திங்கட்கிழமை, ஜூலை 13
Shadow

Author: Kodanki

விஜய் 66 படத்தில் இணையும் பிரபல நடிகர்!

விஜய் 66 படத்தில் இணையும் பிரபல நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்யின் சகோதரராக மோகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த படத்தில் நடிக்கவில்லை என்பதை மோகன் உறுதி செய்தார். இதனை அடுத்து தற்போது 2000ஆம் ஆண்டுகளில் பிரபல நடிகராக வலம் வந்த ஷாம் இந்த படத்தில் விஜய்யின் சகோதரராக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ஷாம், 12 பி, இயற்கை, தில்லாலங்கடி, உள்பட பல படங்களில் நடித்துள்ளார். விஜய் நடித்த ‘குஷி’ படத்தில் விஜய்யின் நண்பர்களில் ஒருவராக ஷாம் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....
ஜீவி-2 உருவாவதற்கு விஷ்ணு விஷாலும் ஒரு காரணம் ; இயக்குநர் VJ கோபிநாத்

ஜீவி-2 உருவாவதற்கு விஷ்ணு விஷாலும் ஒரு காரணம் ; இயக்குநர் VJ கோபிநாத்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஜீவி-2 உருவாவதற்கு விஷ்ணு விஷாலும் ஒரு காரணம் ; இயக்குநர் VJ கோபிநாத் வெங்கட்பிரபு-சிம்பு கூட்டணியில் மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப் படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன் தற்போது ராம் இயக்கத்தில் நிவின்பாலி, அஞ்சலி நடிப்பில் உருவாகும் படத்தை தயாரித்து வருகின்றது. அதேசமயம் இன்னொரு பக்கம் மாநாடு படத்திற்குப் பின் ஜீவி-2 என்கிற படத்தையும் சத்தமில்லாமல் தயாரித்து முடித்து விட்டது. கடந்த 2019ல் நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ஜீவி.. இயக்குநர் VJ கோபிநாத் இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் தற்போது ஜீவி-2 உருவாகியுள்ளது. ஜீவி படத்தின் கதையே தொடர்பியல் விதியை மையப்படுத்தித் தான் உருவாக்கப்பட்டிருந்தது...
பூச்சி முருகனுக்கு சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம்!

பூச்சி முருகனுக்கு சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பூச்சி முருகனுக்கு சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது பிரபல நடிகர் மற்றும் இயக்குநருமான மனோபாலாவுக்கும், தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான பூச்சி முருகனுக்கும் டாக்டர் பட்டம் வழங்கி சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம் கெளரவித்துள்ளது. இதுதவிர, திரைத்துறைக்கு இத்தனை வருடங்களாக மனோபாலா ஆற்றியுள்ள சிறப்பான சேவைக்காக வாழ்நாள் சாதனையாளர் விருதை குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சில் அவருக்கு வழங்கியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல உயர் கல்வி நிறுவனமான சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம், டாக்டர் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் எனும் கௌரவ முனைவர் பட்டத்தை மனோபாலாவின் நீண்டகால திரைப்பணிக்காக வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. பல்வேறு துறைகளில் திறம்பட பணியாற்றிவரும் பூச்சி முருகனுக்கும் அவரது சேவைகளை அங்கீகரிக்கும் ...
பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டு மழையில், அமேசான் ஒரிஜினல் திரைப்படம் “ஓ மை டாக்” !

பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டு மழையில், அமேசான் ஒரிஜினல் திரைப்படம் “ஓ மை டாக்” !

Uncategorized
  பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டு மழையில், அமேசான் ஒரிஜினல் திரைப்படம் “ஓ மை டாக்” ! அமேசான் பிரைம் வீடியோ சமீபத்தில் உலகளவில் ஒரு அசத்தலான ஃபேமிலி எண்டர்டெய்னராக, 'ஓ மை டாக்', படத்தை வெளியிட்டுள்ளது. ஒரு சிறு நாய்க்குட்டி சிம்பா மற்றும் ஒரு குட்டிப்பையன் அர்ஜுன் (ஆர்ணவ் விஜய்) பற்றிய அழகான கதையை சொல்லும் இப்படம் பார்வையாளர்களின் இதயங்களை வென்றுள்ளது. ஒரு திரைக்குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை சேர்ந்தவர்களில், பழம்பெரும் நடிகர் விஜய் குமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்ணவ் விஜய் ஆகியோர் இப்படத்தில் முதல்முறையாக இணைந்து நடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்கள். இப்படம் பார்வையாளர்களிடம் மட்டுமில்லாமல், திரைத்துறை பிரபலங்களிடமிருந்தும் பெரும் அன்பைப் பெற்று வருகிறது, அவர்கள் இணையமெங்கும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் படத்தைப் பற்றிய பாரா...
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்திற்கு தடை!

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்திற்கு தடை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தொடர்ந்து அவெஞ்சர்ஸ், ஸ்பைடர் மேன் உள்ளிட்ட சூப்பர் ஹீரோ திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. இந்த திரைப்படங்களுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு இருக்கிறது. மார்வெல் திரைப்படங்களில் அடுத்த படமாக டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டி வெர்ஸ் ஆப் மேட்னஸ் என்ற திரைப்படம் வரும் மே 6-ஆம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் பெனெடிக்ட் கும்பர்பேட்ச், எலிசபெத் ஓல்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்பைடர் மேன் 1 மற்றும் 2 ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் சேம் ரைமி இயக்கவுள்ளார். சவுதி அரேபியாவில் இப்படம் மே 5-ஆம் தேதி வெளியாக இருந்தது. இந்நிலையில் இந்த படத்தை வெளியிடுவதற்கு சவுதி அரேபியா அரசு தடை விதித்துள்ளது. இந்த படத்தில் ஒசித்தல் கோமேஸ் நடிக்கும் அமெரிக்கன் சாவேஸ் என்ற கதாபாத்திர தன்பால் ஈர்ப்பாளராக காட்டப்பட்டுள்ளது. இது அந்நாட்டு சட்ட...
பிரபல நடிகர் சக்ரவர்த்தி காலமானார்!

பிரபல நடிகர் சக்ரவர்த்தி காலமானார்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழ் திரையுலகில் 80 திரைப்படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் நடிகர் சக்ரவர்த்தி இன்று அதிகாலை மும்பையில் காலமானார். அவருக்கு (வயது 62). சிவாஜி, ரஜினி, கமல் என்று பல நாயகர்களுடன் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சக்ரவர்த்தி. ரிஷி மூலம் படத்தில் சிவாஜியுடன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் சினிமாவில் இருந்து விலகி மும்பையில் வசித்து வந்தார். சக்ரவர்த்தி சோனி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பின்னணி குரல் கொடுக்கும் பணியில் இருந்து வந்தார். இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தூக்கத்திலேயே உயிர் பிரிந்திருக்கிறது. காலையில் மனைவி லலிதா அவரை எழுப்பிய போதுதான் அவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. சக்ரவர்த்தி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராக இருக்கிறார். அவருக்கு லலிதா என்ற மனைவியும், சசிகுமார், அஜய் குமார் என்ற இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். சசிகுமார் மும்பை ...
நடிகை பலாத்கார வழக்கு – மஞ்சுவாரியரிடம் பல மணி நேரம் விசாரணை!

நடிகை பலாத்கார வழக்கு – மஞ்சுவாரியரிடம் பல மணி நேரம் விசாரணை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஓடும் காரில் பிரபல நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் விடுதலையான திலீப், வழக்கின் விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாக புகார் எழுந்தது. மேலும் வழக்கின் சாட்சியங்களை அழித்ததாகவும், குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக சில கருத்துக்களை நடிகை மஞ்சுவாரியர் கூறியிருந்தார். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர். கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று அவரிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நடிகை மஞ்சுவாரியரிடம் குற்றப்பிரிவு போலீசார் சுமார் 3½ மணிநேரம் விசாரணை நடத்தினர். இதில் பல்...
இணையத்தை கலக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் டிரைலர்!

இணையத்தை கலக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் டிரைலர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
2022 ஆண்டில் பல பிரமாண்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்று “காத்து வாக்குல ரெண்டு காதல்”. விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா என தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரும் நட்சத்திர கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டிரைலர் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று, இணையத்தில் வைரலாகி வருகிறது, முன்னதாக இப்படத்திலிருந்து வெளியிடப்பட்ட டீசர் மற்றும் இசையமைப்பாளார் அனிருத் இசையில் வெளியான “டூ டூடூ டூ டூடூ” பாடல், ரெண்டு காதல், நான் பிழை போன்ற பாடல்கள் பல மில்லியன் பார்வைகள் குவித்து, சாதனை படைத்தது. இந்நிலையில் டிரைலர், பெரும் வரவேற்பை பெற்றதுடன், இணையமெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது. தமிழ் திரையுலகில் மாறுபட்ட களங்களில் தரமான...
கவின் நடிக்கும் ”டாடா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

கவின் நடிக்கும் ”டாடா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான கவின், தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்து வெளியான ‘லிஃப்ட்’ திரைப்படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இதுதவிர நெல்சன் இயக்கும் ‘டாக்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் இவர் நடித்த ‘ஆகாஷ் வாணி’ என்ற வெப் தொடர் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. 2012-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ’மனம் கொத்தி பறவை’ படத்தை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம், அதன்பின் தேசிங்கு ராஜா, ஜிப்ஸி போன்ற படங்களை தயாரித்துள்ளது. ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கும் புதிய படத்தில் பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸுடன் இணைந்து கவின் நடித்துவருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குகிறார். நவீனகால பின்...
பரத்தின் 50-வது படத்தின் போஸ்டர்!

பரத்தின் 50-வது படத்தின் போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பாய்ஸ், செல்லமே, காதல், வெயில், ஸ்பைடர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் பதித்தவர் நடிகர் பரத். இவரின் யதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நடுவண் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று 12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா 2022-ல் தேர்வானது. பரத்தின் 50-வது படத்தின் பூஜையும் சமீபத்தில் தொடங்கியது. இதனை தயாரிப்பாளர் எஸ்.தாணு தொடங்கி வைத்துள்ளார். திரில்லர் கதை அம்சம் கொண்டு உருவாகும் இப்படத்தில் பரத்திற்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். அவர்களுடன் விவேக் பிரசன்னா, பிக்பாஸ் புகழ் டேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆர்.பி.பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. லுசிபர், மரைக்காயர், குருப் உள்ளிட்ட பல படங்களுக்கு தமிழில் வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதிய ஆர்.பி.பாலா இப்படத்தின் மூலம் இயக்குனரா...