வெள்ளிக்கிழமை, ஜூன் 19
Shadow

Author: Kodanki

இயக்குனருக்கு தங்கம் தந்த காமெடியன்..!

இயக்குனருக்கு தங்கம் தந்த காமெடியன்..!

சினி நிகழ்வுகள்
"பிரபல தொலைக்காட்சி தொடர் மூலம் பட்டாபி என்ற அடையாளத்தை பெற்ற நான், தற்போது 8 தோட்டாக்கள் படம் மூலம் மூர்த்தி என்கின்ற புதிய அடையாளத்தை பெற்று இருக்கிறேன்" என்கிறார் எம் எஸ் பாஸ்கர் ஒரு தரமான திரைப்படத்திற்கு பிரம்மாண்ட தயாரிப்பும், நட்சத்திர நடிகர் நடிகைகளும் அவசியம் இல்லை என்பதை உறுதி செய்திருக்கிறது, சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் '8 தோட்டாக்கள்' திரைப்படம். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த எம் எஸ் பாஸ்கர் அவர்களுக்கு, எல்லா தரப்பு ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மத்தியில் இருந்தும் பாராட்டுக்கள் குவிக்கின்றன. 'வெற்றிவேல் சரவணா சினிமாஸ்' சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன் மற்றும் 'பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்' - ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரித்து, இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி இருக்கும் '8 தோட்டாக்கள்' திரைப்படம், ரசிகர்க...
பலூனில் வந்த கேக்… அஞ்சலி தந்த இன்ப அதிர்ச்சியில் ஷாக் ஆன ஜெய்..!

பலூனில் வந்த கேக்… அஞ்சலி தந்த இன்ப அதிர்ச்சியில் ஷாக் ஆன ஜெய்..!

சினி நிகழ்வுகள்
ஜெய் பிறந்த நாளன்று அஞ்சலி கொடுத்த இன்ப அதிர்ச்சி - அவரின் பிறந்த நாளுக்காக 'பலூன்' இல் பறந்து வந்த கேக்... ரசிகர்களின் கண்ணோட்டத்தில் இருந்து ஒரு கதையை தேர்வு செய்யும் சிறப்பம்சம் கொண்டவர், கார் பந்தய வீரரும், நடிகருமான ஜெய். இவர் தற்போது அஞ்சலி - ஜனனி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் பலூன் படத்தின் கதாநாயகனாக நடித்து வருகிறார். பலூன் படத்திற்கு பிறகு தன்னுடைய வர்த்தக அந்தஸ்து உயரும் என்ற நம்பிக்கையோடு இருக்கும் ஜெய், தனது பிறந்த நாளை, நேற்று பலூன் படக்குழுவினரோடு கொண்டாடினார். சினிஷ் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் பலூன் படத்தை, '70 எம் எம்' நிறுவனத்தின் சார்பில் டி.என். அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். பலூன் படத்தின் ஒட்டுமொத்த உர...
விஜய சேதுபதி தரும் கவுரவம்…

விஜய சேதுபதி தரும் கவுரவம்…

சினி நிகழ்வுகள்
"சினிமா என் குடுமபம் என்றால், திரையுலக பிண்ணனி கலைஞர்கள் என் குடும்பத்தினர்" என்று கூறுகிறர் விஜய் சேதுபதி சினிமாவின் ஆரம்ப நாட்களில் இருந்து இன்று வரை அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்து வருபவர்கள் திரையுலக பிண்ணனி கலைஞர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் அத்தகைய பல திறமையான பல திரையுலக பிண்ணனி கலைஞர்கள் இன்று திரையுலகில் இருந்தே வெளியேற்றப்பட்டுவிட்டனர். அதற்கு முக்கியமான காரணம், வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில் நுட்பம். தமிழ் திரையுலகின் அப்படிப்பட்ட மூத்த திரையுலக பிண்ணனி கலைஞர்களை கௌரவ படுத்த, வருகின்ற மே 1 ஆம் தேதி அன்று பிரம்மாண்ட விழாவை 'உலகாயுதா' நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்து இருக்கிறார் இயக்குநர் எஸ் பி ஜனநாதன். தமிழ் திரையுலகின் 100 மூத்த கலைஞர்களுக்கு தலா ஒரு சவரன் என மொத்தம் நூறு சவரன் தங்க பதக்கங்கங்களின் செலவை முழுவதுமாக ஏற்று வழங்க இருப்பவர் வி...
எழுத்தாளரான நடிகை…!

எழுத்தாளரான நடிகை…!

செய்திகள்
ரங்குஸ்கி என்ற பெயரை கொண்ட ஒரு தைரியமான எழுத்தாளராக நான் ராஜா ரங்குஸ்கி படத்தில் நடிக்கிறேன்" என்கிறார் கதாநாயகி சாந்தினி தமிழரசன் 'வில் அம்பு' படம் மூலம் ஒட்டு மொத்த தமிழக இளைஞர்களின் உள்ளங்களையும் கொள்ளை அடித்து சென்ற சாந்தினி தமிழரசன், தற்போது 'பர்மா' மற்றும் 'ஜாக்சன் துரை' புகழ் தரணிதரன் இயக்கி வரும் 'ராஜா ரங்குஸ்கி' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 'மெட்ரோ' புகழ் ஷிரிஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை சக்தி வாசன் மற்றும் 'பர்மா டாக்கீஸ்' இணைந்து தயாரித்து வருகிறது. யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். மேலும் அவரது இசையில் 'ராஜா ரங்குஸ்கி' படத்திற்காக சிலம்பரசன் ஒரு பாடலை பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. "இந்த படத்தில் ரங்குஸ்கி (பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் செல்ல பெயர்) என்கின்ற ஒரு தைரியமான எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நான் நடிக்கின்றேன். நகர்ப்புற பெண் வேடத்தில் ...
சமுதிரகனியின் ஏமாலி..!

சமுதிரகனியின் ஏமாலி..!

சினி நிகழ்வுகள்
லதா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் சமுத்திரகனி - சாம் ஜோன்ஸ் நடிக்கும் “ஏமாலி” லதா புரோடக்ஷன்ஸ் சார்பாக மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக M. லதா தயாரிக்க முகவரி, தொட்டி ஜெயா, நேபாலி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் V. Z . துரை “ஏமாலி” எனும் புதிய படத்தை இயக்குகிறார். எதார்த்த நடிகர் சமுத்திரகனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உடன் புதுமுகம் சாம் ஜோன்ஸ் நடிக்கிறார். இவர்களுடன் சிங்கம் புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்க அதுல்யா ரவி கதாநாயகியாக அறிமுகமாகிறார். “ஏமாலி” படத்தின் பூஜை இனிதே முடிந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் துவங்கியுள்ளது....
யதார்த்தம் இருந்தும் வேகம் எடுக்காத விருதாச்சலம்

யதார்த்தம் இருந்தும் வேகம் எடுக்காத விருதாச்சலம்

விமர்சனம்
யதார்த்தம் இருந்தும் வேகம் எடுக்காத விருதாச்சலம் - விமர்சனம் கதாநாயகன் விருதகிரியும் அத்தை பெண்ணும் சின்ன வயதில் இருந்தே  பாசத்துடன் இருக்கிறார்கள்.  ஒரு திருவிழாவில் அத்தைப்  பெண்ணை  ஊர் பெரியவரின் தம்பி சம்பத் கீழே தள்ளிவிட, அதனால் ஆத்திரப்பட்டு விருதகிரி சம்பத்தின் கையை வெட்டி விடுகிறார். இந்த கலவரத்தில் அத்தை தன் மகளை அழைத்துக் கொண்டு ஊரை விட்டே சென்று விடுகிறார்.  விருதகிரியும், சம்பத்தும் சிறுவர் சீர்திருந்த பள்ளியில் சேர்க்கப்பட்டு பெரியவர்களான பின்னர் விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால் சம்பத் மட்டும் பழி வாங்க விருதகிரியை பல வழிகளில் முயல்கிறார். இதற்கிடையே அந்த கிராமத்திற்கு கதாநாயகி  ஸ்வேதா  டீச்சராக வருகிறார். விருதகிரியின் நல்ல பண்பை பார்த்து காதலிக்க தொடங்குகிறார். ஊர் பெரியவரின் மகளும் விருதகிரியை ஒருதலையாக காதலிக்கிறார்.  யார் காதல் வென்றது... விருதகிரியை பழிதீர்த்தாரா சம...
சமுத்திரகனி எப்போதும் சினிமாவின் தொண்டன் தான் – பாலா வாழ்த்து

சமுத்திரகனி எப்போதும் சினிமாவின் தொண்டன் தான் – பாலா வாழ்த்து

சினி நிகழ்வுகள்
இயக்குனர் சமுத்ரகனி அடுத்த படம் தொண்டன். இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இயக்குனர் பாலா பேசும் போது "சமுத்ரகனி மீது மக்கள் ஒரு தனி அடையாளம் வைத்திருக்கிறார்கள். சமீபத்திதில் அவனுக்கு சம்பந்தமில்லாத ஒரு கேரக்டரில் நடித்தான். அதை பார்த்து அவனை கண்டித்தேன். அதே போல அவன் உண்மையான தொண்டன் தான் சினிமாவுக்கான தொண்டன்" என்றார் பாலா. அதோடு இன்னும் 2 ஆண்டுகளில் நடிகர் விக்ராந்த் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய இடத்தை பிடிப்பான் என்றார் பாலா....