வியாழக்கிழமை, ஜூலை 16
Shadow

Author: Kodanki

வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் “கூட்டாளி” படத்தின் டிரைலர்..!

வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் “கூட்டாளி” படத்தின் டிரைலர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
எஸ்.கே மதி இயக்கத்தில் புதுமுக நடிகர்கள், நடிகைகள் நடிபில் உருவாகி வரும் படம் “கூட்டாளி”. இந்த படத்தில் கதாநாயகனாக சதீஷ், அவருக்கு ஜோடியாக கிரிஷா நடிகிறார். மேலும் கல்யாண், அருள் தாஸ், கௌசல்யா உதயபானு மகேஸ்வரன், அப்புக்குட்டி, கலைஅரசன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். “கூட்டாளி” படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்தை எஸ்பி பிக்செல்ஸ் சார்பாக எஸ். சுரேஷ் பாபு மற்றும் பி. பெருமாள் சாமி இணைந்து தயாரிக்கிறார்கள். தற்போது “கூட்டாளி” படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.     https://youtu.be/9aEgij8NMXc...
நடிகர் செளந்தரராஜா தமன்னாவை கரம் பிடிக்கிறார்… இன்று திடீர் நிச்சயதார்த்தம்..!

நடிகர் செளந்தரராஜா தமன்னாவை கரம் பிடிக்கிறார்… இன்று திடீர் நிச்சயதார்த்தம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
சுந்தரபாண்டியன் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சௌந்தரராஜா. சுந்தரபாண்டியன் படத்திற்குப்பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, தங்கரதம், தர்மதுரை, ஒரு கனவு போல, திருட்டுப்பயலே 2 உள்பட பல படங்களில் நடித்தார். இப்போது சிலுக்குவார்பட்டி சிங்கம், ஈடிலி , கடைக்குட்டி சிங்கம் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். நடிகராக மட்டுமில்லாது, மனிதநேயம் மிக்கவராகவும் தொடர்ந்து செயல்படுபவர் சௌந்தரராஜா. ஜல்லிக்கட்டு போராட்டம், மரக்கன்றுகள் நடுதல், கருவேல மரங்கள் அழித்தல் என சமூக சேவைகள் தொடர்ந்து செய்து வருபவர். இயக்குநர்கள் சமுத்திரக்கனி, சசிக்குமார், எஸ்.ஆர்.பிரபாகரன், சீனு ராமசாமி, நடிகர்கள் விஜய் சேதுபதி, விஷால், கார்த்தி உள்ளிட்ட பலரின் அன்புக்கு சொந்தக்காரரான சௌந்ததராஜா இப்போது புதுமாப்பிள்ளை. “க்...
‘சீக்ரெட் சூப்பர்ஸ்டார் சீனாவில் முதல் நாளில், ரூ.43 கோடி வசூல்செய்து சாதனை..!

‘சீக்ரெட் சூப்பர்ஸ்டார் சீனாவில் முதல் நாளில், ரூ.43 கோடி வசூல்செய்து சாதனை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
இந்தி நடிகர் அமீர் கான் நடித்த 'டங்கல்', 'பி.கே.' திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்த நிலையில், சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்துள்ள 'சீக்ரெட் சூப்பர்ஸ்டார்' திரைப்படத்திற்கு சீனாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 'டங்கல்' படம் சீனாவில் திரையிடப்பட்ட முதல் நாள் கிடைத்த, வசூலைக் காட்டிலும், 'சீக்ரெட் சூப்பர்ஸ்டார்' வெள்ளிக்கிழமை திரையிடப்பட்ட முதல் நாளில், ரூ.43 கோடி வசூல்செய்து சாதனை படைத்துள்ளது. 'டங்கல்' திரைப்படத்தில் நடித்துள்ள காஷ்மீர் நடிகை ஜயிரா வாசிம் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அமீர் கான் சிறப்பு கதாபாத்திரத்தில் வருகிறார். https://youtu.be/P6jaRsnchro இந்த திரைப்படம் குறித்து திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''அமீர் கான் நடித்து சமீபத்தில் வெளியான 'சீக்ரெட் சூப்பர் ஸ்டார்' திரைப்படம் சீனாவில் வெள்ளி...
தொகுப்பாளர்கள் கிண்டலில் சிக்கிய சூர்யா… கொதித்தெழுந்த ரசிகர்கள்… டிவி ஆபீஸ் முற்றுகை..!

தொகுப்பாளர்கள் கிண்டலில் சிக்கிய சூர்யா… கொதித்தெழுந்த ரசிகர்கள்… டிவி ஆபீஸ் முற்றுகை..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் சூரியா ரசிகர் மன்றத்தினர் சன் டிவி-யை கண்டித்து எம்.ஆர்.சி அலுவலகத்தை  முற்றுகையிட்டனர் சன் மியூசிக் சேனல் சூரியாவை தனிப்பட்ட முறையில் கேலி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   இதையடுத்து, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அனைத்து திரையரங்கங்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து, தொடர்ந்து சூர்யா இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க தயாராகி வருகிறார். மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார், அமிதாப்பச்சன் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் அமிதப்பச்சனுடன் இணைத்து சூர்யா நடிப்பதை கிண்டல் செய்யும் விதத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினிகள் இர...
தாஜ்மகாலை பார்வையிட புதிய கட்டுப்பாடு..!

தாஜ்மகாலை பார்வையிட புதிய கட்டுப்பாடு..!

HOME SLIDER, politics, செய்திகள்
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை பார்வையிடும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு காதலின் சின்னமாக பார்க்கப்படுகிறது. முகாலய மன்னன் ஷாஜகான் தனது காதல் மனைவி மும்தாஜ்க்கு காதல் பரிசாக இதை கட்டினார். இதுதொடர்பாக பல்வேறு கருத்துகள் இருந்தாலும் முகாலய கட்டகலையின் சிறந்த படைப்பாக இது பார்க்கப்படுகிறது. தாஜ்மகாலை காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வருகை புரிகின்றனர். இந்தியாவின் அடையாளங்களுள் ஒன்றான தாஜ்மகாலை பார்வையிடும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. இதன் படி ஒரு நாளைக்கு 40 ஆயிரம் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமே தாஜ்மகாலின் அழகை ரசிக்க அனுமதிக்கப்படுவர். 40 ஆயிரம் டிக்கெட்டுகளுடன் முன்பதிவு ந...
பட்ஜெட்டுக்கு முன் அல்வா கிண்டிய அருண் ஜெட்லி…!

பட்ஜெட்டுக்கு முன் அல்வா கிண்டிய அருண் ஜெட்லி…!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பட்ஜெட்டுக்கு முன் அல்வா கிண்டிய அருண் ஜெட்லி...! ஆண்டுதோறும் மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தயாரிப்பதற்கு முன்னர் அச்சடிக்கும் வேலை தொடங்கும் போது பழங்கால சம்பிரதாயப்படி அல்வா எனும் இனிப்பு பொருள் தயாரித்து, இதுதொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், மத்திய பட்ஜெட்டுக்கு முன் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி முன்னிலையில் இன்று அல்வா தயாரிக்கப்பட்டது.  ...
நிர்வாக சீர்க்கேட்டினால் அரசு கஜானாவை காலி செய்தவர்கள் மக்கள் தலையில் கைவைப்பதா என மு.க.ஸ்டாலின் கண்டனம்

நிர்வாக சீர்க்கேட்டினால் அரசு கஜானாவை காலி செய்தவர்கள் மக்கள் தலையில் கைவைப்பதா என மு.க.ஸ்டாலின் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆடம்பர விழாக்கள், நிர்வாக சீர்க்கேட்டினால் அரசு கஜானாவை காலி செய்தவர்கள் மக்கள் தலையில் கைவைப்பதா என மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை: "ஏழை – எளிய, நடுத்தர மக்களை சோதனைக்கும், வேதனைக்கும் தொடர்ந்து ஆளாக்கி, அடிக்குமேல் அடித்துக் கசக்கிக் கந்தலாக்கி வரும் அதிமுக அரசு அடுத்த தாக்குதலாக, திடீரென்று 3600 கோடி ரூபாய்க்கு மேல் பேருந்துக் கட்டணங்களை மிகக் கடுமையாக உயர்த்தியிருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. டீசல் விலை உயர்வு மிக அதிகமாக இருந்த 2006 முதல் 2011 வரையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அடித்தட்டு மக்களும், நடுத்தர மக்களும், முதியவர்களும், மாணவர்களும் பயன்படுத்தும் அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாமல், ஐந்தாண்டு காலம் ஆட்சி செய்தவர் கருணாநிதி என்பதை இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்...
அம்மா இருசக்கர வாகன திட்டத்துக்கு 22-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

அம்மா இருசக்கர வாகன திட்டத்துக்கு 22-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழக அரசு சார்பில் அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனம் பெறுவதற்கான மானியம் அளிக்கப்பட உள்ளது. அதன்படி ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் ஆகியவற்றில் எதுகுறைவோ அது வழங்கப்படும். வாகனத்தை பெற ரிசர்வ் வங்கியால் அதிகாரம் அளிக்கப்பட்ட வங்கிகளிடம் இருந்து கடன் பெறலாம். 125 சி.சி. திறன் வரையிலான வாகனத்தை மட்டுமே வாங்க வேண்டும். பணிபுரியும் பெண்கள், அமைப்பு மற்றும் அமைப்பு சாரா நிறுவனங்களில் பதிவு பெற்ற பெண்கள், வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுவோர், சுயமாக தொழில் செய்யும் பெண்கள், அரசு உதவிபெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசுத்திட்டங்களில் பணியாற்றும் பெண்கள், மாவட்ட கற்றல் மையம், கிராம வறுமை ஒழிப்பு குழுக்கள் ஆகியவற்றில் பணியாற்றும் பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனங்களை பெற விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 40 வயது வரையில் ஓட்டுனர் உரிமம...
சர்ச்சையில் சிக்குமா விஜய்சேதுபதியின் சீதக்காதி பட தலைப்பு..!

சர்ச்சையில் சிக்குமா விஜய்சேதுபதியின் சீதக்காதி பட தலைப்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் புதிய படத்திற்கு சீதக்காதி என்று பெயரிடப் பட்டுள்ளது. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இந்த படத்தினை இயக்குகிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சீதக்காதி திரைப்படத்தின் தலைப்பு தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சீதக்காதி என்ற பெயர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பெரும்வள்ளலாக வாழ்ந்து மறைந்த வள்ளல் சீதக்காதி பெயரால் உள்ளதால் அவரின் வாழ்க்கை தொடர்பான திரைப்படம் என்ற வதந்தி பரவி வருகிறது. குறிப்பாக கீழக்கரை பகுதியில் சீதக்காதி திரைப்பட தலைப்பு குறித்த சர்ச்சை அதிகஅளவில் எழுந்துள்ளது. இந்தநிலையில் இதுகுறித்து கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் முகைதீன் இப்ராகிம் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நடிகர் விஜய்சேதுபதி நடிக்க சீதக்காதி என்ற பெயரிடப்பட்டுள்ள திரைப்படம் படப்பிடிப்...
அமித்ஷா தலை மேல் தொங்கும் கத்தியாக போலி என்கவுண்ட்டர் வழக்கு…  மும்பை ஐகோர்ட்டில் புது வழக்கு..!

அமித்ஷா தலை மேல் தொங்கும் கத்தியாக போலி என்கவுண்ட்டர் வழக்கு… மும்பை ஐகோர்ட்டில் புது வழக்கு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
குஜராத்தில் 2005-ம் ஆண்டு சொராபுதீன் ஷேக், போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டது தொடர்பாக அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி, பாரதீய ஜனதா தலைவர் அமித் ஷா உள்ளிட்ட 23 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் இருந்து அமித் ஷாவை சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு விடுவித்து விட்டது. இதேபோன்று, குஜராத், ராஜஸ்தான் போலீஸ் அதிகாரிகளும் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் அமித் ஷாவை சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு விடுவித்ததை எதிர்த்து சி.பி.ஐ. மேல்முறையீடு செய்யவில்லை. இதன் காரணமாக சி.பி.ஐ. மீது மும்பை ஐகோர்ட்டில் மும்பை வக்கீல்கள் சங்கம் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்து உள்ளது. அதில், “இந்த வழக்கில் விசாரணை நடத்திய சி.பி.ஐ. முன்னணி புலனாய்வு அமைப்பு ஆகும். அப்படி இருக்கிறபோது, சட்டத்தின் ஆட்சியை தனது செயல்கள் மூலம் க...