட்ராஸ் மாகாணத்தில் நடந்த ஒரு பிரபல கொலை வழக்கினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதிக பொருட் செலவில் பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் இந்த வெப் தொடரில் நடிக்கவிருக்கும் நடிகர்-நடிகையர்கள் மற்றும் இதில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெப் தொடர், உண்மைச் சம்பவங்களை அடிப்படியாக கொண்டு உருவாக்கப்படுவதாக படக்குழுவினர் தெரிவ...
உலக செஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறும் வேலம்மாள் பள்ளி மாணவர்களுக்கு 30 லட்சம் வழங்கிய அமைச்சர் மா.சு.

உலக செஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறும் வேலம்மாள் பள்ளி மாணவர்களுக்கு 30 லட்சம் வழங்கிய அமைச்சர் மா.சு.

HOME SLIDER, NEWS, செய்திகள்
    ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் உலக செஸ் சாம்பியன்களை கவுரவிக்கும் பிரமாண்ட நிகழ்ச்சி - ரூ.30 லட்சம் பரிசுத்தொகை வழங்கி பாராட்டு விழா - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு 44-வது 'செஸ் ஒலிம்பியாட்' போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வேலம்மாள் பள்ளியின் 6 உலக செஸ் சாம்பியன்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி ஜூலை 25-ந்தேதி பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியதுடன், வேலம்மாள் பள்ளியின் செஸ் வீரர், வீராங்கனைகளுக்கு பள்ளியின் சார்பில் வழங்கப்பட்ட ரூ.30 லட்சம் பரிசுத் தொகையை வழங்கி சிறப்பித்தார். இந்தியாவில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் சர்வதேச அளவிலான 44 -வது 'செஸ் ஒலிம்பியாட்' சதுரங்க போட்டிகள் வருகிற ஜூலை 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. செங்கல்பட்டு ...
பார்த்தா’ சந்தானத்துக்காக பார்க்காமலே வாங்கிய படம் ‘குலுகுலு’ உதயநிதி கலகல

பார்த்தா’ சந்தானத்துக்காக பார்க்காமலே வாங்கிய படம் ‘குலுகுலு’ உதயநிதி கலகல

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பார்த்தா’ சந்தானத்துக்காக பார்க்காமலே வாங்கிய படம் ‘குலுகுலு’ உதயநிதி கலகல   சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ராஜ் நாராயணன் தயாரிப்பில், ’மேயாத மான் ’படப்புகழ் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “குலுகுலு”. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் மாறுபட்ட களத்தில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்ததோடு பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.. வரும் ஜூலை 29 படம் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. கலை இயக்குனர் ஜாக்கி கூறியதாவது.., “இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் டிரீட்டாக இருக்கும். படத்தின் ஸ்கிர்ப்ட் மிக தெளிவாக இருந்தது. கலை இயக்கத்திற்கான அனைத்து விவரங்களும் திரைக்கதை புத்தகத்திலேயே இருந்தது...
கட்சி விவகாரங்கள் குறித்து இப்போது கேட்காதீங்க – பதில் அளிக்க மறுத்த ஈ.பி.எஸ்!

கட்சி விவகாரங்கள் குறித்து இப்போது கேட்காதீங்க – பதில் அளிக்க மறுத்த ஈ.பி.எஸ்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
டெல்லியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியளார்களை சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடியின் அழைப்பின்பேரில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிரிவுபசார விழாவில் கலந்துகொண்டதாக தெரிவித்தார். அப்போது, அதிமுகவின் வங்கிக்கணக்கை முடக்க வேண்டும் என ஓபிஎஸ் கடிதம் எழுதியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, நீதிமன்றத்தில் வழக்குகள் இருப்பதால் அதுபற்றி பதில் அளிக்க முடியாது என்றும், வழக்குகள் முடிந்த பிறகு அதுபற்றி கருத்துகள் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார். நீதிமன்றத்தில் மாறி மாறி வழக்கு போடப்படுவதால், கட்சி விவகாரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்....
அருள்நிதியுடன் இணைந்த உதயநிதி ஸ்டாலின்!

அருள்நிதியுடன் இணைந்த உதயநிதி ஸ்டாலின்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அருள்நிதி நடிப்பில் ஜூலை 22-ஆம் தேதி வெளியான 'தேஜாவு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் 'டைரி'. அருள்நிதி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கி உள்ளார். இவர், டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்துவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். உண்மையில் நடந்த கதையில் கொஞ்சம் கற்பனை கலந்து 'டைரி' படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு யோகான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. https://twitter.com/RedGiantMovies_/status/155083572...
அக்னிபாத் திட்டத்தால் நாட்டுக்கும் இளைஞர்களுக்கும் ஆபத்து – ராகுல் காந்தி!

அக்னிபாத் திட்டத்தால் நாட்டுக்கும் இளைஞர்களுக்கும் ஆபத்து – ராகுல் காந்தி!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
அக்னிபாத் திட்டம் குறித்த பிரதமரின் புதிய ஆராய்ச்சியால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது என காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஓய்வு பெறுகிறார்கள். அதில் வெறும் 3,000 பேருக்குத்தான் அரசு வேலை கிடைக்கிறது. 4 வருடங்களுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் ஆயிரக்கணக்கான அக்னி வீரர்களின் எதிர்காலம் என்ன? பிரதமரின் இந்த புதிய ஆராய்ச்சியால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் எதிர்காலமும் ஆபத்தில் உள்ளன என தெரிவித்துள்ளார்....
நெருக்கடியான நேரத்தில் ரிலீசான சூரரைப் போற்றுக்கு 5 தேசிய விருதுகள் – சூர்யா நெகிழ்ச்சி

நெருக்கடியான நேரத்தில் ரிலீசான சூரரைப் போற்றுக்கு 5 தேசிய விருதுகள் – சூர்யா நெகிழ்ச்சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வணக்கம்.. அன்பான வாழ்த்துகளால் வாழ்வை நிறைக்கும் அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றிகள்.. ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு ’ஐந்து தேசிய விருதுகள்’ கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. பெருந்தொற்று காலத்தில் எதிர்பாராத நெருக்கடிகளுக்கு இடையில் வெளியான இத்திரைப்படத்திற்கு இந்திய அளவில் வரவேற்பு கிடைத்தது. தன்னம்பிக்கை நிறைந்த கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்வைச் சிறந்த திரைப்படமாக்க பல ஆண்டுகள் உழைத்த, இயக்குநர் சுதா கொங்கரா அவர்களின் படைப்புத் திறனுக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. தேசியவிருது பெறுகிற சுதா கொங்கரா - ஷாலினி உஷாநாயர், ஜி.வி. பிரகாஷ், அபர்ணா பாலமுரளி, இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். சிறந்த திரைப்படத்தை தயாரிக்க துணைநின்ற படக்குழுவினர் அனைவருக்கும் இந்த...