புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

கம்பளா எருமை மாடு ஓட்டப் பந்தயத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

கம்பளா எருமை மாடு ஓட்டப் பந்தயத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
கர்நாடக மாநிலத்தில் கம்பளா எனப்படும் எருமை மாடு ஓட்டப் பந்தயத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று பீட்டா அமைப்பு தாக்கல் செய்த மனுவில் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. கர்நாடக மாநிலத்தின் கடற்கரை மாவட்டங்களான உடுப்பி, தக் ஷின கன்னடா பகுதிகளில் கம்பளா ஓட்டப்போட்டி பாரம்பரியமாக நடந்து வருகிறது. சேற்று வயல்களில் எருமை மாடுகளைப் பூட்டி விவசாயிகள் ஓடவிடுவார்கள். நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை அந்த பகுதிகளில் இந்த கம்பளா போட்டி நடக்கும். இந்த போட்டி நடந்தால், சிறப்பான விளைச்சல் இருக்கும்என்றும், விவசாயிகளின் விளையாட்டாகவும் இந்த போட்டி கருதப்படுகிறது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போல இந்த போட்டி அங்கு பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த போட்டியில் மாடுகள் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டி இந்த போட்டிக்கு நீதிமன்றத்தில் ...
தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படதிறப்பு விழா நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது.  இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் படம் இன்று திறக்கப்பட்டது.  இதற்காக நடந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் சபாநாயகர் தனபால் திறந்து வைத்துள்ளார். இந்த உருவப்படம் 7 அடி உயரம் மற்றும் 5 அடி அகலம் கொண்டது.  பச்சை நிற சேலையுடன் அவர் நிற்பது போன்று உருவப்படம் வரையப்பட்டு உள்ளது.  சட்டப்பேரவையில் 11வது தலைவராக ஜெயலலிதாவின் படம் வைக்கப்பட்டு உள்ளது. திருவள்ளுவர், காந்தி, ராஜாஜி, காமராஜர், பெரியார், அண்ணா, காயிதே மில்லத், முத்துராமலிங்க தேவர், எம்.ஜி.ஆர். மற்றும் அம்பேத்கர் ஆகியோரது உருவப்படங்கள் அவ...
வதந்திகளில் உண்மையில்லை – நடிகை ரேகா விளக்கம்

வதந்திகளில் உண்மையில்லை – நடிகை ரேகா விளக்கம்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  கடலோரக் கவிதைகள், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, புரியாத புதிர் போன்ற படங்களில் நாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரேகா. இவர் தற்போது ஜெயப்பிரதா, பார்த்திபன், ரேவதி, நாசர், அனுஹாசன் ஆகியோருடன் இணைந்து `கேணி' திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இவரது மகள் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவிருப்பதாக சமீபத்தில் சமூக வலைதளங்களிலும், சில இணையதள பக்கங்களிலும் வதந்தி கசிய விடப்பட்டது. இதனை மறுத்து நடிகை ரேகா இதுகுறித்து விளக்கமளித்திருக்கிறார். அதில் "மதிப்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கு, என் மகள் சினிமாவில் நடிக்கவிருப்பதாக சமூக வலைதளங்களிலும், சில இணையதள பக்கங்களிலும் தவறான செய்திகள் பரப்பப்படுவதாக அறிகிறேன். அந்த செய்தியில் எள்ளளவும் உண்மையில்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், என் மகள் உயர்கல்வி படிப்பதற்காக ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதையும், சினிமாவில் நடிப்பதற்கான ஆர்வ...
ஷாலினியுடன் தாய்லாந்து பறக்கும் ஜீவா

ஷாலினியுடன் தாய்லாந்து பறக்கும் ஜீவா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி வரும் படம் ‘கொரில்லா’. இதில் நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சமீபத்தில் பாண்டிச்சேரியில் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. அடுத்ததாக தாய்லாந்தில் ஒர மாதம் வரை படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டிருக்கிறது. அதற்காக ஜீவா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட படக்குழுவினர் விரைவில் தாய்லாந்து செல்லவிருக்கின்றனர். அங்கு சுமார் ஒரு மாதம் வரை படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் முழு படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டிருக்கிறது. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி, இயக்குகிறார் டான் சாண்டி. ‘விக்ரம் வேதா’ புகழ் சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார்....
அமெரிக்காவில் தமிழ் பாரம்பரிய உடையான வேட்டியில் அசத்திய கமல்ஹாசன்

அமெரிக்காவில் தமிழ் பாரம்பரிய உடையான வேட்டியில் அசத்திய கமல்ஹாசன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  அமெரிக்கா சென்றுள்ள கமல்ஹாசன் அங்கு ஹார்வர்டு பிசினஸ் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி கட்டி வந்து அசத்தினார். அமெரிக்க பயணம் என்றாலே ‘கோட்-சூட்’ அணிந்து செல்பவர்கள் மத்தியில், வேட்டியில் கமல்ஹாசனை பார்த்த அமெரிக்க வாழ் தமிழர்களும், அமெரிக்கர்களும் வியந்து பாராட்டினார்கள். வேட்டி கட்டி மிடுக்காக கமல்ஹாசன் நடந்து வந்த போது பார்வையாளர்கள் கரகோ‌ஷம் எழுப்பி வரவேற்றனர். பின்னர் நிருபர்கள் அவரை பேட்டி கண்டனர். ரஜினியுடன் கூட்டணி சேருவீர்களா? என்று கேட்டதற்கு கமல்ஹாசன் பதில் அளிக்கையில் அரசியலில் ரஜினியுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு இல்லை என்று சூசகமாக தெரிவித்தார். நானும் ரஜினிகாந்தும் சிறந்த நண்பர்கள். ஆனால் நட்பு வேறு. அரசியல் என்பது வேறு. எங்களுடைய நோக்கங்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதா...
தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் டீசர்..!

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் டீசர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் படத்தின் மேக்கிங் மற்றும் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. https://youtu.be/diJ5wen9-y8 நடிகர் தனுஷ், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பஃகீர் (The Extraordinary Journey of the Fakir) என்ற ஹாலிவுட் படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. அப்படத்தின் தயாரிப்பில் நீண்ட நாட்கள் ஆனதால், அப்படத்தை இயக்க இருந்த டைரக்டர் படத்திலிருந்து விலகினார். இதனால் அப்படம் வெளியாவதில் சிக்கல் நீடித்தது. இந்த சிக்கல்கள் தீர்ந்த நிலையில், இப்போது இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஹாலிவுட் டைரக்டர் கென் ஸ்காட் இயக்கியுள்ள இப்படத்தில் பெர்னிஸ் பேஜா, பர்காட் அப்டி, எரின் மொரியார்ட்டி, அபெல் ஜாப்ரி போன்ற ஹாலிவுட் நடிகர்கள் நடித்துள்ளனர்....
2017 ஆம் ஆண்டில் மட்டும் 700 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மும்பை பிளாட்பாரங்களில் மீட்கப்பட்டுள்ளனர்

2017 ஆம் ஆண்டில் மட்டும் 700 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மும்பை பிளாட்பாரங்களில் மீட்கப்பட்டுள்ளனர்

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்தியாவின் மிகப்பெரிய நகரமான மும்பையில் கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டும் 700 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மும்பை பிளாட்பாரங்களில் மீட்கப்பட்டுள்ளனர்.வீட்டில் பெற்றோர்கள் திட்டிய காரணத்தினாலயே தாங்கள் வீட்டை விட்டு வெளியேறியதாய் பெரும்பாலான குழந்தைகள் தெரிவித்திருந்தனர். இது குறித்து ரயில்வே பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ”706 குழந்தைகளில்,பெரும்பாலான குழந்தைகள் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.அவர்கள் மும்பை நகரின் பல்வேறு ரயில்வே பிளாட்பாரங்களிலும்,புறநகர் பகுதிகளிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.இதில் பெரும்பாலானோர் 13 முதல் 18 வயது உடையவர்கள்.மேலும் அவர்கள் உத்திரப்பிரதேசம்,ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.இதில் மும்பை மத்திய ரயில் நிலையம் பகுதிகளில் மட்டும் அதிகபட்சமாக 129 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்”என தெரிவித்தனர். மற்றொரு ரயில்வே அதிகாரி கூறுகையில்,இங்...
71 பயணிகளுடன் சென்ற ரஷிய விமானம் மாஸ்கோ அருகே நொறுங்கியது

71 பயணிகளுடன் சென்ற ரஷிய விமானம் மாஸ்கோ அருகே நொறுங்கியது

HOME SLIDER, NEWS, செய்திகள்
ரஷியாவில் உள்ள டொமொடெடொவொ விமான நிலையத்தில் இருந்து 65 பயணிகள் மற்றும் 6 விமான குழுவினருடன் புறப்பட்ட விமானம் மாஸ்கோ அருகே விழுந்து நொறுங்கியது. ரஷியாவில் உள்ள டொமொடெடொவொ விமான நிலையத்தில் இருந்து 65 பயணிகள் மற்றும் 6 விமான குழுவினருடன் புறப்பட்ட விமானம் மாஸ்கோ அருகே விழுந்து நொறுங்கியது. ரஷியா தலைநகர் மாஸ்கோவில் டொமொடெடொவொ விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து ஆர்ஸ்க் நகருக்கு இன்று சரடோவ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு உள்ளூர் போக்குவரத்து விமானம் 65 பயணிகள் மற்றும் 6 விமான குழுவினருடன் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் ரேடாரில் இருந்து விமானம் காணமல் போயுள்ளது. இந்நிலையில், மாஸ்கோ பகுதியில் உள்ள அர்குனோவோ கிராமத்தில் அந்த விமானம் விழுந்து நொருங்கியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ள...
19 இடங்களில் வெட்டு வாங்கிய நாகேஷ் திரையரங்கம்

19 இடங்களில் வெட்டு வாங்கிய நாகேஷ் திரையரங்கம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
‘நெடுஞ்சாலை’ புகழ் ஆரியும், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,’ ‘இனிமே இப்படித்தான்’ ஆகிய படங்களில் நடித்த ஆஷ்னா சவேரியும், ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்தில் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். ஒரே ‘ஷாட்’டில் எடுக்கப்பட்ட ‘அகடம்’ படத்தை இயக்கி, ‘கின்னஸ்’ சாதனை படைத்த இசாக் டைரக்டு செய்துள்ள படம், இது. ‘நாகேஷ் திரையரங்கம்’ பற்றி இசாக் கூறுகிறார்:- “இந்த படத்தில், ஆரி கதாநாயகனாக நடித்து இருக்கிறார். கதாநாயகி, ஆஷ்னா சவேரி. இவர்களுடன் காளி வெங்கட், மும்பை மாடல் மாசூம் சங்கர், மனோபாலா, சித்ராலட்சுமணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களில் லதாவும், சித்தாராவும் நடித்து இருக்கிறார்கள். நவுஷாத் ஒளிப்பதிவில், ஸ்ரீ இசையில் படம் உருவாகி இருக்கிறது. ட்ரான்ஸ் இந்தியா மீடியா நிறுவனம் சார்பில் ராஜேந்திர எம்.ராஜன் தயாரித்துள்ளார். தமிழ் சினிமாவில் இன்று வரை எண்ணற்ற திகில் படங்களும், பேய் ப...