வித்தியாசமான முயற்சி ‘ஆறாம் வேற்றுமை’ விமர்சனம்
வித்தியாசமான முயற்சி
‘ஆறாம் வேற்றுமை’
- கோடங்கி
‘ஆறாம் வேற்றுமை’ கதை தொடங்குவதற்கு முன்பு மலை கிராமங்களின் விவரங்கள், அதன் மக்கள்... அதில் இருந்து விலகி நிற்கும் மர்மம் நிறைந்த ‘கூனிக்காடு’ மலை கிராமம்... என பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியபடியே தொடங்குகிறது படம்..!
கூனிக்காடு, கோட்டைக்காடு என்ற இரு மலைக் கிராமங்கள். இதில் கோட்டைக்காடு மலை கிராமத்தில் திடீர் திடீரென ஆட்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலைகளை யார் செய்வது என்பது தெரியாமல் கிராமத்து ஆட்கள் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். போலீஸ் அதிகாரிகள் தனி குழு வைத்து கொலையாளியை பிடிக்க வருகிறார்கள். கொலைகள் ஏன் நடக்கிறது. கொலையாளியை போலீஸ் பிடித்ததா கூனிக்காடு, கோட்டைக்காடு இரண்டுக்கும் ஏற்பட்ட பகை என்ன, காட்டுவாசி கூட்டம் என்ன ஆனது என்பதை விளக்குகிறது ‘ஆறாம் வேற்றுமை’ படம்.
கோட...









