சனிக்கிழமை, ஜூன் 27
Shadow

Author: Kodanki

விஸ்வாசம் படம் மூலம் முதல்முறையாக இணைந்த அஜித் – டி.இமான்..!

விஸ்வாசம் படம் மூலம் முதல்முறையாக இணைந்த அஜித் – டி.இமான்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
அஜித்துடன் - சிவா 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 15-ந் தேதி தொடங்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தையும் தயாரிக்கிறது. இதில் அஜித் ஜோடியாவது யார் என்பதில் குழப்பம் நீடித்த நிலையில், நயன்தாரா என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது, அதனைத் தொடர்ந்து படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்து பல வதந்திகள் பரவி வந்தன. இந்த படத்திற்கு இசையமைக்க முதலில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் அனிருத், சாம்.சி.எஸ் உள்ளிட்ட பெயர்களும் அடிபட்டன. பின்னர் டி.இமான் ‘விஸ்வாசம்’ படத்திற்கு இசையமைக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் டிரெண்டானது. படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்களும் அதனை உறுதி செய்த நிலையில், தற்போது இசையமைப்பாளர் யார் என்பது குறித்த...
காலாவிற்காக ரசிகர்களிடம் கருத்து கேட்கும் சந்தோஷ் நாராயணன்

காலாவிற்காக ரசிகர்களிடம் கருத்து கேட்கும் சந்தோஷ் நாராயணன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் `2.0' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் `காலா' படத்தை முன்னதாக வெளியிட படக்குழு திட்டமிட்டு சமீபத்தில் ரிலீஸ் தேதியையும் அறிவித்தது. அதன்படி `காலா' படம் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. `கபாலி’ படத்திற்கு பிறகு ரஜினி - பா.இரஞ்சித் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து கேட்டிருக்கிறார். இது குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், ‘காலா’ இசை உருவாக்கத்தில் உங்கள் எல்லோரையும் பங்கு பெற வைப்பது என்னுடைய கனவு. 'காலா' படத்தின் அறிமுகப் பாடலுக்கான இசை எப்படியானதாக இருக்க வேண்ட...
படக்குழுவினரை ஆச்சரியப்பட வைத்த சன்னிலியோன் குதிரை சவாரி..!

படக்குழுவினரை ஆச்சரியப்பட வைத்த சன்னிலியோன் குதிரை சவாரி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தற்போது தமிழில் நடிக்கும் வீரமா தேவி படத்தின் படப்பிடிப்பில் படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தி உள்ளார். வடிவுடையான் அடுத்து இயக்கும் படம் ‘வீரமா தேவி’ இதில் இந்தி கவர்ச்சி நடிகை சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்கிறார். சரித்திர கதையாக உருவாகும் இது பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது. இந்த படத்தில் சன்னி லியோன் நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில், ‘வீரமா தேவி’ படப்பிடிப்பு தொடங்கியது. இதில் சன்னிலியோன் குதிரை சவாரி செய்யும் காட்சி படமாக்கப்பட்டது. அவர் குதிரை மீது சிறிதும் பயமில்லாமல் உட்கார்ந்து வேகமாக வலம் வந்த காட்சி படக்குழுவினரை ஆச்சரியப்பட வைத்தது....
பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது ஐகோர்ட்

பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது ஐகோர்ட்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இயக்குனர் பாரதிராஜா வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக, இந்து மக்கள் முன்னணி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த புகார் மீது விசாரணை நடத்தப்படவில்லை. இதையடுத்து இந்து மக்கள் முன்னணி சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்த ஐகோர்ட், இயக்குனர் பாரதிராஜா மீதான புகார் குறித்து விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. வன்முறையை தூண்டும் வகையில் பாரதிராஜா பேசியதாக அளித்த புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.  ...
தீபா வீட்டுக்கு வந்த போலி அதிகாரிக்கும் மாதவனுக்கும் தொடர்பில்லை – சென்னை போலீஸ்

தீபா வீட்டுக்கு வந்த போலி அதிகாரிக்கும் மாதவனுக்கும் தொடர்பில்லை – சென்னை போலீஸ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தலைவர் ஜெ. தீபாவின் வீட்டுக்கு கடந்த சனிக்கிழமை வருமான வரித்துறை அதிகாரி என ஒருவர் வந்துள்ளார். பின்னர், போலீசார் வருவது தெரிந்ததும் அவர் ஓட்டம் பிடித்தார். நேற்று முன்தினம் இரவு அந்த ஆசாமி போலீசில் சரணடைந்தார். அவரது பெயர் பிரபாகரன் என்று தெரிவிக்கப்பட்டது. தீபாவின் கணவர் மாதவன் சினிமா வாய்ப்பு வாங்கித்தருவதாக கூறி, நடிக்கச்சொன்னார் என பிரபாகரன் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியது. அதற்கு ஏற்றார்போல மாதவன் தலைமறைவானார். இந்நிலையில், பிரபாகரனுக்கும் மாதவனுக்கும் தொடர்பில்லை என சென்னை மாநகர போலீசார் விளக்கமளித்துள்ளனர். போலி அடையாள அட்டை மற்றும் சோதனை வாரண்டை தயாரித்தது பிரபாகரன்தான் எனவும் மாதவனுடன் பிரபாகரன் தொலைபேசியில் பேசியது பொய்யான தகவல் என்றும் தெரிவித்தனர்.  ...
பாலியல் தொல்லை புகார்… அவதூறு வழக்கு தொடருவேன் பதறும் அமலாபால்..!

பாலியல் தொல்லை புகார்… அவதூறு வழக்கு தொடருவேன் பதறும் அமலாபால்..!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
நடிகை அமலா பால், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலதிபர் ஒருவர் மீது காவல் நிலையம் சென்று புகார் தெரிவித்தார். அதன் பின் அந்த தொழிலதிபரைக் காவல் துறையினர் கைது செய்தனர். மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து அமலா பால் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "ஜனவரி 31ஆம் தேதி சென்னையின் ஒரு டான்ஸ் ஸ்டுடியோவில் நான் நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த ஒருவர் என்னை அணுகி, நடன நிகழ்ச்சியை பற்றி ஒரு சில முக்கிய விஷயங்களை விவாதிக்க வேண்டும் என்று கூறினார். மலேசியாவில் பிப்ரவரி 3ஆம் தேதி நடக்கும் விழாவுக்கு பிறகு அவருடன் இரவு உணவில் கலந்து கொள்ள அழைத்தார். அப்படி என்ன விஷேசமான டின்னர் என நான் அவரை குறுக்கு கேள்வி கேட்டபோது, அவர் அலட்சியமாக உனக்கு தெரியாதா ? என்ற பாணியில் பேசினார். நாங்கள் பேச...
மின்வாரிய ஊழியர்களின் முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வி..!

மின்வாரிய ஊழியர்களின் முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது. மீண்டும் பிப்ரவரி 15-ம் தேதி மீண்டும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறியுள்ளனர். மின்வாரிய ஊழியர்களுக்கு 1.1.2015 முதல் ஊதிய உயர்வு வழங்கி இருக்க வேண்டும். ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை குழுவுடன் தொழிற்சங்கங்கள் 4 கட்டமாக ஏற்கெனவே பேச்சு நடத்தின. தமிழ்நாடு மின்சார வாரியம், அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 2.57 காரணி ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான முத்தரப்புப் பேச்சுவார்த்தை கடந்த ஜன.22-ஆம் தேதி, தொழிற்சங்கப் பிரதிநிதிகள், மின்வாரிய அதிகாரிகள், தொழிலாளர் நலத் துறை ஆணையர் பங்கேற்புடன் நடைபெற்றது. இவற்றை நிர்வாகம் ஏற்க மறுத்ததால் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பெருந்திரள் தர்ணா, காத்திருப்ப...
தமிழகத்தில் இனி பட்டையைக் கிளப்பப் போகுது வெயில்..!

தமிழகத்தில் இனி பட்டையைக் கிளப்பப் போகுது வெயில்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகம் மற்றும் புதுவையில் இனிவரும் நாட்களில் வெப்பநிலை படிப்படியாக உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: சென்னையில் தற்போது மேகக்கூட்டங்கள் நிலவுவதன் காரணமாக குறைந்தபட்ச வெப்பநிலையின் அளவு உயர்ந்துள்ளது. காலநிலையானது குளிர் காலத்திலிருந்து கோடை காலத்தை நோக்கி மாறத் துவங்கியுள்ளதால் , சூரியன் விரைவாகவே உதித்து வருகிறது. இதன் விளைவாக தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இனிவரும் நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலை படிப்படியாக உயரும்....
JALLIKATTU Tamil MOVIE AND THE HARVARD TAMIL CHAIR signed an agreement

JALLIKATTU Tamil MOVIE AND THE HARVARD TAMIL CHAIR signed an agreement

HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
It’s a moment of great pride for the film makers of JALLIKATTU 5-23rd Jan 2017 as they have associated with the Harvard Tamil Chair formed to promote the language of Tamil. The Producer Nirupama of Ahimsa productions along with the co Producer Ganapathy Murugesh recently met the two main donors Dr Vijay Janakiraman and Dr Sundaresan Sambandam along with the Treasurer of the Harvard Tamil Chair MR Kumar Kumarappan at San Francisco, USA. There are two significant moments that brought together people with the love for Tamil and it’s culture and tradition in recent times. first it was the Jallikattu uprising in January 2017 and most recently The Harvard Tamil Chair. It’s a glorious moment that the film makers of this Jallikattu uprising and the founder members of the Harvard Tamil Cha...
‘ஜல்லிக்கட்டு 5-23 ஜனவரி 2017’ பட ஒரு நாள் வசூலின் ஒரு பகுதி தமிழ் இருக்கைக்கு வழங்க ஒப்பந்தம்..!

‘ஜல்லிக்கட்டு 5-23 ஜனவரி 2017’ பட ஒரு நாள் வசூலின் ஒரு பகுதி தமிழ் இருக்கைக்கு வழங்க ஒப்பந்தம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
நிஜம்தான். தமிழர்களது வீரத்தின் அடையாளமாக, தொன்றுதொட்டு குறிப்பிடப்படுவதில் ஜல்லிக்கட்டும் ஒன்று. தமிழ் மண்ணான இம்மாநிலத்தில், பொங்கல் திருநாளையொட்டி ஆண்டுதோறும் இந்த வீர விளையாட்டு நடப்பதைத் தடுக்கும் முயற்சிக்கு எதிராக, தமிழ் இளைஞர்களிடம் கடந்த ஆண்டு ஏற்பட்ட எழுச்சியைப் பின்னணியாகக் கொண்டு, 'ஜல்லிக்கட்டு 5-23 ஜனவரி 2017' என்ற பெயரிலேயே திரைப்படமாக்கியது - அஹிம்சா புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்புக் குழு. அதேபோல, இன்று விவேகம் என, சொல்லப்படும் அறிவின் அடையாளமாக நிற்கும் பல்கலைக்கழகங்களில் - உலகப் புகழ் பெற்றது ஹார்ட்வேர்ட்! அதில் தமிழ் மொழி தொடர்பான ஆராய்ச்சிக்கும், அதன் வளர்ச்சிக்கும் துணை நிற்க தனி இருக்கை அமைக்கும் முயற்சியில் ஒரு குழு ஈடுபட்டுள்ளது. தமிழோடு தொடர்பு என்பதால் மட்டுமின்றி, தமிழின் சிறப்பு, தமிழர்களின் வீரம் உள்ளிட்ட பலவற்றையும் உலக அளவில் பறைசாற்றத் துடிக்கும் இ...