கால்நடை தீவன ஊழல்: லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை..!
கால்நடை தீவன ஊழல்: லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை..!
பீகாரில் நடைபெற்ற கால்நடை தீவன ஊழல் வழக்கில் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் மற்றும் சிலர் மீது ரூ.89.27 லட்சம் கால்நடை தீவன ஊழல் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி சிவபால் சிங், லாலு பிரசாத் உள்பட 16 பேர் குற்றவாளி என 23-12-2017 அன்று தீர்ப்பளித்தார்.
அவருக்கான தண்டனை விவரம் கடந்த 3-ந்தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், அன்று வழங்கப்படவில்லை. மறுநாளைக்கு (நேற்று முன்தினம்) ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் லாலு பிரசாத்தின் ஆதரவாளர்கள், நீதிபதிக்கு தொலைபேசி வழியாக மிரட்டல் விடுத்ததன் காரணமா...









