ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 12
Shadow

Author: Kodanki

விபத்தில் சிக்கிய சமந்தா – விஜய் தேவரகொண்டா!

விபத்தில் சிக்கிய சமந்தா – விஜய் தேவரகொண்டா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா கணவரை விவாகரத்து செய்த பிறகு மேலும் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைக்கு வந்தது. அடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகி உள்ள யசோதா, சாகுந்தலம் படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். நடிகையர் திலகம் படத்தை அடுத்து சமந்தா, விஜய் தேவரகொண்டா மீண்டும் சேர்ந்து நடிக்கும் படம் குஷி. இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தபோது சண்டை காட்சி ஒன்றை படமாக்கி இருக்கிறார்கள். அப்பொழுது விஜய் தேவரகொண்டா, சமந்தா சென்ற கார் ஆற்றில் விழுந்துவிட்டது. இதில் சமந்தா, விஜய் தேவரகொண்டா காயம் அடைந்தார்கள். இது குறித்து படக்குழுவை சேர்ந்த ஒருவர் கூறியதாவது, காயம் அடைந்ததும் இருவருக்கும் முதலுதவி ...
பூஜையுடன் தொடங்கிய ஆர்.கே சுரேஷின் ‘ஒயிட் ரோஸ்’!

பூஜையுடன் தொடங்கிய ஆர்.கே சுரேஷின் ‘ஒயிட் ரோஸ்’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஒயிட் ரோஸ்' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'ஒயிட் ரோஸ்'. இதில் ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் தயாரிப்பாளர் ரூஸோ, மற்றொரு கதாநாயகனாக அறிமுகமாகிறார். நடிகை 'கயல்' ஆனந்தி ஆர். கே. சுரேசிற்கு ஜோடியாக நடிக்கிறார். என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ஜோஹன் ஷிவனேஷ் இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை டி. என். கபிலன் கவனிக்க, சண்டைப் பயிற்சியை பிரபு அமைக்கிறார். சைக்கோ திரில்லர் ஜானரில் தயாராகும் இந்த 'ஒயிட் ரோஸ்' திரைப்படத்தை ஸ்டூடியோ 9 ...
இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்வு!

இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்வு!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
கொரோனா தொற்றுக்கு பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டு இருந்த அன்னிய செலாவணி வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இலங்கையின் பணம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரி பொருள் பற்றாக்குறை நிலவுகிறது. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதோடு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா 40 ஆயிரம் டன் டீசல் வழங்கியது. தொடர்ந்து 1,20,000 டன் டீசல் மற்றும் 40 ஆயிரம் டன் பெட்ரோல் வினியோகம் செய்தது. பழைய பாக்கியை கொடுக்க இலங்கையிடம் பணம் இல்லாதால் துறைமுகத்தில் கப்பல் காத்திருக்கிறது. இந்த நிலையில் இலங்கையில் இன்று பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை 24.3 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.420க்கு விற்பனையானது....
அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தின் அடுத்த ஹீரோ!

அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தின் அடுத்த ஹீரோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் 2018-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான கனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் தெலுங்கிலும் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் ஆனது. அதன்பின்னர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான ஆர்ட்டிகிள் 15 என்கிற இந்தி படத்தின் ரீமேக்கான நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கிருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.   இந்நிலையில், அருண்ராஜா காமராஜ் இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் கார்த்தி நடிக்கும் அடுத்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் மேலும்...
நடிகர் டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
பிரபல இயக்குனரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் காட்டியவர். இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் திடீர் உடல்நலக் குறைவால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், தற்போது நல்ல முறையில் அவர் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் என தகவல் வெளியாகியது....
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை, திருவாரூர், நாகை உள்பட 12 டெல்டா மாவட்டங்களின் பாசனத்தேவைக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந் தேதிக்கு முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் மூலம் டெல்டா பாசனத்துக்குட்பட்ட 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அணையின் நீர்மட்டம் 95 அடிக்கு மேல் இருக்கும்போது வழக்கமான நாளில் தண்ணீர் திறக்கப்படும். இந்த நிலையில் நடப்பு ஆண்டு கோடை காலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பி, மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து கொண்டே வ...
டிமான்டி காலனி 2 – இயக்குனர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

டிமான்டி காலனி 2 – இயக்குனர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் டிமான்ட்டி காலனி. அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அஜய் ஞானமுத்து அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதன்பிறகு அஜய் ஞானமுத்துவிற்கு நயன்தாராவை வைத்து ’இமைக்கா நொடிகள்’ என்ற படத்தை இயக்க வாய்ப்பு வந்தது. பிறகு விக்ரமின் கோப்ரா என பல படங்கள் கிடைத்தது. அந்த அளவிற்கு இப்படம் அனைவரையும் கவர்ந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிட்டததட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தில் அருள்நிதி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதன் அறிவிப்பை “டிமான்டி காலன...
நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பா.இரஞ்சித் படம்!

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பா.இரஞ்சித் படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
பரியேறும் பெருமாள், குண்டு, ரைட்டர், குதிரைவால், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்திருந்தது. அந்த வரிசையில் எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதையைத் தழுவி உருவாக்கப்பட்ட படம் 'சேத்துமான்' படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு பிந்து மாலினி இசையமைத்திருந்தார். கிராமத்து தாத்தாவுக்கும், பேரனுக்கும் இடையிலான பாசப் போராட்டத்தை விவரிக்கும் கதைக்களமாக இப்படம் அமைந்தது. அண்மையில் கேரளாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக ‘சேத்துமான்’ திரைப்படம் தேர்வாயிருந்தது. அதேபோல தமிழ்நாட்டில் நடந்த 19-வது சென்னை திரைப்பட விழாவில் இப்படம் இரண்டாவது விருதைப்பெற்றது. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இந்த படம் வருகின்ற மே மாதம் 27-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் ...
சிவாஜி கணேசன் குடும்பத்தில் அடுத்த ஹீரோ!

சிவாஜி கணேசன் குடும்பத்தில் அடுத்த ஹீரோ!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார். இவரின் 2-வது மகன் தர்ஷன் கணேசன். இவர் மிக விரைவில் ஒரு படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இதுபற்றி ராம்குமார் கூறியதாவது:- ஏற்கனவே எனது மூத்த மகன் துஷ்யந்த் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருப்பது அனைவருக்குமே தெரிந்ததுதான். அவருக்கு அடுத்ததாக தர்ஷன் கணேசனும் நடிக்க வருகிறார். புனேயில் நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் தெருக்கூத்து நாடகங்களை அரங்கேற்றிவிட்டு தகுந்த பயிற்சிபெற்று வருகிறார். அவருக்கு பல பட நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன. விரைவில் இது குறித்த முறைப்படியான அறிவிப்பு வெளிவரும் என்று அவர் கூறினார்....
மேற்கத்திய நாடுகளை குறிவைக்கும் குரங்கு காய்ச்சல்!

மேற்கத்திய நாடுகளை குறிவைக்கும் குரங்கு காய்ச்சல்!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
உலக நாடுகளில் கொரோனா தொற்று ஆதிக்கம் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிற நிலையில், மேற்கத்திய நாடுகளில் புதிதாக 'மங்கி பாக்ஸ்' என்று அழைக்கப்படுகிற குரங்கு காய்ச்சல் பரவல் அதிர்வலைகளை ஏற்படுத்து வருகிறது. இதுபற்றி உலக சுகாதார அமைப்பு ஆலோசனை நடத்துகிறது. இதையொட்டி உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் டாரிக் ஜசரேவிக் கூறுகையில், "37 பேருக்கு குரங்கு காய்ச்சல் உறுதியாகி உள்ளது. 71 பேருக்கு இந்த நோயின் அறிகுறிகள் கண்டறியப்பட்டு, விசாரணை நடத்தப்படுகிறது" என தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனர் குளூஜ் கூறும்போது, "இதுவரையில் பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், சுவீடன், இங்கிலாந்து ஆகிய 8 நாடுகளில் சமீப காலத்தில் குரங்கு காய்ச்சல் பரவி உள்ளது. இந்த நாடுகளைத் தவிர்த்து ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்காவில் உள்ளூர் தொற்றாக குரங்கு காய்ச்சல் பாதிப்பு கண்...