திராவிட கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த ரஜினிகாந்த்
சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினி, தன் ரசிகர்களை 4 வது நாளாகச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துவருகிறார்.
இன்று கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை ரஜினி சந்தித்து வருகிறார். காலை சுமார் 8.30 மணிக்கு ராகவேந்திரா மண்டபம் வந்த ரஜினி, ரசிகர்கள் மத்தியில் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-
என் நண்பர்கள் அதிகம் வாழும் நகரம் கோவை என்று பேச்சைத் தொடங்கிய ரஜினி, அங்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். எனது குரு சச்சிதானந்தர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர். எனக்கு மந்திர உபதேசம் செய்தவர் சச்சிதானந்த சுவாமிகள். சுவாமி தயானந்த சரஸ்வதி எனது குரு. சச்சிதானந்த சுவாமிகள் சொல்லியே பாபா படம் எடுத்தேன். அதேபோல் தயானந்த சரஸ்வதி எனக்கு குரு. கோயம்புத்தூர் விமான நிலையம் போகும் போதெல்லாம் எனக்கு ஒரு ஞாபகம் வரும்.
ஆன்மிகத்திற்கும் ஓரளவுக்கு பப்ளிசிட்டி தேவை. கோவை வ...








