மாதம்பட்டி கோல்டன் லீஃப் 2023 விருதுகள்
*மாதம்பட்டி கோல்டன் லீஃப் 2023 விருதுகள்*
உணவுத்துறையில் சாதனை படைத்தவர்களைக் கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு 'மாதம்பட்டி கோல்டன் லீஃப் 2023' விருதுகள் வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை நடிகரும், உணவுத்துறையில் சாதனை படைத்து வருபவருமான மாதம்பட்டி ரங்கராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
உலகளவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் தொழில்துறையில் உணவு துறையும் ஒன்று. சுவையான உணவு தயாரித்தல்... சுடச்சுட பரிமாறுதல்... குறைவான நேரத்தில் அதிகமான நபர்களுக்கு தரமான உணவை நவீன தொழில்நுட்பங்களின் ஊடாக தயாரித்து வழங்குதல்.. என உணவுத்துறை தனித்தனி பிரிவாக பிரிந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. மெத்த படித்த தனவந்தர்கள் முதல் படிக்காத பாமரர்கள் வரையில் பசி என்பது இயல்பான ஒன்று. மக்களின் பசியை போக்குவதற்காக செயல்படும் இந்த உணவுத் துறையில் ஏராளமானவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
...









