ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 12
Shadow

Author: Kodanki

கொழுப்பு குறைப்பு அறுவை சிகிச்சையின் போது நடிகை மரணம்!

கொழுப்பு குறைப்பு அறுவை சிகிச்சையின் போது நடிகை மரணம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் வரதராஜ் என்பவரது மகள் சேத்தனா ராஜ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்நிலையில் உடல் கொழுப்பை குறைக்கும் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார். பெங்களூரு ராஜாஜி நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த நடிகை சேத்தனா ராஜிற்கு மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்த பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தனியார் மருத்துவமனை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையின் அலட்சியத்தால் தமது மகள் உயிரிழந்ததாக நடிகையின் பெற்றோர் பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர். அறுவை சிகிச்சை வேண்டாம் என்று என் மகளிடம் கேட்டுக் ...
உண்மை, நியாயம் மட்டுமே எங்களுக்கு வலிமையை கொடுத்தது- விடுதலைக்குப் பின் பேரறிவாளன் பேட்டி!

உண்மை, நியாயம் மட்டுமே எங்களுக்கு வலிமையை கொடுத்தது- விடுதலைக்குப் பின் பேரறிவாளன் பேட்டி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை கேட்டதும் பேரறிவாளன் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி தன் விடுதலையை கொண்டாடிய பேரறிவாளன். பேரறிவாளன் விடுதலைக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்தார். பேரறிவாளன் விடுதலைக்காக 31 ஆண்டு காலம் போராடியதாக கூறினார். நல்லவர்கள் வாழ வேண்டும் என்பதே இயற்கையின் நியதி. எனது போராட்டம் தனிப்பட்ட போராட்டம் அல்ல. சிறைவாழ்க்கையின்போது தமிழர்கள் என் மீது மிகுந்த அன்பு செலுத்தினார்கள். தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக நினைத்தார்கள். 30 ஆண்டு காலம் என்னுடன் இருந்த அத்தனை தமிழர்களுக்கும் நன...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை- சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை- சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலை படை மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர். முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. முதலில் இவர்கள் 7 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மத்திய அரசு அனுமதிக்காததால் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறவில்லை. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைக்கவும், விடுதலை செய்யக் கோரியும் சுப்ரீம கோர்ட...
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி மே 21-ம் தேதி நடைபெறும்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி மே 21-ம் தேதி நடைபெறும்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு வரும் மே 21-ம் தேதி அன்று திட்டமிட்டபடி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 117 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வின்போது காலை 8.30 மணிக்கே தேர்வர்கள் வர வேண்டும்.  9 மணிக்கு பின் தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். குரூப் 2 தேர்வுக்கு மொத்தம் 11.78 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 4.96 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், 6.81 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களும் விண்ணப்பித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 48 பேரும், தமிழ் வழியில் படித்தவர்கள் 79,942 பேரும்  விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 7 மையங்களில் 1,15,843 பேர் தேர்வு எழுதவுள்...
புதிய தொழில் தொடங்கும் சித்தார்த்!

புதிய தொழில் தொடங்கும் சித்தார்த்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நடிகர்  சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில்  ரசிகர்களுக்கு அறிமுகமானவர். ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார். திரைப்படங்களில் நடித்தது மட்டுமன்றி அரசியல் ரீதியாக தனது கருத்துகளை டுவிட்டர் மூலம் துணிச்சலுடன் எடுத்து வைக்க தயங்காதவர். இவர் எழுதிய பல கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பின. இந்த நிலையில் சமீபத்தில் இவர் தான் திரைப்படத்துறையிலிருந்து விலகப்போவதாக தெரிவித்திருக்கிறார். தனக்காக நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. இனியும் இப்படி தொடர்ந்தால் திரை உலகில் இருந்து விலகி தொழில் செய்யும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்....
நெஞ்சுக்கு நீதி  படத்தை வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நெஞ்சுக்கு நீதி படத்தை வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், திரைப்படங்கள், நடிகர்கள்
நெஞ்சுக்கு நீதி  படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  ‘நெஞ்சுக்கு நீதி’  திரைப்படத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் பார்த்தார். படத்தை பார்த்த பின்  “நெஞ்சுக்கு நீதி” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் என அனைத்து படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். மே மாதம் 20-ந்தேதி அன்று வெளியாக உள்ள “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது....
வீட்டுவசதி வாரியத்தலைவர் பூச்சி முருகன் திடீர் ஆய்வு!

வீட்டுவசதி வாரியத்தலைவர் பூச்சி முருகன் திடீர் ஆய்வு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் அவர்கள் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் அரசு அலுவலர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்காக 452.94 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 1891 வாடகைக் குடியிருப்புகள் கட்டுமான பணிகளை இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த ஆலோசனை வழங்கினார். வீட்டு வசதி வாரிய திட்டங்களில் பயன்படுத்தப்படும் கட்டுமான பொருட்களின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தியவர் கட்டுமான பொருட்களை பொறுத்தவரை ஒப்பந்த புள்ளிகளில் இடம்பெறும் விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் பொருட்களின் தரத்தை பலகட்ட ஆய்வுகளுக்கு பிறகே பணிகளில் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும் கால தாமதம் குறித்து ஆலோசனை நடத்தியதுடன் குடியிருப்பில் பாதுகாப்பு...
தென்மேற்கு பருவமழை- தென் தமிழகத்தில் கூடுதல் மழை பொழிவுக்கு வாய்ப்பு!

தென்மேற்கு பருவமழை- தென் தமிழகத்தில் கூடுதல் மழை பொழிவுக்கு வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழை பொழிவு கிடைக்கும். தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரம் கேரளாவில் தொடங்கும். அதன்பின்பு படிப்படியாக கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு பரவி மழை பொழிவை அளிக்கும். இதனால் இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்குகிறது என்பதை உன்னிப்பாக கவனித்து வரும். அதன்படி அந்தமான் தீவுகளில் தான் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படும். கடந்த சில நாட்களாக இதற்கான அறிகுறிகள் அந்தமான் கடல் பகுதியில் தென்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தினர் கூறி இருந்தனர். தற்போது அந்தமான் தீவுகளில் பருவ மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதையடுத்து வருகிற 27ந் தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்தி...
பா.இரஞ்சித் இயக்கத்தில் கமல்ஹாசன்!

பா.இரஞ்சித் இயக்கத்தில் கமல்ஹாசன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
'விக்ரம்' திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மேடையில் பா.இரஞ்சித் அறிவித்தார்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில், சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் 'விக்ரம்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், இயக்குனர் பா.ரஞ்சித், பார்த்திபன், நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், சிலம்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக கலந்துக் க...
ஜமைக்கா சென்றடைந்த ராம்நாத் கோவிந்த்!

ஜமைக்கா சென்றடைந்த ராம்நாத் கோவிந்த்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமைக்கா சென்றடைந்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு 60 ஆண்டுகளை எட்டியுள்ளதை தொடா்ந்து ஜனாதிபதி இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளாா். அங்கு அவர், ஜமைக்கா கவா்னா் ஜெனரல் பேட்ரிக் ஆலன் மற்றும் பிரதமா் ஆண்ட்ரூ ஹோல்னஸை அவா் சந்தித்து இரு நாட்டு நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து அவா் ஆலோசனை நடத்த உள்ளாா். மேலும் அவா் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கூட்டுக் தொடரில் உரையாற்றுகிறாா். ஜமைக்காவில் சுமாா் 70 ஆயிரம் இந்தியா்கள் உள்ளனா். அவா்கள் இருநாட்டுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்தும் பாலமாக உள்ளனா் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜமைக்கா சென்ற முதல் இந்திய ஜனாதிபதி என்ற பெருமையை ராம்நாத் கோவிந்த் பெற்றுள்ளார்....