திங்கட்கிழமை, ஜூலை 13
Shadow

Author: Kodanki

விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டும் மின்சார கட்டணத்தில் மானியம்: கெஜ்ரிவால்!

விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டும் மின்சார கட்டணத்தில் மானியம்: கெஜ்ரிவால்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தலைநகர் டெல்லியில் புதிய தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் அரசாங்கத்தின் நிதி உதவியை பெறும் வகையிலான புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், டெல்லியை தொழில் முனைவோருக்கான தலைநகரமாக மாற்றுவதே ஆம் ஆத்மி அரசின் லட்சியம் என குறிப்பிட்டார். மேலும் டெல்லியில் தற்போது குடியிருப்பு வாசிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார கட்டணத்திற்கான மானியத்தை விருப்பம் உள்ளவர்கள் மட்டும் பெறுகின்ற வகையில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் தற்போது மின் நுகர்வோருக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. 201 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்தினால் ரூ.800 மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மின்சார கட்டணத்திற்கான மானியத்தை தொடர விரும்புகிறீர்களா என்று க...
தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக உள்ளதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், வங்கக்கடலில் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியால், கன்னியாகுமரி, நெய்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயமுத்தூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கலம், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்கிளல் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
தமிழகம், புதுவையில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கியது!

தமிழகம், புதுவையில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கியது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 3936 மையங்களில் தொடங்கியது. இங்கு மொத்தம் 9.55 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் உள்ள அரசு பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் இந்த தேர்வினை எழுதுகின்றனர். தமிழகத்தில் 7,712 மாற்றுத்திறனாளி, தனித்தேர்வர், சிறைவாசிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. 10.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறும் தேர்தவில் முதல் 15 நிமிடம் மாணவர்கள் வினாத்தாளை படித்துபார்க்க ஒதுக்கப்பட்டுள்ளது. ...
விசித்திரன் – விமர்சனம் 3.75/5

விசித்திரன் – விமர்சனம் 3.75/5

CINI NEWS, HOME SLIDER, REVIEWS
காவல்துறையில் பணிபுரிந்து வந்த ஆர் கே சுரேஷ், மகள் இறந்த துக்கம் தாளாமல் VRS வாங்கிக் கொண்டு தனிமையில் நாட்களை நகர்த்துகிறார். மனக்கசப்பு காரணமாக வேறொரு திருமணம் செய்து கொண்ட மனைவி பூர்ணாவையும் அவ்வப்போது நினைத்து நினைத்து கண்கலங்கி மது, புகை என தன்னைத் தானே மனதையும் உடலையும் வருத்திக் கொள்கிறார். இவர் வி ஆர் எஸ் வாங்கிச் சென்றாலும், முடிக்க முடியா பல வழக்குகளை முடித்துத் தருமாறு காவல்துறையே இவரிடம் வந்து நிற்கும், அந்த அளவிற்கு திறமையானவர். ஒருநாள், பூர்ணா விபத்தில் சிக்கி இறந்து விட, அது விபத்து அல்ல, கொலை என கண்டறிகிறார் ஆர் கே சுரேஷ். யார் அந்த கொலை செய்தது.? கொலைக்கான காரணம் என்ன.? இதில் மருத்துவமனையில் நடக்கும் ஊழல் என்னென்ன என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும் படம் தான் “விசித்திரன்”. மாயன் கதாபாத்திரத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் ஆர் கே சுரேஷ். இப்ப...
‘விக்ரம்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

‘விக்ரம்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற மே 15-ம் தேதி அன்று படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....
சமூக வாகனத்திற்கு சகோதரத்துவமே சக்கரம்- கவிஞர் வைரமுத்து ரம்ஜான் வாழ்த்து!

சமூக வாகனத்திற்கு சகோதரத்துவமே சக்கரம்- கவிஞர் வைரமுத்து ரம்ஜான் வாழ்த்து!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாட்டின் முக்கிய தலைவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கவிஞரும், தமிழ் திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து, ரம்ஜான் பண்டிகையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:- மெய்வருத்தம் ஏற்று சக மனிதனின் துயர் உணர்கிறது ஈகையை வாழ்க்கையின் பாகமாக்குகிறது சமூக வாகனத்திற்கு சகோதரத்துவமே சக்கரம் என்கிறது உலக நாடுகளின் கொடிகளிலெல்லாம் சமாதானப் பூக்களையே யாசிக்கிறது ரமலானை வகுத்தவர்களையும் வாழ்கிறவர்களையும் வாழ்த்துகிறேன் இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்....
பொதுத்தேர்வின்போது தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும்- மின்வாரியம் உத்தரவு!

பொதுத்தேர்வின்போது தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும்- மின்வாரியம் உத்தரவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் வரும் மே 5-ம் தேதி ப்ளஸ் 2 வகுப்புக்கும், மே 6-ம் தேதி முதல் 10-ம் வகுப்புக்கும், மே 10-ம் தேதி முதல் ப்ளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்வின்போது தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.. நாளை மறுநாள் முதல் பொதுத்தேர்வு தொடங் உள்ள நிலையில் மண்டல தலைமை பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. சுற்றறிக்கையில், தேர்வு மையங்களில் மின்தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மின்தடை ஏற்பட்டால் மாற்று வசதி ஏற்படுத்தவும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பொதுத்தேர்வு மையங்களில் மின்வாரிய அதிகாரிகள் முன்கூட்டியே மின்பாதைகள் பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பொதுத்தேர்வு மையங்களுக்கு அருகேயுள்ள மின்மாற்றி பழுதடைந்தால் உடனே மாற்றவும் மின்வ...
“சாணி காயிதம் படத்தில் நடிக்கும்வரை நடிப்பு என்பது சலிப்பான ஒன்று என்றே கருதினேன்” – செல்வராகவன்!

“சாணி காயிதம் படத்தில் நடிக்கும்வரை நடிப்பு என்பது சலிப்பான ஒன்று என்றே கருதினேன்” – செல்வராகவன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பழிக்குப் பழிவாங்கும் கதைக்களம் கொண்ட, விரைவில் வெளிவரவுள்ள அதிரடி தமிழ் சித்திரமான ’சாணி காயிதம்’ திரைப்படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டது. தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்கும் வெற்றி இயக்குனராக இருந்து நடிகராக மாறிய செல்வராகவன் ஒரு நடிகராக மீண்டும் வருவதைக் காண்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன போன்ற தமிழ் திரைப்படங்களை இயக்கியுள்ள பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான செல்வராகவன் இப்படத்தில் சங்கையா கதாபாத்திரத்தை சித்தரிக்கிறார். தான் நடிக்க வந்ததைக் குறித்து அவர் கூறுகையில், “நான் இயக்குனராக இருக்கும் காலத்தில் இருந்தே நேரத்தைப் பார்த்து வேலை செய்வது கூடாது என்ற ஒரு கொள்கை எனக்கு இருந்தது. செய்யும் பணியில் முழு கவனத்தோடு செயல்படும்போது நேரம் போவதே தெரியாது. அனைத்தும் என...
படப்பிடிப்பை நிறைவு செய்த அதர்வா!

படப்பிடிப்பை நிறைவு செய்த அதர்வா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்கி இருக்கும் திரைப்படத்திற்கு 'நிறங்கள் மூன்று' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹைப்பர்லிங்க் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்கிறார். சுஜித் சாரங்கின் உதவியாளர் டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார். கடந்த ஜனவரி 2-ந்தேதி இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இயக்குனர் கார்த்திக் நரேன் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். படத்தின் புதிய ...
“இரவின் நிழல்”  டீசர் வெளியீட்டு விழாவில் மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்!

“இரவின் நிழல்” டீசர் வெளியீட்டு விழாவில் மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
1989-இல் வெளியான புதிய பாதை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பார்த்திபன். இவர் உள்ளே வெளியே, ஹவுஸ்புல், கதை திரைக்கதை வசனம் போன்ற பல படங்களை இயக்கியிருந்தார். இவர் இயக்கிய ‘ஒத்த செருப்பு அளவு 7’ என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை ஈர்த்து தேசிய விருதையும் இப்படம் தட்டிச் சென்றது. வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் பார்த்திபன் சில மாதங்களுக்கு முன்பு ஒரே ஷாட்டில் ஒரு படத்தை எடுக்க உள்ளதாகவும், அப்படத்திற்கு ‘இரவின் நிழல்’ என பெயர் வைத்துள்ளதாகவும் அறிவித்திருந்தார். கதையை தயார் செய்துவிட்டு நடிகர்களை அழைத்தபோது பலரும் பின் வாங்கினார்கள். சிலர் பார்த்திபன் சொன்ன யோசனைக்கு ஒத்துக்கொண்டு நடித்தார்கள். பார்த்திபன் தற்போது அந்த படத்தையே எடுத்து முடித்து விட்டார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில், ...