வியாழக்கிழமை, ஜூன் 18
Shadow

Author: Kodanki

லைகா நிறுவனத்துக்கு போலீஸ் க்காவல்

லைகா நிறுவனத்துக்கு போலீஸ் க்காவல்

செய்திகள்
தமிழ் திரையுலகில் பிரமாண்ட நிறுவனமான லைகா சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள் கட்டி உள்ளது. அதை தமிழர்களுக்கு வழங்கும் விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, மதிமுக உடபட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் காரனமாக இலங்கை பயணத்தை ரஜினி ரத்து செய்தார். இதற்கிடையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் லைகா நிறுவனம் மீது ஒரு குற்றச்சாட்டு வைத்தார். இதை எதிர்த்து வேல்முருகன் மீது லைகா நிறுவனம் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளது. இதன் காரணமாக லைகா நிறுவனத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது....
என்கிட்ட மோதாதே விமர்சனம்

என்கிட்ட மோதாதே விமர்சனம்

விமர்சனம்
1988-ல் நடக்கும் கதையில் படத்தின் நாயகர்கள் நட்ராஜ் மற்றும் ராஜாஜி இருவரும் நண்பர்கள். கட்அவுட்டுக்கு ஓவியம் வரையும் தொழில் செய்து வருகிறார்கள். பின்னர் தனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் நட்ராஜ், ராஜாஜியையும் தன்னுடன் அழைத்து வருகிறார். பின்னர் தனது அம்மா மற்றும் தங்கை சஞ்சிதா ஷெட்டியையும் திருநெல்வேலி அழைத்து வருகிறார். பின்னர் நட்ராஜ் மற்றும் ராஜாஜி அங்கேயே சொந்தமாக தொழில் செய்ய முடிவு செய்கின்றனர். இதில் நட்ராஜ் தீவிர ரஜினி ரசிகராக ரஜினி படங்களை கட்அவுட்களில் வரைந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். ராஜாஜி கமல் ரசிகராக கமல் படங்களை வரைய விரும்புகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் மாவட்ட ரசிகர் மன்றங்களில் உறுப்பினர்களாக இணைகின்றனர். அதேநேரத்தில் கமல் ரசிகரான ராஜாஜிக்கு, பார்வதி நாயரை பார்த்த உடனே காதல் வருகிறது. மறுபுறத்தில் நட்ராஜ் - சஞ்சிதாவை காதல் செய்கிறார்...
சாதனை படைத்த சிறுமியை அழைத்து பாராட்டிய நடிகர் விஜய்..!

சாதனை படைத்த சிறுமியை அழைத்து பாராட்டிய நடிகர் விஜய்..!

செய்திகள்
சேலம் மாவட்டம் ஸ்பீட் ஸ்கேட்டிங் அசோசியேஷனில் உள்ள ஜோஸ் குயின் கிளப்பில் பயிலும் மாணவி ஏ.பி.நேத்திரா. சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த ஏ.பி.நேத்திரா 2016-17 ஸ்போர்ட்ஸ் அகாடமி ஆண்டில் மாவட்ட, மாநில, தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் கோவாவில் நடைபெற்ற சர்வதேச போட்டிக்கான தேர்வில் 4-வயதுக்குட்பட்ட பிரிவில் கலந்துகொண்டு இரண்டு தங்கப்பதக்கங்களையும் பெற்று, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இதில் வென்றதன் மூலம் மே மாதம் தாய்லாந்தில் நடைபெறவுள்ள ‘ஏசியன் ரோலர் ஸ்போர்ட்ஸ் சர்வதேச போட்டி 2017’ ல் மாணவிகளுக்கான பிரிவில் இந்திய அளவில் மூன்றரை வயதுள்ள ஏ.பி.நேத்திரா கலந்துகொள்ள உள்ளார். அம்மாணவியை நடிகர் விஜய்யிடம் காண்பித்து அவரின் பாராட்டையும், ஊக்குவிப்பையும் பெற ஆசைப்பட்டனர். இதையறிந்த விஜய், நேத்திரா மற்றும் தமிழ்நாடு ஸ்கேட்டிங் அசோசியேஷன் உறுப்பினர்கள், கிளப் உறுப்பினர்களை...
மகாபாரதத்தை அவமதித்தாக கமல் மீது பெங்களூரிலும் வழக்கு

மகாபாரதத்தை அவமதித்தாக கமல் மீது பெங்களூரிலும் வழக்கு

செய்திகள்
மகாபாரதத்தை அவமதித்தாக கமல் மீது பெங்களூரிலும் வழக்கு அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பான கேள்விக்கு மகாபாரதத்தை மேற்கோள் காட்டி விளக்கமளித்தார். கமல்ஹாசனின் இந்த விளக்கம் மகாபாரதத்தை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளதாக இந்து அமைப்புகள் அவருக்கு எதிராக போர்க்கொடி எழுப்பின. இதைத்தொடர்ந்து, வள்ளியூர், கும்பகோணம் ஆகிய நீதிமன்றங்களில் கமல்ஹாசன் மீது மகாபாரதத்தை அவமதித்ததாக இந்து அமைப்பினர் புகார் மனு அளித்தனர். இந்த மனு மீதான விசாரணையை விரைவாக தொடங்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில், பெங்களூரிலும் கமல்ஹாசனுக்கு எதிராக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூரை சேர்ந்த பிரணவநந்தா என்ற சாமியார், பெங்களூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்ததோடு மட்டுமில்லாமல், விரைவில் நடத்தவேண்டும் என்றும்...
இந்த வருட இறுதிக்குள் எனக்கு திருமணம்: நடிகை பாவனா

இந்த வருட இறுதிக்குள் எனக்கு திருமணம்: நடிகை பாவனா

செய்திகள்
பிரபல நடிகை பாவனா ‘ஹனிபீ-2’ என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு வீடு திரும்பியபோது காரில் கடத்தி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார். இதுதொடர்பாக அவரது முன்னாள் கார் டிரைவர் சுனில் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் காரணமாக நடிகை பாவனா முதலில் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார். அதன்பிறகு அதிலிருந்து அவர் மீண்டு தனது இயல்பு நிலைக்கு மாறினார். இதை தொடர்ந்து அவர் ‘ஹனிபீ-2’ படத்தில் தொடர்ந்து நடிக்க தொடங்கினார். மேலும் தனது காதலரும் கன்னட சினிமா தயாரிப்பாளருமான நவீனுடன் நடிகை பாவனாவுக்கு திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. இதற்கிடையில் படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து ‘ஹனிபீ-2’ படம் கடந்த வெள்ளிக்கிழமை கேரளாவில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று உள்ளது. இதுபற்றி நடிகை பாவனா ஒரு இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-எனது வாழ்க்கை எதை...
நயன்தாரா படத்துக்கு ஏ சான்றிதழ் சென்சார் போர்டை விமர்சித்த விக்னேஷ் சிவன்

நயன்தாரா படத்துக்கு ஏ சான்றிதழ் சென்சார் போர்டை விமர்சித்த விக்னேஷ் சிவன்

செய்திகள்
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டோரா’ படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளது. திகில் காட்சிகள் படத்தில் அதிகம் இடம்பிடித்துள்ளதால் தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில், ‘டோரா’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் அளித்ததற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் தணிக்கை குழுவை மறைமுகமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘டோரா’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ். துருவங்கள் பதினாறு, மாநகரம் படங்களுக்கு ‘யுஏ’ சான்றிதழ். ஆனால், சமீபத்தில் வெளிவந்த சில படங்களுக்கு மட்டும் ‘யு’ சான்றிதழ். சென்சார் போர்டு மீதான காதல் தினம் தினம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்று கூறியுள்ளார். நயன்தாராவும்-விக்னேஷ்சிவனும் காதலர்களாக வலம் வந்துகொண்டிருப்பதாக கோலிவுட் ஒரு செய்தி பரவி வருகிறது. இருவரும் ஒரே வீட்டில் குடித்தனம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால்...
சங்கங்களுக்கு சத்தமில்லாமல் நிதி வழங்கிய விஜய்..!

சங்கங்களுக்கு சத்தமில்லாமல் நிதி வழங்கிய விஜய்..!

செய்திகள்
தமிழ் திரையுலகில் சில சம்பவங்கள் சத்தமில்லாமல் நடந்தாலும் எப்படியாவது வெளியில் தெரிந்து விடுகிறது. எடிட்டர் யூனியன் வளர்ச்சிக்காக நடிகர் விஜய் ரூ.10 லட்சம் நிதிவழங்கினார். இந்த விவரம் யாருக்கும் தெரியாமல் இருக்கும் என்று நினைக்க எடிட்டர் யூனியன் அருகில் இருந்த ஒளிப்பதிவாளர் யூனியனுக்கு தெரிந்து போனது. அப்புறம்... ஒளிப்பதிவாளர் யூனியனுக்கும் ரூ.10 லட்சத்தை நிதியாக அளித்தார் நடிகர் விஜய். இந்த இரண்டு சங்கங்களுக்கு நிதி அளித்த விவரம் வெளியில் தெரிந்து மிச்சம் இருக்கும் சங்கங்கள் விஜய் ஆபீசுக்கு வரிசை கட்டாமல் இருந்தால் சரி...! கோடங்கி...
அப்பா மலையாள ரீமேக்கில் வரலட்சுமி

அப்பா மலையாள ரீமேக்கில் வரலட்சுமி

செய்திகள்
ஒரு பக்கம் நடிகர் என பிஸியாக இருந்தாலும், தரமான படங்களை தன் சொந்த பேனரில் இயக்க ஆர்வம் கொண்டவர் சமுத்திரக்கனி.இவர் இயக்கி, நிறைய குழந்தை நட்சத்திரங்கள் நடித்த படம் ‘அப்பா’. பெண்களையும் குழந்தைகளையும் கவர்ந்த இப்படம் கமர்ஷியல் ரீதியாக வெற்றிப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தை மலையாளத்தில் ரீமேக் செய்யவிருக்கிறார். இதில் ஜெயராம், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்க, இப்படத்தின் சூட்டிங்கை ஆரம்பித்துள்ளார் சமுத்திரக்கனி. ‘அப்பா’ திரைப்படம் மலையாளத்தில் ‘ஆகாச மிட்டாய்’ என்ற பெயரில் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பமானது.இதில் ஜெயராம், வரலட்சுமி சரத்குமார், அப்பாவில் நடித்த யுவலட்சுமி, நஷாத் உள்பட பிரபல மலையாள நடிகர்கள் நடிக்க இயக்கம் சமுத்திரக்கனி....
சசிகுமாருக்கு தங்கை ஆன முன்னணி நடிகை..!

சசிகுமாருக்கு தங்கை ஆன முன்னணி நடிகை..!

செய்திகள்
ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது முத்தையா இயக்கத்தில் சசிகுமார், ஜோடியாக ஹன்சிகா நடிக்கும் கொடிவீரன் படத்தில், சசிகுமாரின் தங்கையாக நடிக்கிறார். இது பற்றி கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்... “நான் எப்போதுமே ஒரு படத்தில் நடிக்கும் போது அதில் யார் ஹீரோ, எத்தனை நாயகிகள் என்று பார்ப்பது இல்லை. கதையில் எனது பங்கு என்ன என்பதை மட்டுமே பார்க்கிறேன் அந்த வகையில் ‘கொடிவீரன்’ படத்தில் எனக்கு தங்கை வேடம் என்றாலும் அழுத்தமான வேடம். கதைக்கு முக்கியத்துவம் உள்ள வேடம். ‘காக்காமுட்டை’ படத்தில் எப்படி எனது அம்மா வேடம் பேச வைத்ததோ, அது போல் இந்த தங்கை வேடமும் என்னை பற்றி பேசவைக்கும் வகையில் இருக்கும். எனவே, சசிகுமாருக்கு தங்கையானதும் மகிழ்ச்சி தான்” என்றார்....