காமா சோமா என வந்திருக்கும் கன்னா பின்னா படம்..!
நாயகி அஞ்சலி ராவ் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு இருந்து வருகிறார். இவரைப்போலவே சினிமாவில் கேமரா மேன், இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்ற கனவோடு அவரது நண்பர்களுடம் உடனிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு படத்தை எடுக்கவேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், நாயகி ஒரு தயாரிப்பாளரை பார்த்து கதை சொல்வதற்காக செல்கிறார். அப்போது, அந்த தயாரிப்பாளர், ஆக்ஷன், செண்டிமெண்ட் இல்லாமல் முழுக்க முழுக்க காமெடியான ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள், படம் பண்ணலாம் என்று கேட்கிறார். நாயகியும் தன்னிடம் ‘கன்னா பின்னா’ என்ற தலைப்பில் ஒரு காமெடி இருப்பதாக அவரிடம் கூறுகிறார்.
தலைப்பிலேயே மயங்கிப்போன தயாரிப்பாளர் மேற்கொண்டு அவரிடம் எந்த கதையும் கேட்காமல், அட்வான்ஸ் தொகையாக ரூ.5 லட்சத்தை கொடுத்துவிட்டு, அவரை ஒப்பந்தம் செய்கிறார். வீட்டுக்கு திரும்பிய நாயகி, தனது ந...
