பணம் ஒதுக்க செனட் சபை மறுப்பு… அமெரிக்க அரசு அலுவலகங்கள் முடங்கின..!
அமெரிக்காவில் புதிய வரவு செலவுத் திட்டத்தை செனட் சபை ஏற்றுக் கொள்ளாததால் அரசு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 16-ம் தேதி வரை அரசு பணிகளை கவனிக்க நிதியளிக்கும் இந்த மசோதா நிறைவேறுவதற்கு தேவையான 60 ஓட்டுகளைப் செனட் சபையில் பெற இயலவில்லை. எல்லை பாதுகாப்பு மற்றும் கனவுகளுடன் புதிதாக அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பான தங்களது விருப்பத்துக்கு அரசு மதிப்பளிக்காததால் இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் தோற்கடித்தன.
அமெரிக்க பாராளுமன்றத்தில் பெரும்பாண்மை வகிக்கும் குடியரசு கட்சியைச் சேர்ந்தவரே அதிபராகவும் உள்ள நிலையில் இந்த வரவு செலவு திட்டம் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசு செலவினங்களை சமாளிக்க அடுத்த மாதம் வரை நிதி அளிப்பதை நீட்டிக்கும் முடிவுக்கு பிரதிநிதிகள் சபையில் 230 வாக்குகள் ஆதரவாகவும் 197 வாக்குகள் எதிராகவும் பதிவானது. ஆனால், 100 உறுப்பினர்களை கொண்ட செனட்...









