Author: Kodanki
அதிமுக தோன்றிய நாள்… ஒரு பிளாஷ்பேக் – ஆந்தையார்
????தி.மு.க.வில் இருந்து எம். ஜி.ஆர். நீக்கப்பட்ட நிகழ்ச்சி, தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை நீக்கியதை எதிர்த்து, கோர்ட்டில் எம். ஜி.ஆர். வழக்குத் தொடருவாரா? அல்லது, "நான்தான் உண்மையான தி.மு.க" என்று அறிவிப்பாரா? என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், எம்.ஜி.ஆர். அப்படி எல்லாம் செய்யவில்லை.
"அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற பெயரில் புதுக்கட்சி தொடங்கினார். 1972 இதே அக்டோபர் 18ந் தேதி இக்கட்சி உதயமாயிற்று.
பாராளுமன்ற உறுப்பினர்கள் கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி.சோமசுந்தரம், சட்டசபை உறுப்பினர்கள் காளிமுத்து, முனுஆதி, எஸ்.எம்.துரைராஜ், மண்டல மக்கள் தொடர்பு அதிகாரி கவிஞர் முத்துராமலிங்கம், மொழி துறை அலுவலர் கவிஞர் நா.காமராசன் ஆகியோர் ஆரம்ப கட்டத்திலேயே அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்.
சில நாட்களுக்குப்பின் நாஞ்சில் மனோகரன் இணைந்தார். கட்சியின் கொடி என்ன என்பதை எம்.ஜி.ஆர். அறிவித்த...
கார்த்தி வெளியிட்ட கர்ஜனை வீடியோ போஸ்டர்..!
செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பாக ஜோன்ஸ் தயாரித்து, சுந்தர் பாலு இயக்கத்தில் த்ரிஷா நடித்து வெளிவர இருக்கும் படம் 'கர்ஜனை'
காதலிக்க மறுத்த பெண்ணை, தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கிறார்கள். இதன் பின்னணியில் நடக்கும் கதை ஆக்ஷன் திரில்லராக படமாக்கப்பட்டுள்ளது.
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் த்ரிஷா நடித்துள்ளார்.
இப்படத்தின் மோஷன் போஸ்டரை 'பருத்தி வீரன்' புகழ் கார்த்தி இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டார்.
https://youtu.be/dP0aIZcBRu0
இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
Motion Poster Link : https://www.youtube.com/watch?v=dP0aIZcBRu0
...
அவள் பட பாடல்…!
https://www.youtube.com/watch?v=4uVdVkWnwlo
மெர்சல் படத்தை வரவேற்று டீசர் வெளியிட்ட விசிறி படக்குழு..!
“மெர்சல்” படத்தை இனிதே வரவேற்கிறது “விசிறி” படக்குழு.
தலைமுறை தலைமுறையாக நடைபெறும் ரசிகர்களின் மோதல்.
ஆம்!
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் “தியாகராஜ பாகவதர் – பி.யூ.சின்னப்பா” இவர்களின் ரசிகர்களிடம் ஏற்பட்ட மோதல்…
“எம்.ஜி.ஆர். – சிவாஜி” , “ரஜினி – கமல்” என்று தொடர்ந்தது.
இன்றைய சூப்பர் ஸ்டார்களாகிய “தல – தளபதி” ரசிர்களின் மோதலை மையக்கருவாக கொண்டு விரைவில் வெளிவரவிருக்கும் படம் “விசிறி”
“J Sa Productions” மூலமாக A.ஜமால் சாகிப்-A.ஜாபர் சாதிக் பெருமையுடன் வழங்க…
நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை கருவாக கொண்டு வெளிவந்த “வெண்நிலா வீடு” திரைப்படத்தின் இயக்குனர் “வெற்றி மகாலிங்கம்”, “மகாலிங்கம் புரொடக்ஷன்ஸ்” சார்பில் தயாரித்து இயக்கியிருக்கும் படம் “விசிறி”
படத்தை வெளியிட தயாராக இருக்கும் படக்குழு... உலகத்தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் “இளைய தளப...
ரஜினி-ஷங்கர் கூட்டணியின் 2.0 பட ஆடியோ 27ம் தேதி துபாயில் பிரமாண்டமாக வெளியாகிறது..!
ரஜினி-ஷங்கர் கூட்டணியின் 2.0 பட ஆடியோ 27ம் தேதி துபாயில் பிரமாண்டமாக வெளியாகிறது..!
ஷங்கர் இயக்கத்தில் மெஹா பட்ஜெட்டில் உருவாகி வரும் ரஜினியின் 2.0 படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதன் ஆடியோ ரிலீஸ் துபாயில் பிரமாண்டமான கலை நிகழ்ச்சியில் வெளியிடப்படுகிறது. வரும் 27ம் தேதி இந்த விழா துபாயில் நடக்கிறது.
தமிழ், இந்தி முன்னணி நட்சத்திரங்கள் பலர் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
...





