சனிக்கிழமை, ஜூலை 11
Shadow

Author: Kodanki

நடிகை பிரணிதா சுபாஷ்க்கு  பெண் குழந்தை பிறந்துள்ளது!

நடிகை பிரணிதா சுபாஷ்க்கு பெண் குழந்தை பிறந்துள்ளது!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தமிழில் கார்த்தி நடித்த 'சகுனி', சூர்யா நடித்த 'மாசு என்ற மாசிலாமணி', அருள்நிதி நடித்த உதயன், 'எனக்கு வாய்த்த அடிமைகள்' உட்பட சில படங்களில் நடித்தவர் பிரணிதா சுபாஷ். கன்னட நடிகையான இவர், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு பெருமளவில் ரசிகர்கள் உள்ளனர். மேலும், பல்வேறு சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருபவர். அவர் கடைசியாக 'புஜ்: தி பிரைட் ஆப் இந்தியா' என்ற படத்தில் நடித்தார். அவர் நடிப்பில் வெளியான 'ஹங்கமா-2' படத்தில் படுகவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கிறங்கடித்தார். இவர், கடந்த ஆண்டு நிதின் ராஜு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து, தனது கணவரின் 34-வது பிறந்த நாளின் போது, தான் தாய்மை அடைந்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர், கர்ப்ப காலத்தில் தன் உடல்நிலை எவ்வாறு உள்ளது என்ற புகைப்படத்தை, தனது சமூக வலைத...
சிரஞ்சீவி மற்றும் சல்மான் கானை சந்தித்த கமல்.. வைரலாகும் புகைப்படம்!

சிரஞ்சீவி மற்றும் சல்மான் கானை சந்தித்த கமல்.. வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி 'விக்ரம்' திரைப்படம் வெளியானது. கமல்ஹாசன், பகத்ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதால் மிகுந்த உற்சாகத்தில் உள்ள கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ்-க்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கினார். அதன்பின்னர், விக்ரம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய 13 பேருக்கு டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 பைக்கை கமல் பரிசளித்தார். ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த சூர்யாவிற்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் கைகடிகாரத்தை கமல் பரிசளித்திருந்தார். இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியை அவருடைய இல்லத்தில் கமல்ஹாசன் மற்றும் விக்ரம் படக்குழு சந்தித்துள்ளனர். அப்பொழுது இவர்களுடன் இந்தி திரையுலகின் முன்னணி நட...
நடிகர் சூரியின் நிலமோசடி வழக்கிற்காக விஷ்ணு விஷாலிடம் விசாரணை!

நடிகர் சூரியின் நிலமோசடி வழக்கிற்காக விஷ்ணு விஷாலிடம் விசாரணை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நிலம் வாங்கி தருவதாக நகைச்சுவை நடிகர் சூரியிடம் பண மோசடி செய்யப்பட்ட வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் இந்த விசாரணை நடந்து வருகிறது. ஏற்கனவே இது தொடர்பாக ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி. ரமேஷ்கொடவாலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. நடிகர் சூரி இந்த வழக்கு தொடர்பாக 3 முறை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ரமேஷ் கொடவாலா ஆகியோருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினார்கள். அதை ஏற்று நடிகர் விஷ்ணுவிஷால் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீண்ட நேரம் விசாரணை நடத்தினார்கள். அவரது தந்தை ரமேஷ்கொடவாலாவிடமும் மத்திய குற்றப...
நாளை முதல் பள்ளிகள் திறப்பு!

நாளை முதல் பள்ளிகள் திறப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ளன. பள்ளிக் கூடங்களில் ஒரு வாரத்துக்கு பாடங்களை நடத்தாமல் புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கோடை விடுமுறை முடிந்து நாளை (திங்கட்கிழமை) முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய கல்வியாண்டு வகுப்புகள், நாளை தொடங்க உள்ளது. இதைத் தொடர்ந்து வருகிற 20-ந்தேதி பிளஸ்-2 வகுப்புகளும் 27-ந்தேதி பிளஸ்-1 வகுப்புகளும் தொடங்குகின்றன. இதற்காக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களுக்கும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து பாட நோட்டு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பள்ளிக்கூடங்கள் நாளை (திங்கட்கிழமை) தொடங்கியதும் இலவச பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகளை வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. வகுப்புகள் தொடங்...
“வள்ளி மயில்” திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

“வள்ளி மயில்” திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில், இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் காமெடி ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான “வள்ளி மயில்” திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்துள்ளது. 1980 களில் புகழ் பெற்று விளங்கிய நாடகமான ‘வள்ளி திருமணம்’ நாடகத்தை பின்புலமாகக் கொண்டு காமெடி ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாக “வள்ளி மயில்” திரைப்படம் உருவாகிறது. வெண்ணிலா கபடிகுழு, நான் மகான் அல்ல, ஆதலால் காதல் செய்வீர்,ஜீவா போன்ற பல வித்தியாசமான படைப்புகளால் ரசிகர்களின் பெரு வரவேற்பை பெற்று வரும் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார்.. முதல் முறையாக இந்தக் கூட்டணி இணைவதால் ரசிகர்களிடம் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதலால் காதல் செய்வீர், மாவீரன் கிட்டு, வில் அம்பு போன்ற தரமான படைப்பு...
தேர்தலில் தனித்து போட்டியிட பா.ஜ.க. தயாரா?- சீமான் கேள்வி!

தேர்தலில் தனித்து போட்டியிட பா.ஜ.க. தயாரா?- சீமான் கேள்வி!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் மாற்று கட்சிகளை சார்ந்த 60-க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா அரியக்குடியில் நடந்தது. சிவகங்கை பாராளுமன்ற தொகுதி செயலாளர் சாயல்ராம் தலைமை தாங்கினார். தற்போது ஆளும் தி.மு.க. அரசு எதை சாதித்து விட்டது? ஓராண்டு சாதனை என எதற்கு இந்த விளம்பரம்? பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்று கூறிவிட்டு மற்றவர்களுக்கு பல மடங்கு கட்டணத்தை அதிகரித்து விட்டார்கள். ஊழல் பட்டியல் வெளியிடுவதற்கும், ஊழல் குற்றச்சாட்டு கூறுவதற்கும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு என்ன தகுதி உள்ளது? பிரான்ஸ் நாட்டிடம் வாங்கிய ரபேல் விமான ஊழல் வழக்கின்போது பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்த கோப்புகளை காணவில்லை என்று கூறினீர்களே. கோப்புகளையே பாதுகாக்க முடியாத நீங்களா நாட்டை பாதுகாப்பீர்கள்? கேரளாவில் அரசு பள்ளி...
திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து நெகிழ்ந்த விக்னேஷ் சிவன்!

திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து நெகிழ்ந்த விக்னேஷ் சிவன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வந்த நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். அதன்பின், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் விமர்சையாக திருமணம் நடக்கவுள்ளதாக விக்னேஷ் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக தொடங்கியது. பின்னர் காலை 10.25 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலியை கட்டினார். இவர்களது திருமணத்தில் முன்ன...
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்.. நேரில் வாழ்த்திய திரைப்பிரபலங்கள்!

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்.. நேரில் வாழ்த்திய திரைப்பிரபலங்கள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி திரையுலகில் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 'ஐயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நயன்தாரா படிப்படியாக நட்சத்திர அந்தஸ்த்தைப் பெற்றார். அதே நேரத்தில் விக்னேஷ் சிவன் உதவி இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை தொடங்கியிருந்தார். விக்னேஷ் சிவன் மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் ஹெச்.ஆர்.செக் பள்ளியில் படித்தார். மேலும் அவரது பள்ளியில் நடிகர் சிம்புவின் ஜூனியராக இருந்தார். இந்த அறிமுகம் தான் இவருக்கு முதல் படமான போடா போடியை உருவாக்க உதவியது. சிம்புவின் நட்பால் போடா போடி மூலம் இயக்குனராக அறிமுகமானார். இயக்குனராக நன்கு அறியப்பட்ட விக்னேஷ் எழுத்தாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முக தன்மை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பின் போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. ...
‘விக்ரம்’ படம் குறித்த ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ்!

‘விக்ரம்’ படம் குறித்த ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி 'விக்ரம்' திரைப்படம் வெளியானது. இதில் திரையுலக முன்னணி பிரபலங்களான கமல்ஹாசன், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி நடித்துள்ளனர். சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். கமலின்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் இப்படத்தை தயாரித்துள்ளது. பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வரும் இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைபெற்று வருகிறது. இதையடுத்து 'விக்ரம்' படம் குறித்த ரசிகர்களின் கேள்விகளுக்கு லோகேஷ் கனகராஜ் சமூக வலைதளத்தின் மூலம் பதில்களை அளித்தார். அதில் ரசிகர் ஒருவர் 'கைதி திரைப்படத்தில் இறந்த அர்ஜுன் தாஸ் கதாப்பாத்திரம் விக்ரமி படத்தில் எப்படி உயிருடன் இருக்கிறார்? இதை நம்ப முடியவில்லை' என கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த லோகேஷ், 'கைதி திரை...
அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி-யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து செயல்படும்- தமிழக அரசு அறிவிப்பு!

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி-யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து செயல்படும்- தமிழக அரசு அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் நடத்தப்பட்டு வந்த எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் இனி அங்கன்வாடி மையங்களில் செயல்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இதற்கு அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து பள்ளிகளிலேயே எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது, தமிழ்நாட்டில் 2,381 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்குள் அமைந்த அங்கன்வாடி மையங்கள் பரிசோதனை அடிப்படையில் எல்.கே.ஜி.-யு.கே.ஜி., வகுப்புகளாக மாற்றப்பட்டு, சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. முந்தைய ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை மிகவும் கு...