அதே கண்கள்… விளம்பரமில்லா வெற்றி..!
அதே கண்கள்... விளம்பரமில்லா வெற்றி..!
கலையரசன் நடிப்பில் சிவி.குமார் தயாரிப்பில் சமீபத்திய வெளியான படம் ‘அதேகண்கள்’.
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக படங்கள் தயாரிப்பதை விட ரிலீஸ் செய்ய செலவிடும் தொகை ஒரு பட தயாரிப்பை மிஞ்சும் அளவுக்கு மாறியுள்ளது.
அந்த அளவுக்கு செலவு செய்தாலும் ரசிகர்களுக்கு ஏற்ற கதையில்லாமல் போனால் கோடிகளில் விளம்பரம் செய்தாலும் பட ரிசல்ட் படுத்துக் கொள்ளும்.
சூப்பர் ஸ்டார் படம் தொடங்கி அறிமுக நடிகர்கள் படம்வரை இதுதான் இன்றைய கோலிவுட் நிலை.
அதிலும் குறிப்பாக பட ரிலீஸ் நேரத்தில் டிவி விளம்பரம், ரேடியோ விளம்பரம், பேப்பர் விளம்பரம், இணையதள விளம்பரம் இவை தவிர ‘மிரட்டல் விளம்பரம்’(இதுதனி ரகம்). இப்படி பல முனைகளில் படத்தை விளம்பரப்படுத்தி அதற்காக பல கோடிகளை செலவு செய்தால் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்ய முடிகிறது.
தமிழ் சினிமாவில் சமீபத்திய தயாரிப்பாளர்கள் எல்லாம் படம் தொடங்கும்போத...
